பிழைப்புவாத வங்குரோத்து அரசியலில் ஈடுபடவேண்டாம் என எதிர்கட்சியினரிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்தோடு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையையும் ஜனாதிபதி விமர்சித்துள்ளார்.
' ஆம் நான் நந்தசேன கோட்டாபய . அது ஒரு நல்ல பெயர். என்னுடைய குணவியல்பிற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. சில பௌத்த குருக்களோ ஜனாதிபதி கோட்டாபயபோன்று அன்றி என்னை முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ போன்று இருக்குமாறு கூறுகின்றனர். நான் இன்னமும் சற்றே இறுக்கமாக இருக்க வேண்டும் என மக்களும் கூட கேட்கின்றனர். நான் இரண்டில் ஏனேனும் குணவியல்பு கொண்ட பாத்திரமாக மாறத்தயாராக உள்ளேன்.'- என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment