இலங்கையின் அமைச்சரவையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
பொலிஸ் திணைக்களம் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஆகியன சரத் வீரசேகரவின் அமைச்சின் கீழ் உள்வாங்கப்படும்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக தரம் உயர்த்தப்பட்டுள்ள சரத் வீர சேகர, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சராகவும் பதவிவகித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் சரத் வீரசேகர இலங்கை கடற்படையின் ரியர் அட்மிரலாக பொறுப்பு வகித்தவராவார்.
அத்துடன், அவர் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் செயற்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment