Sunday, November 22, 2020

தீவிரமடையும் இராஜதந்திர முறுகல் ! ஜாலியவிற்கு ராஜபக்ஸ அரசாங்கம் வழங்கிய சட்டக் காப்பை நிராகரித்தது அமெரிக்கா

 



அமெரிக்காவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவிற்கு எதிரான நிதி மோசடி தொடர்பான வழக்கில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இராஜதந்திர சட்டக் காப்பை அமெரிக்கா நிராகரித்துள்ளது. 

அமெரிக்காவில் இலங்கைக்கான புதிய தூதரகக் கட்டடத்தைக் கொள்வனவு செய்வதில் பண மோசடி செய்தமை, குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தை மோசடி செய்தமை உட்பட ஜாலியவுக்கு எதிரான ஐந்து குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

வெளிநாட்டுத் தூதுவருக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் குற்றப்பத்திரம் தாக்கல் செய்த முதலாவது சம்பவம் இது என்பதுடன், இலங்கைத் தூதுவர் ஒருவருக்கு வெளிநாட்டில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டமையும் இதுவே முதற் தடவையாகும்.  





No comments:

Post a Comment