Saturday, September 5, 2020

2020 முதல் ஆறு மாதத்தில் நூறாயிரம் கோடி ரூபாவால் இலங்கையின் மொத்தக்கடன் அதிகரிப்பு

 



இந்த 2020 ஆண்டின் முதல் ஆறுமாத காலப்பகுதியில் இலங்கையின் மொத்தக் கடன் தொகையானது 1000 Billion பில்லியன்  ரூபாவினால் அதாவது நூறாயிரம் கோடி ரூபாவால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 




2019ம் ஆண்டு நிறைவின் போது . 13,031.5 பில்லியன் ரூபாவாக காணப்பட்ட இலங்கையின் மொத்தக் கடன் தொகை 2020 ஜுன் மாத நிறைவின் போது  14,052.2  பில்லியன்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. 



இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக மீளச் செலுத்தப்படவேண்டிய கடன்தொகையானது இவ்வாண்டு ஏப்ரல் மாதத்திலேயே 14,000 பில்லியன்களைத் தாண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


No comments:

Post a Comment