இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ் . ஜெயசங்கர் இலங்கைக்கு வந்து சென்று கையோடு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உயர் மட்டத் தூதுக்குழுவினருடான பிரதமர் இம்ரான் கானின் விஜயம் முன்னதாக அடுத்துவரும் சில நாட்களில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதும் தற்போது சில வாரங்களுக்கு அது பிற்போடப்பட்டுள்ளதாக உயர் நிலை வெளிவிவகார அமைச்சு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
ருந்தபோதும் விஜயத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment