Wednesday, September 2, 2020

ஜனநாயகத்தை உறுதிப்படுத்த 19வது திருத்தத்தில் பாதுகாக்கப்படவேண்டிய முக்கிய அம்சங்கள் யாவை?

 



அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் விரைந்து முன்னெடுத்துவரும் நிலையில் நாட்டின் ஜனநாயக இருப்பிற்கு 19வது திருத்தத்திலுள்ள முக்கிய சரத்துக்கள்  சில கட்டாயமாக  புதிய திருத்தத்தில் உள்வாங்கப்படுவது அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 




19வது திருத்தத்தை வரைவதில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்கிரமரத்னவுடன் முக்கிய பங்குவகித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்   தமது பேஸ்புக்கில் 19வது திருத்தத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியமான ஜனநாயகக் கூறுகள் தொடர்பாக பதிவிட்டுள்ளார்.


இதேவேளை 20ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபிற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற வேண்டும் என சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா இன்று  தெரிவித்துள்ளார்.

எனினும் இதற்கு பொதுமக்களின் அபிப்பிராயத்தை பெற வேண்டிய அவசியம் இல்லை எனவும் சட்ட மா அதிபர் பரிந்துரைத்துள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

நீதி அமைச்சின் செயலாளருக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment