Sunday, November 15, 2020

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 100 நாடுகளின் வரிசையில் முதன்முறையாக இலங்கை!

 


இலங்கையில் இன்றையதினத்தில் மாத்திரம் இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 704 ஆக அமைந்துள்ள நிலையில் முதன்முறையாக கொரோனா வைரஸால் அதிகமாகப் பாதிக்கப்பட்டநாடுகளின் வரிசையில் முதல் நூறு இடங்களுக்குள்  இடம்பெற்றுள்ளது. 

உலகில் கொரோனா வைரஸ் பரவலுக்குள்ளாகியிருக்கும் 219 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தற்போது இலங்கை 99வது இடத்தில் உள்ளது. 

இலங்கையில் கொரோனா தொற்றிற்குள்ளானதாக இதுவரை கண்டறியப்பட்டுள்ளவர்களின் 17,287 எண்ணிக்கை ஆகும். இதில் 11,495 பேர் குணமடைந்து வீடு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய நிலையில் 5,734 பேர் சிசிக்சை பெற்று வருகின்றனர். 

இலங்கையின் ஒட்டுமொத்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை உகண்டா, சூடான், ஸிம்பாம்பே போன்ற நாடுகளை விடவும் அதிகம் என்னும் போது நிலைமையின் பாரதூரம் புலனாகும். 

இலங்கையில் மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலை ஊழியரொருவர் கடந்த ஒக்டோபர் மாதம் 4ம் திகதி  கொரோனா தொற்றுக்குள்ளானதாக இனங்காணப்பட்ட பின்னர் அதிகரிக்கத்தொடங்கிய கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை  கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக பெருமளவான அதிகரிப்பைக் காண்பித்து நிற்கின்றது. 



இந்த கொரோனா வளைவு மிகவும் அபாயகரமான போக்கைக் காண்பித்து நிற்கின்றது. இலங்கையில் தற்போது சிகிச்சை பெறும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது சுகாதார அமைச்சு குறிப்பிட்டிருந்த வைத்தியசாலை படுக்கைகளின் எண்ணிக்கையை விடவும் அதிகமாக அமைந்துள்ளது. 

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 31 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 2,950 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இன்று (15) அதிகாலை வரை, கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் முதலாவது மற்றும் இரண்டாவது தொடர்பாளர்கள் சுமார் 30,000 பேர் சுயதனிமைப்படுதப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்றையதினம் (14) இலங்கையில் 13,671 PCR பரிசோதனைகள் மேறகொள்ளப்பட்டுள்ளது

நாட்டில் பல பகுதிகளுக்கு  கொரோனா பரவிவிட்டுள்ள நிலையில் நாளாந்தம் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இதுவரை  இறந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.  கொழும்பு நகரின் பலபகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளநிலையில் கொழும்பு நகரில் ஏறத்தாழ 30,000 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளமைக்கான வாய்ப்புள்ளதாக கொழும்பு மாநகரசபையின் பிரதம சுகாதார அதிகாரி சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். கொழும்பில் நடமாடித்திருகின்றவர்களில் மூன்றில் ஒருவருக்கு கொரொனா தொற்று இருக்கக்கூடும் என்பதை அவர்களுக்கு  சோதனை செய்து பார்ப்பதனூடாக விளங்கிக்கொள்ளலாம் என வைத்தியர்கள் கூறும் அளவிற்கு நிலைமை  சென்றுகொண்டிருக்கின்றது. 


No comments:

Post a Comment