Wednesday, November 25, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் நிலை 3வது கட்டத்தில் !

 



தற்போதைய நிலையில் இலங்கையின் கொரோனா வைரஸ் பரவல் நிலைமையானது 3வது கட்டத்தில் உள்ளதாக கொவிட்-19தடுப்பிற்கான தேசிய செயலணி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி, கொவிட் தடுப்பு செயலணியின் தலைவர் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா , சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன ஆகியோர் தலைமையில் நடைபெற்ற செவ்வாய்க்கிழமை ( 24.11.2020) நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 4 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன (24) அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்கனவே 90 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 4 மரணங்களுடன, இதுவரை 94 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றையதினம் (23) கொவிட்-19 தொடர்பான 2 மரணங்களும் நேற்று முன்தினம் (22) (தற்போது அறிவிக்கப்பட்ட 2 மரணங்களுடன்) 4 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது அறிவிக்கப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் 3 ஆண்களும் உள்ளடங்குவதோடு, இவர்களில் இருவர் இன்றும் (24)இ இருவர் நேற்று முன்தினமும் (22) மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மரணமடைந்தவர்கள், கினிகத்தேனை, சியம்பலாபே, கொழும்பு 15, அட்டுலுகம பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.

91ஆவது மரணம்

கினிகத்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்தஇ 74 வயதான பெண் ஒருவர், கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ராகமை போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (22) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19  தொற்றுடன் வயிற்றோட்டத்தினால் ஏற்பட்ட பல அங்கங்கள் செயலற்றுப் போனமை, என அறிவிக்கப்பட்டுள்ளது.

92ஆவது மரணம்

சியம்பலாபே தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த, 54 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (22) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், நாட்பட்ட சிறுநீரக நோய், கொவிட்-19 தொற்றுடன் உக்கிரமடைந்தமை, என அறிவிக்கப்பட்டுள்ளது.

93ஆவது மரணம்

கொழும்பு 15 (மட்டக்குளிஃமோதறை) பிரதேசத்தைச் சேர்ந்த, 73 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் இன்று (24) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், பக்கவாதம் மற்றும் கொவிட்-19  தொற்று காரணமான நியூமோனியா நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.

94ஆவது மரணம்

பண்டாரகம, அட்டளுகம பிரதேசத்தைச் சேர்ந்த, 42 வயதான ஆண் ஒருவர், கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, பாணந்துறை ஆதார வைத்தியசாலையிலிருந்து ஐனுர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (24) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19  தொற்றுடன் நாட்பட்ட கல்லீரல் தொற்று உக்கிரமடைந்தமை மற்றும் மூளை வீக்கமடைந்தமை, என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment