Sunday, January 17, 2021

இலங்கைச் சேர்ந்த சுமார் 70, 000 புலம்பெயர் பணியாளர்கள் 137 நாடுகளில் பரிதவிப்பு !

 



கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கையைச் சேர்ந்த சுமார் 70 ஆயிரம் புலம்பெயர் பணியாளர்கள் 137 நாடுகளில் பல்வேறு இன்னல்களுக்குள்ளாகி மீண்டும் இலங்கைக்கு வரும் எதிர்பார்ப்பில் பரிதவித்து நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் பேசிய தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதுவரை 61,750 இலங்கையர்களை மீண்டும் தாயகத்திற்கு அழைத்துவந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.மத்திய கிழக்கில் இருந்து மாத்திரம் 31 102 பேர் அழைத்துவரப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறியிருந்தார்.

89 புலம்பெயர் பணியாளர்கள் இதுவரை வெளிநாடுகளில் கொரோனாவால் மரணமுற்றுள்ளமை  குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment