Sunday, November 15, 2020

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் புஞ்சிஹேவா! அங்கத்தவர்களாக மொஹமட், ஜீவன் தியாகராஜா பெயர்கள் பரிந்துரை

 


தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு நிமல் புஞ்சிஹேவாவையும் அதன் அங்கத்தவர்கள் பதவிக்கு ஓய்வுபெற்ற முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் , ஜீவன் தியாகராஜா, எஸ். சமாதிவாகர மற்றும் ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ்மா அதிபர் கே.பி.பி. பத்திரண ஆகியோரது பெயர்களைப்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பரிந்துரைத்துள்ளார் என சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது. 

நிமல் புஞ்சிஹேவா மஹிந்த தற்போது தேர்தல் ஆணைக்குழுவில் சட்டம் மற்றும் விசாரணைப்பிரிவின் மேலதீக ஆணையாளராக செயலாற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் எம். எம். மொஹமட் கடந்த தேர்தல்களின் போதும் தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசகராக சேவையாற்றியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.


ஜீவன் தியாகராஜா 

ஜீவன் தியாகராஜா  1984ம் ஆண்டு முதல் அரச சார்பற்ற அமைப்புக்களில் பணியாற்றிவருவதுடன்  அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் திகழ்கின்றார்.

அரசியலமைப்பின் 19வது திருத்தத்தில் தேர்தல் ஆணைக்குழுவில் தலைவர் உட்பட மூன்று அங்கத்தவர்கள் இருக்க முடியும். ஆனால் 20வது திருத்தத்தில்  தேர்தல் ஆணைக்குழுவில் தலைவர் உட்பட மொத்தமாக ஐந்து அங்கத்தவர்கள் இருக்கமுடியும். 

20வது திருத்தத்தின் படி தேர்தல் ஆணைக்குழுவிற்கு தலைவர் உட்பட ஐவர் அங்கத்தவர்களாக நியமிக்கப்படவேண்டும். இதில் ஒருவர் கட்டாயமாக தேர்தல் ஆணைக்குழுவில் ஆகக்குறைந்தது பிரதி ஆணையாளர் பதவியில் இருந்தவராக இருக்க வேண்டும். 

19வது திருத்தத்தின் பின்னர் மீள் வடிவமைக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு  2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 13ம் திகதி நியமிக்கப்பட்ட   தலைவர்  மஹிந்த தேசப்பிரிய அங்கத்தவர் ரட்ணஜீவன் ஹுல் அங்கத்தவர் என், ஜே. அபேசேகர ஆகியோரது ஐந்தாண்டுகளுக்கான பதவிக்காலம் 2020 நவம்பர் 12ம் திகதியோடு முடிவிற்கு வரவேண்டும் என்றாலும் இன்னமும் புதிய தேர்தல் ஆணைக்குழுவிற்கான அங்கத்தவர்கள் நியமிக்கப்படாமையால் குழப்பநிலை உள்ளது. இதுபற்றி அண்மையில் தேர்தல் ஆணைக்குழுவின் அங்கத்தவர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் வழங்கிய நேர்காணலை இங்கு காணலாம் 



இதேவேளை எல்லை நிர்ணயக் குழுவின் தலைவராக தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 


No comments:

Post a Comment