Monday, November 2, 2020

இலங்கையில் மக்களைக் குழப்பத்துக்குள்ளாக்கும் கொவிட்-19 மரணங்கள்



இலங்கையில் கொவிட்-19ல் நிகழ்ந்த 22வது மரணம் என்று பதிவுசெய்யப்பட்ட மரணம் மக்கள் மத்தியில் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பெரும் வாதப்பிரதிவாதங்களை எழுப்பியுள்ளதோடு கடந்த காலத்தில் இடம்பெற்ற மரணங்கள் தொடர்பாகவும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்த 27 வயதுடைய நபரின் மரணத்தை கொரோனா மரணமாக கருத்திற் கொள்ளாமல் இருக்க தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தீர்மானித்துள்ளது.

இளைஞன் தற்கொலைசெய்து கொண்டபின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இன்று காலை வெளியிடப்பட்ட அறிக்கையின் போது கொவிட்-19னால் இலங்கையில் இடம்பெற்ற 22வது மரணம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும் பொதுமக்கள் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் கடும் கேள்விகளை எழுப்பி விமர்சனங்களைப் பதிவுசெய்திருந்த நிலையில் முன்னர் வெளியிட்ட அறிக்கையை மாற்றி புதிய அறிக்கையை சுகாதார அமைச்சு வெளியிட்டிருந்தது. 

அதில்  குறித்த மரணம் கொவிட் 19 வைரஸினால் ஏற்படாத காரணத்தால் இளைஞனின் மரணத்தை கொவிட் மரணங்களின் எண்ணிக்கையுடன் சேர்க்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

 22வது  மரணத்தை கொரோனா பட்டியலில் இருந்து அகற்றியது போன்று 9வது மரணத்தையும் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிஷாஹிர் மௌலானா கோரியுள்ளார். 



அலிஷாஹிர் மௌலானா கோரியுள்ளார். மே மாத ஆரம்பத்தில் கொழும்பு  முகத்துவாரம் பகுதியில் இறந்து போன பாத்திமா ரினோஷா என்ற பெண் கொவிட்-19 இலங்கையில் இறந்த 9வது நபர் என்று பட்டியலிடப்பட்டபோதும் அவர் கொவிட்டால்  இறக்கவில்லை என்றும் அவரது பெயரை நீக்க வேண்டும் எனவும் மௌலானா கூறியுள்ளார். 



No comments:

Post a Comment