மஹிந்த தேசப்பிரியவை தலைவராகக் கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நவம்பர் 12ம் திகதியுடன் உத்தியோகபூர்வமாக நிறைவிற்கு வருகின்ற போதும் புதிய ஆணைக்குழுவிற்கான அங்கத்தவர்கள் இன்னும் நியமிக்கப்படாததால் தெளிவின்மை காணப்படுகின்றது.
20வது திருத்தத்திற்கமைவாக புதிய ஆணைக்குழு அங்கத்தவர்கள் நியமிக்கப்படும் வரை தற்போதுள்ள அங்கத்தவர்களே பதவியில் இருக்க முடியும். ஆனாலும் அவர்களிடத்தில் இதற்கான சம்மதம் பெறப்படவேண்டும். இது தொடர்பாக நேற்றையதினம் தேர்தல் ஆணைக்குழுவின் அங்கத்தவர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுலிடம் வினவியபோது தமது சம்மதம் அன்றேல் இணக்கம் தொடர்பாக இதுவரை வினவப்படவில்லை என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment