வடக்குக்கும் மத்திய மலைநாட்டிற்கும் வழங்கிவருகின்ற அவதானத்தை இந்தியா சிங்களவர்கள் அதிகமாக வாழும் தென்பகுதிக்கும் வழங்கவேண்டும் என்று இந்தியாவிடம் இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கைக்கு இன்றையதினம் விஜயம் செய்திருந்த இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சந்தித்த போதே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்தியா வடக்கிலும் மத்திய மலைநாட்டிலும் பாரியளவிலான வீடமைப்புத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது. இதனை தென்பகுதியிலும் இந்தியா செய்யமுடியும் என்று பிரதமர் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்த அவர் தென்பகுதிக்கும் அத்தகைய திட்டத்தை விஸ்தரிப்பதற்கு இந்தியா ஒத்துழைக்கும் என்று கூறினார்.
.
No comments:
Post a Comment