இலங்கையில் கடும்போக்குவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து ரஷ்ய தூதுவர் தம்முடன் கலந்துரையாடியதாக மக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கூறியுள்ளார்.
நாட்டில் கடும்போக்குவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலனாய்வு தகவல்களை பறிமாற்றம் செய்துஇ கடும்போக்குவாதம் கொண்ட நபர்களை கைது செய்து உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment