போரில் பல்லாயிரக்கணக்கானோரைப் பறிகொடுத்து நிற்கும் தமிழினத்தில் இடம்பெறும் தேவையற்ற மரணங்கள் ஆழ்ந்த கவலைகளை ஏற்படுத்துகின்றன.
களுதாவளையில் பணிஸ் வாங்க பிரதான வீதியைக்கடந்து கடைக்குச் சென்று மீண்டும் வீடுதிரும்புகையில் மரணித்த 7வயதுச் சிறுமியின் மரணம் தொடர்பான செய்தியைப் பார்த்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மண்டைதீவில் இரு சிறார்கள் மரணித்துள்ளதான செய்தி மனதை பெரும் கவலையில் ஆழ்த்திவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் விவசாய கிணறொன்றில் வீழ்ந்து சகோதரர்களான 2 சிறுவர்கள் இன்று (21) மாலை உயிரிழந்துள்ளனர்.
5 மற்றும் 7 வயதுடைய இரு சிறார்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள், உறவினர் ஒருவருடன் வயலுக்கு சென்றபோதே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.
மழைநீரை சேமிப்பதற்காக வெட்டப்பட்ட தற்காலிக குழியொன்றில் வீழ்ந்தே சிறுவர்கள் உயிரிழந்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் கூறியுள்ளனர்.
உயிரிழந்த சிறுவர்களின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment