Thursday, January 14, 2021

ஃபேஸ்புக் பதிவிற்காக கைதுசெய்யப்பட்ட நபர் சொகுசாக வாழ்வது எப்படி? சிஜடியினர் எழுப்பிய சந்தேகம்

 



இனங்களுக்கு இடையே பதற்றத்தை தூண்டும் வகையிலான பதிவுகளை தனது ஃபேஸ்புக் கணக்குகளினூடாக  இடுவதான குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதுசெய்யப்பட்ட வர்த்தகர் ஃபவாஸ் முஹமட் நிஸார் இம்மாதம் ஜனவரி 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

குற்றப்புலனாய்வுத்திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. 

இனங்களுக்கிடையே பதற்றத்தை தூண்டும் வகையிலான பதிவுகளையும் பௌத்த தேரர்களையும் ஏனைய தனி நபர்களையும்  தரக்குறைவான வகையில் விமர்சிக்கும் உள்ளடக்கங்களையும் தனிப்பட்ட ஃபேஸ்புக்கணக்கில் குறித்த வர்த்தகர் பதிவிட்டிருந்தாக சிஐடியினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். 

International Covenant on Civil and Political Rights (ICCPR) Act எனப்படும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயத்தின் கீழ் சந்தேகநபர் குற்றமிழைத்திருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்திருந்தனர். 

பல பிஸினஸ்கள் தோல்விகண்ட நிலையிலும்  சந்தேகநபர் சொகுசாக வாழ்வதாக  நீதிவானிடம் சுட்டிக்காட்டிய சிஐடியினர்   தனது சொகுசு வாழ்விற்காக சட்டவிரோதமான முறையிலே அவர் பணத்தை சம்பாதித்தாரா என்பது தொடர்பாக ஆராய்வதற்காக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கொழும்பு மஜிஸ்ரேட் நீதிவானிடம் சுட்டிக்காட்டினர். 

சிஜடியினர் முன்வைத்த விடயங்களை கவனத்தில் எடுத்த கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்ற பிரதம நீதவான் மொஹமட்மிஹால் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பணித்தார்.

No comments:

Post a Comment