Tuesday, November 3, 2020

பெருமளவில் வாக்காளர்கள் வருவதால் ஜனநாயக மாற்றம் குறித்த நம்பிக்கை அதிகரிப்பு

 


இன்று நவம்பர் 3ம் திகதி அமெரிக்காவில் நடைபெற்றுவரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பெரும் எண்ணிக்கையானவர்கள் வாக்களித்துவரும் நிலையில் ஜனநாயக மாற்றம் இடம்பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாக அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரியொருவர் குளோப் தமிழுக்கு தெரிவித்தார். 

 தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

"அமெரிக்காவில் ஒருபோதும் தாம் தேர்தல் காலத்தில் அரசியல் வன்முறை அச்சுறுத்தல்களைக் கண்டதில்லை ஆனால் அதுவே அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. இருந்தபோதிலும் அதிர்ஷ்டவசமாக அதிகளவான மக்கள் வாக்களிப்பதற்காக வந்துகொண்டிருக்கின்றார்கள்.அது ஜனநாயக மாற்றத்திற்கான சிறந்தவிடயமாகும்" என்று அந்த சிரேஷ்ட இராஜதந்திரி குறிப்பிட்டார். 



இதுவரை கிட்டத்தட்ட 10 கோடி மக்கள் வாக்களித்து விட்டார்கள். சென்ற முறை 2016-ல் 13.63 கோடி மக்கள் வாக்களித்தார்கள். இம்முறை 16 கோடி வரைகூட செல்லலாம் என கணிக்கப்படுகிறது. தற்போதைய வாக்களிப்பே, மொத்த வாக்காளர்களில் 40ம% -த்தை தொட்டுவிட்டது. 

 அமெரிக்காவின் வாக்களிக்கும்  முறை இலங்கை போன்றோ இங்கிலாந்தைப் போன்றோ அமையவில்லை.  தேர்தல் திகதி என்ற அறிவிக்கப்பட்ட திகதி க்கு 5-6 வாரங்களுக்கு முன்னர் கூட சில மாநிலங்களில் வாக்கு அளிக்க முடியும். அப்படிப்பட்ட ஏற்பாடெல்லாம் செய்யப்பட்டுள்ளது. 


இலங்கையில் இருப்பதைப்போல நாடு தழுவிய அதிகாரம் படைத்த ஒர் அமைப்பு அங்கே இல்லை. மாநிலத்திற்கு மாநிலம் தேர்தல் சட்டங்கள் வேறுபடுகின்றன. வாக்களிக்கும் வயது மட்டும் அனைத்து மாநிலங்களிலும் 18 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.                         

                                                                                 


                       

பொதுவாக ஜனாதிபதியாக  இருப்பவர் தேர்தலில் நிற்பாரேயானால் அவர் வெற்றி பெறுவதே அந்நாட்டு பாரம்பரியம். ஆனால் ஜனாதிபதி டிரம்ப் வெற்றி பெறமாட்டார் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. அவ்வாறு நடந்தால், கடந்த 40 வருடங்களில் தேர்தலில் தோற்கும்  அவர் மூன்றாவது ஜனாதிபதியாக இருப்பார். 




  அமெரிக்காவில் உள்ள நண்பரொருவரின் தகவலின் படி ,வாக்காளர் சதவீதம் 55 சதவீதத்திற்கு மேலாக சென்றால் டிரம்பே வெல்வார் என கணிக்கின்றார். அதாவது தேர்தல் தினம் அன்று (இன்று - நவம்பர் 3) அதிக மக்கள் குறிப்பாக வெள்ளையர்கள் வாக்களிக்க வந்தால் டிரம்ப்தான் வெற்றி பெறுவார் என்பது அவரது கணிப்பு. ஆனால் இரண்டு காரணிகளை மறந்து விடக்கூடாது. 


ஒன்று கொரானாவின் பாதிப்பு. இரண்டு லட்சத்து முப்பாதியிரம் நபர்கள் இறந்துவிட்டார்கள். அக்டோபர் மத்தியிலிருந்து மீண்டும்  தினமும் இறப்பு விகிதம் அதிகரித்து  கொண்டே செல்கின்றது. சுமார் 800 பேர் தினமும் இறக்கின்றார்கள். இரண்டாவது, ஒர் ஆப்பிரிக்க அமெரிக்கர் போலிஸ்காரர்களினால் பட்டப்பகலில், ஒரு பொது இடத்தில்  இறந்துபோனபின் அந்நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பு. அதை டிரம்ப் நிர்வாகம் கையாண்டவிதம் இதுவும் மக்களின் மீது தாக்கம் ஏற்படுத்தியிருக்கும் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. 


.

No comments:

Post a Comment