Monday, November 23, 2020

ஜோ பைடனின் கபினற் அமைச்சரவை முக்கிய நியமனங்கள் விபரம் வெளியானது

 


அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனின் தலைமையிலான அடுத்த அமெரிக்க நிர்வாகத்திற்கான முக்கிய கபினற் அமைச்சரவை பதவிகள்  பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் பிரகாரம் அடுத்த வெளிவிவகார செயலாளராக அந்தனி பிளின்கென் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார். 

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பிற்கான செயலாளராக அலெக்ஜான்ரோ மயோகாஸ், தேசிய புலனாய்வு பணிப்பாளராக அவ்ரில் ஹேய்னஸ் ,ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத்தூதுவராக லிண்டா தோமஸ் கிறீன்பீல்ட் ,தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஜேக் சுலீவன், காலநிலை தொடர்பான அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக முன்னாள் இராஜாங்க செயலாளர் ஜோன் கேரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.



பராக் ஒபாமாவின் அமைச்சரவையில் முக்கிய இடம்வகித்தவர்களில்  இராஜாங்க செயலாளராக திகழ்ந்த ஜோன் கேரி தவிர வேறு எவரும்  ஜோ பைடனின் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. சமந்தா பவர் , சூஸன் ரைஸ் போன்றவர்கள் ஜோ பைடன் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்று கருத்துக்கள் வெளியாகிய போதும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் அவர்களது பெயர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


No comments:

Post a Comment