Tuesday, November 10, 2020

ஐந்தாவது தடவையாகவும் ஐபிஎல் சம்பியனானது மும்பை இந்தியன்ஸ்




டுபாயில் டெல்லி கப்பில்ஸ் அணிக்கெதிராக  நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் 5 விக்கட்டுக்களால் வெற்றிபெற்று மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது  . 

 ஐபிஎல் வரலாற்றில் ஐந்துமுறை சம்பியன் பட்டம் வென்ற அணி  என்ற பெருமையையும் பெருமையையும் மும்பை இந்தியன்ஸ் தனதாக்கிக்கொண்டது. 

இன்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்றதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கப்பிடல்ஸ் ஒரு கட்டத்தில்  22 ஓட்டங்களுக்கு மூன்று விக்கட்டுக்களை இழந்து தடுமாறியது. இருப்பினும் ரிஷப் பாண்ட் மற்றும் அணித்தலைவர் ஷ்ரயாஸ் ஐயர் ஆகியோரின் சிறப்பான நான்காவது விக்கட்டுக்கான இணைப்பாட்டம் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் கௌரவமான 156 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி எந்தவிதமான சிரமமும் இன்றி 5விக்கட்டுக்களை மாத்திரமே இழந்து 9 பந்துகள் மீதமிருந்தநிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.



இறுதிப் போட்டியில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 68 ஓட்டங்களைப் பெற்று மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு வழிகோலிய அணித்தலைவர் ரோஹித் சர்மா, ஐபிஎல் வரலாற்றில் வென்ற 6வது சம்பியன் பட்டம் இதுவாகும். 2009ம் ஆண்டு டெக்கான் சார்ஜஸ் அணிக்காக விளையாடியபோது வீரராக வெற்றிபெற்ற சர்மா, அதனைத்தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துகொண்டபின்னர் 2013, 2015, 2017, 2019 மற்றும் இம்முறை 2020லும் சம்பியன் பட்டம் வென்று அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment