தேர்தல் முடிவுகளுக்கு எதிராக தொடர்ந்த வழக்குகள் உட்பட ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்ட நகர்வுகள் தோல்விகண்ட நிலையில் இறுதி அஸ்திரமாக நம்பியிருப்பது உப ஜனாதிபதி மைக் பென்ஸைத்தான்.
அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தெரிவாகும் நம்பிக்கையை தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்னமும் கொண்டிருக்கின்றார் என்பது பலருக்கும் ஆச்சரியமளிக்கலாம். ஆனால் அதற்கான வாய்ப்புக்கள் முற்றுமாக இல்லாமல் போகவில்லை என்பது நிதர்சனம்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 3ம் திகதி நடைபெற்றது . இழுபறிகளுக்கு மத்தியில் நவம்பர் 7ம்திகதியன்று ஜோ பைடன் வெற்றிபெற்றதாக ஊடகங்கள் அறிவித்தன. அதன்பின்னர் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு இரண்டு படி நிலைகளைத் தாண்டவேண்டியிருந்தது. அதில் முதல் படியாக தேர்தல் மன்றக்கல்லூரி வெற்றியை உறுதிப்படுத்துவது . அது கடந்த டிசம்பர் 14ம்திகதி இடம்பெற்றது . தற்போது இரண்டாவதும் கடைசியுமான படியாக அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரஸ் தேர்தல் மன்றக்கல்லூரியால் உறுதிப்படுத்தப்பட்டதை மீளுதிப்படுத்தவேண்டும்.
தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் டிரம்ப்
தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் டிரம்ப் இருப்பினும்இ இத்தேர்தலில் மிகப் பெரியளவில் மோசடி நடைபெற்றுள்ளதால் ஜோ பைடனின் வெற்றியை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகிறார்.தேர்தல் முடிவுகளுக்கு எதிராக தொடர்ந்த வழக்குகள் உட்பட ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்ட நகர்வுகள் தோல்விகண்டன.
எம்பிகள் திட்டம்
அமெரிக்கத் தேர்தல் விதிமுறைகளின்படி ஒவ்வொரு மாநில அரசும் யார் வெற்றி பெற்றார்கள் என்பது குறித்து சான்றிதழை அந்நாட்டு நாடாளுமன்றத்திடம் அளிக்கும். இன்று (ஜனவரி 6) அந்த சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டுஇ அதன்படி தேர்தல் உறுப்பினர்கள் ஒன்றுகூடி புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்த நிகழ்வில்தான் டிரம்ப் ஆதரவு எம்பிகள் பைடனின் வெற்றிக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்கவுள்ளனர். இருப்பினும்இ நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் இதனால் எந்த தாக்கமும் இருக்காது என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருத்துவெளியிட்டுள்ளனர்..
ஜோ பைடனின் வெற்றியை செல்லுபடியாக்கி தமது வெற்றியை உறுதிசெய்வதற்காக இதுவரை மேற்கொண்ட திட்டங்கள் தோல்விகண்டுவிட்ட நிலையில், இறுதி அஸ்திரமாக நம்பியிருப்பது உப ஜனாதிபதி மைக் பென்ஸைத்தான்.
ஜனாதிபதி டிரம்பின் பார்வை உப ஜனாதிபதி மைக் பென்ஸை நோக்கித் திரும்பியுள்ளது. ஏனென்றால் இன்று கூடும் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் சான்றிதழ்களைத் உப ஜனாதிபதி மைக் பென்ஸ் தான் உறுதி செய்வார். இந்த இடத்தில் ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, ஜனநாயக கட்சி வென்ற சில மாநிலங்களைச் சேர்ந்த தேர்தல் மன்றக்கல்லுரி உறுப்பினர்களை நீக்க வேண்டும் என்று டிரம்ப் ,மைக் பென்ஸை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி டிரம்ப் கூறுகையில் 'இந்த விஷயத்தில் செயல்படத் உப ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது என்பதில் நானும் பென்ஸும் உறுதியாக உள்ளோம். அமெரிக்காவின் அரசியலமைப்பின் கீழ் உப ஜனாதிபதிக்கு இதுபோல பல அதிகாரங்கள் உள்ளன. மாநில தேர்தல் முடிவுகளை ரத்து செய்யவும் செல்லாது என்றும் அறிவிக்கவும் அவரால் முடியும். அவர் இதைச் செய்யவில்லை என்றால்இ எனக்குப் பிடிக்காத நபராக அவர் ஆகிவிடுவார். டிரம்ப் இவ்வாறு தொடர்ந்து வலியுறுத்தி வருவதுஇ பைக் பென்ஸ் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது.
இன்று என்ன செய்யப்போகிறார் பென்ஸ்?
இருப்பினும், டிரம்பின் வலியுறுத்தல்களுக்கு மைக் பென்ஸ் கட்டுப்பட மாட்டார் என்றே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியுள்ளனர். அவர் ஜனாதிபதிக்கு ஆதரவாக இருப்பார் என்றாலும்கூட இறுதியில் அரசியலமைப்பின்படியே அவர் செயல்படுவார் என்று உப ஜனாதிபதி அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர் கூறியுள்ளார். 'இது வெறும் சம்பிரதாய நடைமுறை. மாநில அரசுகள் அனுப்பியுள்ள தேர்தல் முடிவு சான்றிதழ்களை உப ஜனாதிபதி கவரில் இருந்து எடுத்துப் படிக்க வேண்டும் அவ்வளவுதான்' என்றார்.
No comments:
Post a Comment