Thursday, November 19, 2020

மறைந்த ரஷ்ய தமிழறிஞர் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி வகிபாகம் என்ன?

 



ரஷ்ய நாட்டு தமிழறிஞர் பேராசிரியர் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி, மொஸ்கோவில் கொரோனாவால் நேற்றுமரணம் அடைந்தார். அவருக்கு வயது 79.

இவர் கடந்த 50 ஆண்டு காலமாக தமிழ் பணியாற்றி வந்தார். ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி காலமானார்.

1941-ல் பிறந்த அலெக்ஸாண்டர் டுபியான்ஸ்கி, மொஸ்கோ அரச பல்கலைக்கழகத்தில் 1970-ல் கீழைநாட்டு  மொழிகளுக்கான நிறுவனத்தில் பட்டம் பெற்றார். தமிழ்இ சமஸ்கிருதம் இரண்டிலும் புலமை பெற்றவர் டுபியான்ஸ்கி. தமிழைச் சரளமாகப் பேசக்கூடியவர்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக டுபியான்ஸ்கி ரஷ்யாவில் 10 பல்கலைக்கழகங்களின் இளங்கலை மாணவர்களுக்கு தமிழ் கற்பித்து வந்தார்.

கடந்த பல ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு முறை சங்க இலக்கியம் பற்றிய வாசிப்புப் பட்டறையை அவர் நடத்தி வந்தார்.

அவரது மறைவுக்கு கவிஞர் வைரமுத்து வெளியிட்ட இரங்கல் செய்தியில், 'வால்காவோடு வைகையை இணைத்தவருக்கு எங்கள் புகழ் வணக்கம். இது ஈடுசெய்தாக வேண்டிய இழப்பு. செய்தால்தான் டுபியான்ஸ்கியின் உயிர் ஓய்வுறும். யார் முன்வரினும் எங்கள் உறுதுணையும் உறுபொருளும் உண்டு' என்று ட்வீட் செய்துள்ளார்.

இலங்கையின் புகழ்பெற்ற தமிழறிஞர் பேராசிரியர் நுஹ்மான் மொஹமட் தனது பேஸ்புக்கில் உருக்கமான பதிவொன்றை எழுதியுள்ளார். 

தமிழர் மரபு அறக்கட்டளையின் தலைவர் சுபாஷினி கனகரட்ணம் தனது பேஸ்புக்கில்   இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 



தகுதியுள்ளவர்கள்  வாழும் போது இந்த உலகில் மதிக்கப்படுவது  பெரிதும் குறைவானது. வாழும்போதே தாம் தேர்ந்தெடுத்த துறைக்காக வழங்கிய பங்களிப்பிற்காக கௌரவிக்கப்படுவது பாக்கியமாகும்.  அதிலும் நம் தாய்மொழியாம் தமிழுக்காக தமிழரல்லாதவர்கள் வழங்கிய பங்களிப்பிற்காக போற்றப்படுவது வரவேற்கத்தக்கது. 

No comments:

Post a Comment