Tuesday, January 5, 2021

1370 கோடி பணத்தை சட்டவிரோதமாக பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் ETI நிறுவன பணிப்பாளர்கள் மூவர் கைது



ETI நிதி நிறுவன வைப்பீடு மோசடி தொடர்பில் ஸ்வர்ணமஹால் மற்றும்  CID நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் மூவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (ETI) கைது செய்யப்பட்டுள்ளனர்.

13.7 பில்லியன்(1370 கோடி) பணத்தை சட்டவிரோதமாக பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட நிதி முறைகேடு தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன உறுதிப்படுத்தினார்.

அத்துடன் அனுமதியற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டமை தொடர்பில் ஸ்வர்ண மஹால் நகையகத்தின் பணிப்பாளருக்கு எதிராக சட்ட மா அதிபரினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு இணங்க இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

ETI நிதி நிறுவனம் 6,480 மில்லியன் வைப்பு பணத்துடன் இரகசிய கணக்குகளை சட்டவிரோதமாக பேணியுள்ளதுடன் ஸ்வர்ணமஹால் நகையகம் மத்திய வங்கியின் ஒப்புதல் மற்றும் பதிவின்றி 7.2 பில்லியன் பண வைப்புகளை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

குறித்த மோசடி தொடர்பில் அதன் முன்னாள் பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்கஇ நாலக எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க, தீபா அஞ்சலி எதிரிசிங்க ஆகிய நால்வரையும் கைது செய்யுமாறு, CIDயினருக்கு சட்ட மாஅதிபர் ஆலோசனை வழங்கியதைத் தொடர்ந்து, குறித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை நாளையதினம் (06) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை CIDயினர் மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment