கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து ஒன்று தயாரிக்கும் முயற்சியில் வெற்றியை நெருங்கிவிட்டதாக அமெரிக்க மருந்துநிறுவனம் நேற்று அறிவித்திருந்த நிலையில் அதற்கு எதிர்மறையான செய்தி சீன நிறுவனத்தின் மருந்துதொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ளது.
பிரேசிலில் மருத்துவ சிகிச்சை பெறுபவர்களுக்கு செலுத்தப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்த, கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பரிசோதனைகளை அந்நாடு இடைநிறுத்தி வைத்துள்ளது.
இந்தத் தடுப்பு மருந்து சினோவேக் பயோடெக் எனும் சீன நிறுவனம் தயாரித்த தடுப்பு மருந்தாகும்.
'கொரோனோவேக்' எனும் இந்தத் தடுப்பு மருந்து உடலில் செலுத்தப்பட்டவர்களுக்கு மோசமான விளைவு ஏற்பட்டது என்று மட்டும் தெரிவித்துள்ள பிரேசில் சுகாதார ஒழுங்காற்று அமைப்பான 'அன்விசா' இந்த சம்பவம் அக்டோபர் 29ம் தேதி நடந்தது என்பதைத் தவிர மேலதிக தகவல் எதையும் தெரிவிக்கவில்லை.
சீனாவின் சினோவேக் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த தடுப்பு மருந்து சர்வதேச அளவில் இறுதிகட்ட பரிசோதனைகள் இருக்கும் சுமார் ஒரு டஜன் மருந்துகளில் ஒன்றாகும்.
ஆனால் தங்கள் தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மீது தாங்கள் நம்பிக்கையுடன் இருப்பதாக சினோவேக் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment