கொழும்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் சூழ்நிலை எச்சரிக்கை மிகுந்ததாக காணப்படுகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளமை ஆபத்தானதென அரசாங்க மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்கனவே 109 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 7 மரணங்களுடன், இதுவரை 116 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றையதினம் (28) கொவிட்-19 தொடர்பான (தற்போது அறிவிக்கப்பட்ட ஒரு மரணத்துடன்) 1 மரணமும் நேற்று முன்தினம் (27) (தற்போது அறிவிக்கப்பட்ட 3 மரணங்களுடன்) 6 மரணங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது அறிவிக்கப்பட்டவர்களில் 4 ஆண்களும் 3 பெண்களும் உள்ளடங்குவதோடு, இவர்களில் மூவர் இன்றும் (29), ஒருவர் நேற்றும் (28), மூவர் நேற்றுமுன்தினமும் (26) மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மரணமடைந்தவர்கள், கொழும்பு 02, கொதட்டுவ, மொரட்டுவை, சிலாபம், அகுரஸ்ஸை, கொழும்பு 13, மருதானை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
110ஆவது மரணம்
கொழும்பு 02 (கொம்பனித்தெரு/ யூனியன் பிளேஸ்) பிரதேசத்தைச் சேர்ந்த, 50 வயதான பெண் ஒருவர், கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அவ்வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (28) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று காரணமான நியூமோனியா மற்றும் நாட்பட்ட நுரையீரல் நோய், என அறிவிக்கப்பட்டுள்ளது.
111ஆவது மரணம்
கொதட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த, 48 வயதான ஆண் ஒருவர், வீட்டில் வைத்து மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (27) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று காரணமான நியூமோனியா, நாட்பட்ட நுரையீரல் நோய் மற்றும் நீரிழிவு, என அறிவிக்கப்பட்டுள்ளது.
112ஆவது மரணம்
மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த, 73 வயதான ஆண் ஒருவர், கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டு ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் இன்று (25) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் உக்கிரமடைந்த நியூமோனிய, என அறிவிக்கப்பட்டுள்ளது.
113ஆவது மரணம்
சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த, 70 வயதான ஆண் ஒருவர், சிலாபம் ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (29) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், நீரிழிவு, அதிக இரத்த அழுத்தம் மற்றும் கொவிட்-19 நியூமோனியா, என அறிவிக்கப்பட்டுள்ளது.
114ஆவது மரணம்
அக்குரஸ்ஸை பிரதேசத்தைச் சேர்ந்த, 51 வயதான பெண் ஒருவர், கராபிட்டி போதான வைத்தியசாலையில் இருந்து கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவ்வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்றுமுன்தினம் (27) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், நாட்பட்ட சிறுநீரக நோயுடன், கொவிட்-19 நியூமோனி, என அறிவிக்கப்பட்டுள்ளது.
115ஆவது மரணம்
கொழும்பு 13 (கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை) பிரதேசத்தைச் சேர்ந்த, 90 வயதான பெண் ஒருவர், கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (29) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
116ஆவது மரணம்
கொழும்பு 10, மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த, 78 வயதான ஆண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்றுமுன்தினம் (27) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 உடனான நுரையீரல் செயலிழப்பு, என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment