கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் கீழ் 600 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய உரித்துடைய கைதிகளின் பட்டியலை வழங்குமாறு சிறைச்சாலைத்திணைக்களம் அனைத்து சிறைச்சாலைகளிடமும் கோரியுள்ளது.
சிறுகுற்றங்களுக்காக சிறைவைக்கப்பட்டுள்ளவர்களே இந்த பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட தகுதியானோர் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில் சிறையில் வாடும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கு வாய்ப்புக்கள் இல்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது.
இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகாரணமாக 800ற்கும் மேற்பட்ட கைதிகள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment