அரசியலமைப்பின் 20வது திருத்தத்தின் கீழ் நடைமுறைக்கு வந்துள்ள பாராளுமன்ற பேரவைக்கான தனது பிரதிநிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பெயரை பிரதமர் மஹிந்த ராஜபக் ஸ முன்மொழிந்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்த்தனவிற்கு எழுதிய கடிதமொன்றிலேயே பிரதமர் இந்த யோசனை முன்வைத்துள்ளார்.
19வது திருத்தத்தின் கீழ் நடைமுறையில் இருந்த அரசியல்சாசன பேரவையானது 20வது திருத்தம் கொண்டுவரப்பட்டதன் மூலம் இல்லாதொழிக்கப்பட்டு அதற்கு பதிலாக பாராளுமன்ற பேரவை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் 5 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.
சுயாதீன ஆணைக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர்இ பிரதம நீதியரசர் போன்ற உயர் பதவிகளை நியமிப்பதற்கு குறித்த நாடாளுமன்றப் பேரவை ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும்.
சபாநாயகர்இ பிரதமர்இ எதிர்க் கட்சித் தலைவர்இ பிரதமர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரினால் நியமிக்கப்படும் தலா ஒருவர் என இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக ஐவர் குறித்த பாராளுமன்ற பேரவையில் அங்கம் வகிப்பார்கள்.
அதனடிப்படையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
19 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பத்து உறுப்பினர்களை கொண்ட அரசியலமைப்பு பேரவைக்கு பதிலாக தற்போது பாராளுமன்ற பேரவை உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment