இவ்வருடத்தில் இலங்கைக்கு இரண்டாவது தடவையாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இன்று வெள்ளிக்கிழமை (27) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவுகளுக்கு இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அவர் நாட்டிற்கு வருகை தருவதாக 'த ஹிந்து' செய்தி வௌியிட்டுள்ளது.
மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா அஹ்மட் தீதியும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.
இவ்வாறான முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த 2014 இல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
இந்த விஜயத்தின் போது இந்திய தேசியப்பாதுகாப்பு ஆலோசகர் இழுபறியில் உள்ள கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் தொடர்பாக பிரஸ்தாபிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக நியுஸ் இன் ஏசியா செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்புத்துறைமுகத்தில் சீனாவின் பிரசன்னம் உள்ள நிலையில் தேசியப்பாதுகாப்பை முன்னிட்டு கிழக்கு முனையம் அவசியம் என இந்தியா கருதுகின்றது எனவும் அந்தச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் 70சதவீதமான வர்த்தக நடவடிக்கைகள் இந்தியாவிற்கு செல்லும் கப்பல்களை சரக்குகளைக் கையாள்வதில் தங்கியுள்ள நிலையில் இந்தியா வர்த்தக ரீதியிலும் கிழக்கு முனையத்தில் கவனம் செலுத்துகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
No comments:
Post a Comment