கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டு நிறுவனமொன்றிற்கு கையளிக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜேவிபி கட்சியினர் கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகில் ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரே நேற்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொதுமக்களின் சொத்துக்களை விற்கும் அரசாங்கத்தின் முயற்சியை வன்மையாக கண்டிப்பதாக பதாதைகளை ஏந்தியவண்ணம் கோஷங்களை எழுப்பினர்.
"துறைமுக முனையம் அதானி குழுமத்திற்கு தரகுப்பணம் சட்டைப்பைக்குள் ","கிழக்கு முனையத்தில் இருந்து கையை எடு "மக்களின் பொதுச் சொத்துக்ளை விற்காதே" போன்ற வாசகங்கள் பதாதைகளில் எழுதப்பட்டிருந்தது.
கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் உள்ளடங்கலாக இந்தியாவின் விருப்பிற்குரிய திட்டங்கள் தொடர்பான எதிர்வினைகளை சீனா கையாள்வதாக இந்தியா கொண்டுள்ள ஆழ்ந்த கரிசனைகளின் காரணமாகவே இலங்கைக்கான இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் அண்மைய விஜயம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment