Tuesday, August 18, 2020

நுரைச் சோலை அனல் மின்நிலையம் செயலிழப்பு: மேலும் மின்தடைகள் ஏற்படுமா?



நுரைச் சோலை அனல் மின்நிலையம் செயலிழந்துள்ளதால் அடுத்துவரும் தினங்களிலும் மின்சாரத்தடை ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் இடம்பெற்ற மின்சார தடையின் போதே நுரைச்சோலை அனல் மின்நிலையம் செயலற்றுப்போனதாக .இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் சுலக்ஸனா ஜயவர்த்தன தெரிவித்தார்.


இலங்கையின் தேசிய மின்சாரக் கட்டமைப்பிற்கு சீனாவினால் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை மின்நிலையம் கணிசமானளவிலான மின்சாரத்தை வழங்கிப் பங்களிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

நாளாந்தம் நாட்டின் தேவைக்காக 2500 முதல் 2600 மெகா வாட் வரையான மின்சாரம் விநியோகிக்கப்படுகின்ற நிலையில் நுரைச்சோலை மின்நிலையம் இதில்  810 மெகா வாட் மின்சாரத்தை விநியோகிக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. 

இலங்கை மின்சார சபை வட்டாரங்களின் தகவல்களுக்கமைய செயலிழந்துள்ள நுரைச்சோலை மின்நிலையத்தின் செயற்பாடுகளை முழுமையாக ஆரம்பிப்பதற்கு இன்னமும் இரண்டு மூன்று நாட்கள் செல்லும் எனத் தெரியவருகின்றது. 

பிந்திய குறிப்பு 

இதனிடையே நுரைச் சோலை மின்நிலையம் முற்றாகச் செயலிழந்து விட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல் பொய்யானதென இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

 நேற்றையதினம் நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டதால் நுரைச் சோலை மின் நிலையத்தில் உள்ள கொதிகலன்கள் 500 பாகை செல்ஸியஸில் இயங்கியமையால் கடும் கொதிநிலையில் இருந்து 200 பாகை செல்ஸியஸ் அளவிற்கு குளிர் நிலையை அடை வேண்டியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்காகவே இரண்டு மூன்று நாட்கள் தேவைப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நேற்றையதினம் நாடளாவிய ரீதியாக ஏற்பட்ட மின் தடை குறித்து ஆராய்வதற்காக ஒரு சுயாதீன குழு உட்பட இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 



No comments:

Post a Comment