Saturday, November 14, 2020

நாட்டில் 329 சிறைக்கைதிகளுக்கு கொரோனா: கண்டி நகர் எதிர்நோக்கும் அபாயம் என்ன?



இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் இருந்து இதுவரை 329 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் 323 பேர் சிறைக்கைதிகளாவர். இன்றையதினத்தில் மாத்திரம்  80 சிறைக்கைதிகள் கண்டி போகம்பரை சிறைச்சாலையில் இருந்து கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கு இனங்காணப்பட்டுள்ள மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது. 'போகம்பரை சிறைச்சாலையில் நிலைமை மோசமடைந்துவருகின்றது. நாம் இங்கு 100 பேருக்கு மாத்திரமே தனிமைப்படுத்தல் ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். ஆனால் தற்போது அங்கு 809 சிறைக்கைதிகள் உள்ளனர். ' என  அமைச்சர்கள் மத்தியில் பேசிய கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் சுட்டிக்காட்டியுள்ளார். ' ஊழியர்கள் உணவை எடுத்துவர கண்டி நகருக்கு செல்கின்றனர். சிறைச்சாலைக்கு மேலும் அதிக பணியாளர்கள் தேவை .இதைநாம் கட்டுப்படுத்தாவிடின் நகரமும் அபாயத்திற்குள்ளாகும்.' எனத் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment