யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நிர்மூலமாக்கப்பட்டமை தொடர்பாக பொதுப் பாதுகாப்பிற்கு பொறுப்பான அமைச்சரும் தீவிர சிங்கள பௌத்த தேசியவாதியுமான முன்னாள் கரையோர காவற்படைத்தளபதி ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கருத்து வெளியிட்டுள்ளர்
"யாழ் பல்கலைக்கழகமானது ஒரு சமூகத்திற்கு மாத்திரம் சொந்தமான சொத்தோ களமோ அல்ல. அது சட்டத்தை மதிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் உரித்தானது. பொதுமக்களை நினைவுகூருகின்றோம் என்ற போர்வையில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் இறந்த பயங்கரவாதிகளை யாரும் நினைவுகூரவோ ஒற்றையின்மையை ஏற்படுத்தவோ இடமளிக்கப்படமாட்டாது."என தமது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment