Thursday, November 26, 2020

22 ,000,ஐக் கடந்தது இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை: 100 நெருங்கும் மரணங்கள்

 


இலங்கையில் நாளாந்தம் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. 

நாட்டில் இன்றும் 553 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18ஆயிரத்தைக் கடந்து 18 ஆயிரத்து 491ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 22ஆயிரத்தைக் கடந்து 22 ஆயிரத்து 22ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று மட்டும் 369பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 15 ஆயிரத்து 447பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்னும் ஆறாயிரத்து 110 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

நாட்டில் கொரோனா தொற்றினல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 96ஆகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது (26) அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்கனவே 96 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 3 மரணங்களுடன்இ இதுவரை 99 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றையதினம் (25) கொவிட்-19 தொடர்பான (தற்போது அறிவிக்கப்பட்ட ஒரு மரணத்துடன்) 2 மரணங்களும் நேற்று முன்தினம் (24) 2 மரணங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது அறிவிக்கப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் 2 ஆண்களும் உள்ளடங்குவதோடு, இவர்களில் ஒருவர் இன்றும் (26), ஒருவர் நேற்றும் (25) ஒருவர் கடந்த திங்கட்கிழமையும் (23) மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மரணமடைந்தவர்கள், கொழும்பு 08 (பொரளை), ,பேலியகொடை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.

97ஆவது மரணம்

கொழும்பு 08 (பொரளை) பிரதேசத்தைச் சேர்ந்தஇ 87 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் இன்று (26) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், பக்கவாதம் மற்றும் கொவிட்-19  தொற்றுடனான பக்டீரீயா தொற்று மற்றும் நாட்பட்ட நுரையீரல் நோய் உக்கிரமடைந்தமை எனஇ அறிவிக்கப்பட்டுள்ளது.

98ஆவது மரணம்

பம்பலபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தஇ 80 வயதான ஆண் ஒருவர், கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (25) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், அதிக இரத்த அழுத்தம், நியூமோனியா நிலை மற்றும் கொவிட்-19  தொற்றுடன் ஏற்பட்ட மாரடைப்பு, என அறிவிக்கப்பட்டுள்ளது.

99ஆவது மரணம்

பேலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 73 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கடந்த திங்கட்கிழமை (23) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், அதிக இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் கொவிட்-19  தொற்றுடன் ஏற்பட்ட பக்கவாத நிலை எனஇ அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment