Sunday, February 7, 2021

ஜெனிவாவில் இலங்கைக்கு சார்பாக முஸ்லிம் நாடுகளின் ஆதரவைத்திரட்டும் பணியில் பாகிஸ்தான்

 




பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பெப்ரவரி 22ம் திகதி இலங்கை வருகை தரவுள்ளார்.  இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும்  வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோருடன் பாகிஸ்தான் பிரதமர் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.  இதேவேளை இலங்கைக்கு எதிராக ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு பெப்ரவரி 23ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இலங்கைக்கு சார்பாக முஸ்லிம் நாடுகளின் ஆதரவை திரட்டும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரத்தை மேற்கோள் காண்பித்து சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 



No comments:

Post a Comment