Saturday, October 3, 2020

2வது தடவையாக ஜனாதிபதி ஆகவேண்டும் என்பதனால் ஈஸ்டர் தாக்குதல் விடயத்தில் இப்படி நடந்துகொண்டாரா மைத்திரி ?



மைத்திரிபால சிறிசேன இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி பதவி வகிக்க எதிர்பார்த்திருந்ததுடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது இதற்கு கரும்புள்ளியை ஏற்படுத்தியதனால் தானும். அப்போதிருந்த பொலிஸ் மா அதிபரும் இத்தாக்குதலுக்காக முறையற்ற விதத்தில் குற்றவாளிகளாக்கப்பட்டதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஹேமசிறி பெர்னாண்டோ இதனை தெரிவித்தார். அவர் ஆணைக்குழு முன்னிலையில் நேற்று 8 வது தடவையாக சாட்சியமளித்தார்.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்டம் தினம், காலை தன்னை தொடர்புகொண்ட முன்னாள் அரச புலனாய்வு பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தன மெத்தடிஸ்ட் ஆலயம் உள்ள இடம்குறித்து வினவியதாக தெரிவித்தார். கொள்ளுப்பிட்டி மெத்தடிஸ்ற்ற வித்தியாலயத்திற்கு அருகாமையில் அவ்வாறான தேவாலயமொன்று இருப்பதாக ஹேமசிறிபெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஏன் இவ்வாறு வினவுகிறீர்கள் என கேட்டபோது கத்தோலிக்க ஆலயத்திற்கு அல்ல , மெத்தடிஸ்ற்ற ஆலயம் மீது தாக்குதல் நடாத்தப்படலாமென நிலந்த ஜயவர்த்தன தெரிவித்ததாகவும் ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இத்தகவல்கள் கிடைத்ததன் பின்னர் இலங்கையில் எந்தவொரு இடத்திலேனும் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றதா என அரச மேலதிக சொலிசி;ட்டர் ஜெனரால் வினவிய போது நான் அலுவலகத்த்pற்கு செல்ல வாகனத்தில் ஏறும் போது ஹோட்டல் ஒன்றில் வெடிச்சம் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக நண்பர் ஒருவர் தொலைபேசி அழைப்பின் மூலம் தெரிவித்தார்.

பின்னர் அலுவலகத்திற்கு சென்று தகவல்களை அறிந்துகொண்டேன். காலை 11 மணியளவில் அப்போதய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக அறிந்து கொண்டேன் ஒரு மணி நேரத்திற்கு முன்னர் இதுகுறித்து அறிவித்தனர். எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பொன்றை ஏற்படுத்த் எந்தவொரு நிலைமையிலும் நீங்கள் இக்கூட்டத்திற்கு செல்லவேண்டாமென தெரிவித்தார். இலங்கையில் அப்போது குண்டு வெடிப்பு இடம்பெறும் என்பதை அறிந்தாஇ அவர் அக்கூட்டத்திற்கு செல்லவேண்டாமென கூறினாரா என அரச மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஹேமசிறி பெர்னாண்டோ அவர் அறிந்து; வைத்திருந்தார். நானும் இலங்கையில் காணப்பட்ட குழப்ப நிலை குறித்து கூறினேன்.

தான் பாதுகாப்பு அமைச்சிற்கு பொலிஸ் மா அதிபர் முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு பதவிநிலை உத்தியோகத்தர்கள் போன்று புலனாய்வு துறை அதிகாரிளையும் பாதுகாப்பு அமைச்சிற்கு அழைத்திருந்தேன். அந்நேரத்தில் பிரதமர் அவ்விடத்திற்கு வந்து 15 விநாடிகள் தங்கி சென்றார். நாங்கள் இதன்போது அப்போதிருந்த நிலமை குறித்தும் சடலங்கள், எடுத்துச்செல்லப்படுவது குறித்தும் கலந்துரையாடினோம்.

தகவல்கள் அனைத்தும் புலனாய்வுத் துறையிடம் காணப்பட்டது. சம்பவம் இடம்பெற்று இரண்டு வாரங்கள் சென்றபோது சுமார் 200 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களது பாதுகாப்பு இல்லங்கள் குறித்தும் கண்டறியப்பட்டது. இத்தகவல்கள் ஏப்ரல் 9 ம் திகதி புலனாய்வுத் துறை இணைப்பு கூட்டத்திலும் புலனாய்வு பிரிவினால் பேசப்பட்டது. குண்டுதாரிகள் குண்டை பொருத்தியதன் பின்னர் அவர்களை நிறுத்த முடியாதென ஹேமசிறி பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

கிங்ஸ்பெரி ஹோட்டலில் குண்டை வெடிக்கச் செய்த நபர் 20 ம் திகதி இரவு வீடு சென்று வந்துள்ளார். சஹ்ரானும் இல்ஹாமும் சங்கிரில்லா ஹோட்டலுக்கு வெளியே சென்று மீண்டும் வந்துள்ளனர். பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தால், வீதிச் சோதனைகளின் போது நிறுத்தி சோதனை செய்திருக்கலாம் என சொலிசிட்டர் ஜெனரால், கேள்வி எழுப்பினார்.

இதன்போது பதிலளித்த ஹேமசிறி பெர்னாண்டோ இலகுவாக கைதுசெய்திருக்கலாம் என்பது குறித்து எனக்கு தெரியாது. எனினும் கைதுசெய்யப்பட்டிருக்காலம். எமது நாட்டில் உள்ள புலனாய்வு அதிகாரிகளுக்கு இதனை அறிந்து கொள்ள முடியாது போனது பிரச்சினை இல்லையா என ஹேமசிறி பெர்னாண்டோ கேள்வி எழுப்பினார். தாக்குதல் நடாத்தப்படும் வரை எமது புலனாய்வு பிரிவினருக்கு இதனை உறுதி செய்ய முடியாமல் போவிட்டது.

இத்தகவல்கள் அரச புலனாய்வு சேவைக்கே பொறுப்பானதாகும். ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைமை நீதிபதி வனாத்தவில்லுவில் ஆயுத களஞ்சிய சாலையுடன் சஹ்ரான் தொடர்பு பட்டிருந்ததாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் நீங்கள் அறிந்து வைத்தீர்களா, அப்போது சஹ்ரான்கள் குண்டுகளை தயாரித்தது, மனிதர்களுக்கு விற்பனை செய்வதற்கா, என கேள்வி எழுப்பினார். இல்லை என ஹேமசிறி பெர்னாண்டோ பதிலளித்தார். எனக்கு ஏப்ரல் 23 ம் திகதி பொலிஸ் மா அதிபர் அழைப்பொன்றை விடுத்திருந்தார். பதவியை ராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி கூறியதாக அவர் தெரிவித்தார். பின்னர் நான் ஜனாதிபதியை சந்தித்து கூறினேன்இ பொலிஸ் மா அதிபர் எனக்கு கீழ் உள்ளார் என கூறினேன். நானும் ராஜினாமா செய்வேன் எம்மிடம் வாக்குமூலமொன்;றை பெற்றுக்கொள்ளாது. இதற்கு பொறுப்புக்கூற வேண்டியது. பாதுகாப்பு செயலாளரும் பொலிஸ் மா அதிபரும் என நேற்று மக்களுக்கு அற்றிய உரையின் போது நீங்கள் கூறினீர்கள் அவ்வாறு கூறுவது சரியில்லை. பின்னர் நான் ராஜினாமா கடிதத்தை அனுப்பி விட்டு அமைச்சிலிருந்து வெளியேறினேன் என ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்தார்.

மைத்திரிபால சிறிசேனவுக்கு இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாவதற்கான கனவு இருந்தது. அவர் அதற்கு தயாராகவே இருந்தார். இதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கரும் புள்ளியை ஏற்படுத்தியது. என்னையும், பூஜித்தவையும் இதற்கு குற்றவாளிகளாக்கினர். எவ்வாறாயினும் குறுக்கு விசாரணைகளைத் தொடர்ந்து ஹேமசிறி பெர்னாண்டோ தகவல் அளிக்கையில் தனது உடல் நிலை சீரற்று காணப்படுவதனால் வாக்குமூலம் பெறுவதை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழு சாட்சி பெறுவதை ஒத்திவைத்தது.

No comments:

Post a Comment