உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல பொய் சாட்சிகளை வழங்கியுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவின் சட்டத்தரணிகள் நேற்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து தாம் முன்னர் அறிந்து வைத்திருக்கவில்லையெனவும் தாக்குதல் இடம்பெற்ற போது சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி வழங்கியுள்ள சாட்சி முற்றுமுழுதாக உண்மைக்கு புறம்பானவை என தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் இந்த சகல யோசனைகளும் முன்னாள் ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் 7 வது நாளாகவும் நேற்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாட்சியமளித்ததுடன் இதன்போது பிரதிவாதி தரப்பினரால் குறுக்கு கேள்விகள் கேட்கப்பட்டன. முன்னாள் பொலிஸ் மா அதிபரை பிரதிநிதித்துவப் படுத்தி ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட தினம் தாக்குதலை தொடர்ந்து துரிதமாக சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்புவதற்கு யு.எல்.307 இ யு.எல்.303இ யு.எல்.309 விமான பயணங்கள் காணப்பட்ட போதிலும் இதில் எதையும் பயன்படுத்தாதுஇ முன்னார் திட்டமிட்டிருந்த விமானம் ஊடாகவே நாடு திரும்பியமைக்கான காரணம் என்னவென கேள்வி எழுப்பினார்.
எத்தனை விமானங்கள் , காணப்பட்டன, அவை வரும் போகும் நேரங்கள் ஜனாதிபதி என்ற வகையில் எனக்கு தெரியாது. அதிகாரிகள் எனக்கு நேரத்தை சொன்னால், நான், குறித்த நேரத்தில் அங்கு செல்வேன். சிகிச்சை வழங்கிய வைத்தியர் எனக்கு தடுப்பூசியை வழங்கியதன் பின்னர் 24 மணிநேரம் செல்லும் வரை விமானப் பயணங்களுக்கு தடை விதிருந்தார். அவ்வாறு இருக்கையில் தனது தனிப்பட்ட சுகாதார நிலையைக் கருத்திற்கொள்ளாது, நான் மீண்டும் நாடு திரும்பினேன். இது எதிர்பார்க்கப்படாத சம்பவமாகும். இதனால் இ இதன் பாதிப்புக்க்ள் வேதனைகளை பலமாக கொண்டு தாக்குதல் நடாத்தப்பட்ட தினம் நள்ளிரவே நான் இலங்கை வந்தேன் என முன்னாள் ஜனாதிபதி பதிலளித்தார். இதனையடுத்து முன்னாள் பாதுகாப்பு செயலாளரை பிரிதிநிதித்துவப்படுத்திய சட்டத்தரணி டில்சான் ஜயசூரிய குறுக்கு விசாரணைகளை ஆரம்பித்தார். இத்தாக்குதலானது முழு இலங்கையைப் போன்று உங்களுக்கும் உங்களது குடும்பத்திற்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்ததா? உங்களது மகனின் திருமண நிகழ்வை சங்ரில்லா ஹோட்டலில் நடாத்த திட்டமிட்டிருந்தீர்கள் இத்தாக்குதலினால் திருமண நிகழ்வை ஹில்டன் ஹோட்;டலில் நடாத்த வேண்டி ஏற்பட்டதாக நான் கூறுவதை நீங்கள் ஏற்றுக்கொள்வீரா என சட்டத்தரணி கேள்வவி எழுப்பினார்.
ஆம்இ அவ்வாறே இருந்தது என முன்னாள் ஜனாதிபதி அந்த யோசனையை ஏற்றுக்கொண்டார். தற்போது நீங்கள் சாட்சியமளித்த போது ஏப்ரல் 20, 21 உங்களுக்கு தொலை பேசி அழைப்பொன்றை ஏற்படுத்தியேனும் தொடர்புபட முடியாத அளவிற்கு சிரமத்துடன் இருந்ததாக கூறினீர்கள்;, தற்போது அந்த அளவிற்கு மோசமான நோய் நிலமைக்கு சிகிச்சை பெறச் சென்ற நீங்கள் ஏன் 16 இலங்கையிலிருந்து சென்று நேரடியாக சிங்கப்பூருக்கு செல்லாது இந்தியாவின் யாத்திரைக்கு சென்றீர்கள் என சட்டத்தரணி கேட்டபோது,
நான் தெரிந்த காலம் முதல் திருப்பதி செல்கிறேன். இதுவும் வருடம் தோறும் செல்கின்ற யாத்திரையாகவே சென்றேன் என முன்னாள் ஜனாதிபதி பதில் வழங்கினார்.
சிங்கப்பூர் செல்லும் முன்னர் திருப்பதி சென்ற உங்களுக்கு தீவிர நோய் நிலையொன்று காணப்படவில்லையென நான் யோசனை தெரிவித்தால்இ அதனை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? நீங்கள் வருடம் தோறும் மேற்கொள்கின்ற வைத்திய பரிசோதனைகளுக்காகவே சிங்கப்பூர் சென்றீர்கள்இ உண்மையாக கூறினால், உங்களுக்கு எவ்வித நோய் நிலமையும் இல்லை. நீங்கள்இ ஆரோக்கியமாக இருக்கிறீர்களா என்பதை அறியவே சென்றீர்கள். என கேட்கப்பட்டபோது.
இல்லை, அவ்வாறு இல்லை. பரிசோதனைகளுக்காகவே சென்று அதற்கு பிறகு சிகிச்சைகளை பெற்றுக்கொண்டேன் என பதிலளித்தார்;.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் , அப்படியாயின், ஏப்ரல் 20 காலை 6.16 மற்றும் உயிர்த்த ஞாயிறு மேற்கொள்ளப்பட்ட தினம் இ தாக்குதலுக்கு முன்னர் முற்பகல் 7.59 க்கு அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தன உங்களுக்கு தொலைபேசி அழைப்பொன்றை வழங்கியிருந்தாக கூறினீர்கள். இது குறித்து தொழிநுட்ப சாட்கிகள் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு இருக்கையில் தாக்குதல் குறித்து நீங்கள் முன்னர் அறிந்திருக்க வில்லையெனவும் அறிவுறுத்தப்படவில்லையெனவும் தொடர்ந்தும் கூறுகிறீர்கள் என சட்டத்தரணி டில்சான் ஜயசூரிய எழுப்பிய கேள்விக்குஇ ஆம் எவ்வாறான சாட்சிகள் இருந்த போதிலும் நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஏன் என்றால் எவரும் இதுகுறித்து முன் அறிவிக்கவில்லையென முன்னாள் ஜனாதிபதி மீண்டும் மீண்டும் பதில் வழங்கினார்.
இதேவேளை பிபிசி ஊடகவியலாளர் ஷேலி உபுல் குமாரவிடம், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு நேற்று (24) விசாரணைகளை நடத்தியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிபிசி சிங்கள சேவை தொடர்பில் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்தேஇ இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது.
இந்த தாக்குதல் தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று விசாரணைகளை நடத்தியது.
பிபிசி சிங்கள சேவைக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பேட்டியை ஒளிபரப்பு செய்து, ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை நடத்தியுள்ளது.
இதன்போது, சாட்சி வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிபிசி சிங்கள சேவை தொடர்பில் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.
தான் வழங்கிய பேட்டியை, திரிவுப்படுத்தி, பிபிசி சிங்கள சேவை ஒளிபரப்பு செய்துள்ளதாக அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கூறியுள்ளார்.
ஊடக தர்மத்தை மீறி, பிபிசி நிறுவனம் செயற்பட்டதாகவும் அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.
தான் ஒளிபரப்பு செய்ய வேண்டாம் என்பதை, பிபிசி நிறுவனம் ஒளிபரப்பு செய்துள்ளதாகவும் அவர் ஆணைக்குழுவிடம் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய, ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு, பிபிசி சிங்கள சேவையின் ஊடகவியலாளர் ஷேலி உபுல் குமாரவிடம் இரண்டு மணிநேர விசாரணைகளை நடத்தியுள்ளது.
தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஊடக தர்மத்தை மீறவில்லை என கூறியுள்ள ஷேலி உபுல் குமார, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பேட்டியை திரிவுப்படுத்தி ஒளிபரப்பு செய்யவில்லை என்பதை பொறுப்புடன் கூறிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியுடன் நடத்திய பேட்டியின் பின்னர், அவர் கோபப்படும் விதத்தில் ஏதேனும் சம்பவங்கள் இடம்பெற்றதா என பொலிஸார், ஊடகவியலாளரிடம் வினவியுள்ளனர்.
அவ்வாறு எந்தவொரு சம்பவமும் இடம்பெறவில்லை என கூறிய ஷேலி உபுல் குமார, சந்திப்பின் பின்னர் தான் முன்னாள் ஜனாதிபதியுடன் புகைப்படமொன்றை எடுத்துக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்பின்னர் தான் முன்னாள் ஜனாதிபதியை பாராளுமன்றத்திலேயே கண்டதாகவும்இ அந்த சந்தர்ப்பத்தில் கூட புகைப்படமொன்றை தான் எடுத்துக்கொண்டதாகவும் அவர் கூறியதுடன், குறித்த புகைப்படத்தை பொலிஸாரிடம் காண்பித்துள்ளார்.
No comments:
Post a Comment