150 சட்டத்தரணிகளை பொலிஸ் பரிசோதகர்களாக பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக்கொள்ளும் நீதி அமைச்சர் அலி சப்றியின் யோசனை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கரிசனை வெளியிட்டுள்ளது.
இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பாக இந்த விடயம் குறித்து கவனமாக பரிசீலிக்க வேண்டியுள்ளதாக அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த யோசனை பொதுவெளியில் பகிரங்கப்படுத்தப்படும் வரையில் தாம் இது தொடர்பாக அறிந்திருக்கவில்லை என நீதி அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தலைவர் காலிங்க இந்திரதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment