Thursday, August 20, 2020

ஐக்கிய தேசியக்கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியல் உறுப்புரிமை யாருக்கு?



ஐக்கிய தேசியக்கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது தொடர்பான  இழுபறி நிலைக்கு தீர்வுகாணப்படும் வரையில் அந்தக்கட்சியக்கு கிடைத்துள்ள ஒரே ஒரு தேசியப்பட்டியல் ஆசனம்  வெற்றிடமாக இருக்கும் என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக ஐக்கிய தேசியக்கட்சியின பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் இடம்பெறும் அமர்வாக இன்றைய அமர்வு நடைபெறவுள்ளது. 16வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று இடம்பெறவுள்ள மொத்த உறுப்பினர்கள் 225 பேரில் 223 உறுப்பினர்கள் மாத்திரமே இன்று பங்கேற்கவுள்ளனர்.

தேரர்களின் எமது மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை சார்பாக தேசியப்பட்டியலுக்கு தெரிவுசெய்யப்பட்டவர்களின் பெயர்கள் இன்னமும் இறுதி செய்யப்படாமையே இதற்கு காரணமாகும்.

கடந்த 15 வது பாராளுமன்றத் தேர்தலில்  ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயரிலான கூட்டணியாக போட்டியிட்டு 5,098,916 வாக்குகளைப் பெற்று நேரடியாக பெற்ற 93 ஆசனங்கள் தேசியப்பட்டியல் ஊடாகப் பெற்ற 13 ஆசனங்கள் அடங்கலாக 106 ஆசனங்களைப் பெற்றது. 

இம்முறை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவை அடுத்து சஜித் பிரேததாஸ தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பு தனித்து சென்ற நிலையில் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் போட்டியிட்ட  ஐக்கிய தேசியக்கட்சி ஒட்டுமொத்தமாக 249,435 வாக்குகளையே பெற்றது. 

எந்தவொரு ஆசனத்தையும் நேரடியாக பெறவில்லை. ஒரே ஒரு தேசியப்பட்டியல் ஆசனமே அதற்கு கிடைத்துள்ளது. அந்த ஆசனத்திற்காக ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக இன்னமும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு பெயர் பரிந்துரைக்கப்படவில்லை. இந்த நிலையில் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் ஆசனம் யாருக்கு செல்லவேண்டும் என்பது தொடர்பாக கட்சிக்குள் இரண்டு விதமான நிலைப்பாடுகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கட்சியின் தலைமைப்பதவிக்கு தெரிவாகின்றவருக்கே தேசியப்பட்டியல் கிடைக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் கட்சியின் ஒரு சாரார் உள்ளனர்.தேசியப்பட்டியல் ரணில் விக்கிரமசிங்கவிற்கே வழங்கப்படவேண்டும் என மற்றுமொரு சாரார் உள்ளனர்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் விடயம் தொடர்ந்தும் இழுபறியில் இருந்துவரும் நிலையில் தமக்கே ஆசனம் வழங்கப்படவேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க கூறியிருந்தமை நினைவுகூரத்தக்கது . பொதுத் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட போது தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக தாக்கல் செய்திருந்த தேசியப்பட்டியலுக்கான பெயர்களில் ஜோன் அமரதுங்கவின் பெயரே முதலில் குறிப்பிடப்பட்டிருந்தது.


ஐக்கிய தேசியக்கட்சியின் 29வது பெயர் கொண்ட தேசியப்பட்டியல் விபரம் பின்வருமாறு:

1) John Amaratunga,

 2) Karunasena Kodithuwakku, 

3) Ashubodha Marasinghe, 

4) Tilak Marapana  

5) Saman Rathnapriya Silva

6)Daya Pelpola

7) Ronald Chithranjan Perera PC

8) Nissanka Nanayakkara

9) Sudath Chandrasekera

10) Aruna Felix Perera

11) Manoj Chaminda Cooray

12) Achini Herath

13) Prasanna Shamal Senarath

14) Abdul Satthar Mohamed Misbah

15) Lasantha Gunawardana

16) H.W. Cyril

17) Winston Pathiraja

18) Sunil de Silva

19) Jayaraja Chandrasekera

20) S.D. Nelson Ariyawansa

21) Nagalingam Vishnukanthan

22) Amarasiri de Zoysa

23) Prishantha Gunawardhane

24) Marina Basheer Abdeen

25) Digol Gunawardena

26) Rohitha Bogollagama

27) Lalith Prasanna Perera

28) Sirimasiri Hapuarachchige 

29) S.A.B. Herath

No comments:

Post a Comment