தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை ஊடக தளத்தில் குறிப்பாக சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளதுடன் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
படுகொலைச் சந்தேக நபரான பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரக்காந்தன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிணையில் விடுவிக்கப்படமுடியும் என்றால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஏனைய சந்தேக நபர்களை ஏன் விடுதலை செய்ய முடியாது என படுகொலை செய்யப்பட்ட ஜோஸப் பரராஜசிங்கத்தின் மனைவி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் 11ஆம் திகதி, மாலை 5.00 மணியளவில், வாக்குமூலம் வழங்கும் பொருட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு பணிக்கப்பட்டிருந்த பிள்ளையான், அன்றைய தினமே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 5 வருடத்திற்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர்,கடந்த பொதுத் தேர்தலில் சிறையிலிருந்தவாறே மட்டக்களப்பு மாவட்டத்தில் எம்.பியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு இன்று (24) மட்டக்களப்பு குடியியல் மேன் முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி டி. சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே அவர் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
படு கொலை செய்யப்பட்ட ஜோசப் பரராஜசிங்கத்தின் மனைவி சார்பில்இ,இவ்வழக்கில் ஆஜரானஇ ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் பிள்ளையான் உட்பட சந்தேகநபர்கள் ஐவருக்கும் பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவித்தார்.
ஆயினும் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ஆட்சேபனை தெரிவிக்காத நிலையில் பிணை வழங்கப்பட்டது
இதன்போதுஇ வழக்குடன் சம்பந்தப்படட ஐவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா ரொக்கம்இ மற்றும் இரு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன் சந்தேகநபர்களுக்கு வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கு டிசம்பர் 08 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment