Tuesday, February 9, 2021

ஜெனிவாவில் இலங்கை தொடர்பாக தீர்மானம் வருவதை உறுதிசெய்தது பிரித்தானியா

 


ஜெனிவாவிலுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் எதிர்வரும் 46வது அமர்வில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதை இலங்கை தொடர்பாக செயற்படும் பிரதான குழுவில் இடம்பெற்றுள்ள பிரிட்டன் உறுதி செய்துள்ளது.

ஜெனீவாவிற்கான பிரிட்டனின் தூதுவரும் நிரந்தரவதிவிடப்பிரதிநிதியுமாகிய ஜூலியன் பிரத்வைட் மனித உரிமை பேரவைக்கு நேற்று திங்கட்கிழமை  இதனை அறிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

22ம் திகதி முதல் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையின் அமர்வு குறித்து திட்டங்களை உறுதிசெய்வதற்காக மனித உரிமை பேரவையின் கூட்டம் நேற்று இடம்பெற்றவேளை பிரிட்டன் தனது தீர்மானத்தை சமர்ப்பிக்கவுள்ளமை உறுதியாகியுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் தீர்மானம் சமர்ப்பிக்கப்படும் பிரத்வைட் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் ஏற்கனவே இணைஅனுசரனை வழங்கிய தீர்மானத்தின் தொடர்ச்சியான தீர்மானமாக இது காணப்படும்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் கடுமையான அறிக்கையை அடிப்படையாக கொண்டதாக புதிய தீர்மானம் காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

---------------------------------------------------

Core Group confirms Resolution to be submitted on Sri Lanka

The Core Group on Sri Lanka has confirmed it will be submitting a Resolution on Sri Lanka at the upcoming session of the UN Human Rights Council (UNHRC) in Geneva. 

The British Ambassador and Permanent Representative to the UK in Geneva, Julian Braithwaite, informed the UNHRC yesterday (Monday) of the decision to submit the Resolution. 

The confirmation was made as the UNHRC met to discuss its plans for the 46th Session of the UNHRC which will be held from 22 February 2021 to 23 March 2021. 


Braithwaite said that a Resolution will be submitted to the Council on promoting reconciliation, accountability and human rights in Sri Lanka. The Core Group on Sri Lanka consists of Canada, Germany, Montenegro, North Macedonia, and the United Kingdom.  

The Resolution is a follow-up to one already co-sponsored by the former government, from which the current administration withdrew last year. 

Braithwaite said the Resolution will be based on the recent damning report on Sri Lanka by the UN High Commissioner for Human Rights, Michelle Bachelet.

Bachelet had last month made public a damning report on Sri Lanka and has proposed targeted sanctions, such as asset freezes and travel bans against credibly alleged perpetrators of grave human rights violations and abuses.

The UN report warns that the failure of Sri Lanka to address past human rights violations has significantly heightened the risk of such violations being repeated. It highlights worrying trends over the past year, such as deepening impunity, and increased militarisation of governmental functions, ethno-nationalist rhetoric, and intimidation of civil society.

Nearly 12 years after the armed conflict in Sri Lanka ended, impunity for grave human rights violations and abuses by all sides is more entrenched than ever, with the current Government proactively obstructing investigations and trials, and reversing the limited progress that had been previously made, states the report, mandated by UN Human Rights Council Resolution 40/1.

The report urges enhanced monitoring and strong preventive action by the international community, warning that “Sri Lanka’s current trajectory sets the scene for the recurrence of the policies and practices that gave rise to grave human rights violations”.

Among the early warning signals the report highlights are the accelerating militarisation of civilian governmental functions, reversal of important constitutional safeguards, political obstruction of accountability, exclusionary rhetoric, intimidation of civil society, and the use of anti-terrorism laws. (Colombo Gazette)

No comments:

Post a Comment