ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் கூட்டிணைக்கப்பட்ட பல பயங்கரவாதத்தாக்குதல்கள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதாக பல்வேறு டுவிட்டர் பதிவுகளையும் முன்னணி செய்திஸ்தாபனங்களின் தகவல்களின் அடிப்படையிலும் அறியமுடிகின்றது.
வியன்னா நேரப்படி திங்கட்கிழமை இரவு வேளையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் பலர் காயமடைந்துள்ளதாக ஆஸ்திரிய பொலிஸாரின் டுவிட்டர் பதிவை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்திவெளியிட்டுள்ளது.
வியன்னா நகரின் மத்தியில் ஆறு வெவ்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனவே அனைத்து பொது இடங்களையும் பொதுப் போக்குவரத்தையும் தவிர்த்துக்கொள்ளுங்கள். என பொலிஸார் டுவிட்டர் மூலம் அறிவித்துள்ளனர்.ஆரம்பத்தில் யூதர்களுக்குரிய மதவழிபாட்டுத்தலமொன்றிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment