Tuesday, October 13, 2020

5000 தாண்டிய இலங்கையை விட 86 நாடுகளில் குறைந்த எண்ணிக்கையில் கொரோனா தொற்றாளர்கள்

 


இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 145 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில்  இலங்கையில் இதுகால வரையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5000ஐக் கடந்துள்ளது. 

இதனையடுத்து உலகளாவிய ரீதியில் கொரொனா தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள 216 நாடுகளில் இலங்கை 5038 தொற்றாளர்களுடன் 130வது இடத்தில் உள்ளது. இலங்கையை விட 86 நாடுகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவு என்பது சுட்டிக்காட்டத்தக்கது. 

தற்போதைய நிலையில் இலங்கையில் 1697 பேர் மாத்திரமே கொரோனாவிற்காக சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்கத்கது.

நாட்டில் மேலும் 145 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 48 பேர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் எனவும் ஏனைய 97 பேரும் குறித்த தொழிலாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இதுவரை மினுவங்கொட கொவிட்-19 தொற்று கொத்தணியில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 591ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இதுவரை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஐயாயிரத்து 38ஆகப் பதிவாகியுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து இதுவரை மூவாயிரத்து 328 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இன்னும் ஆயிரத்து 552 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

தற்போதைய நிலையில் உலகில் 38,239,042 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதில் 28,736,285 பேர் குணமடைந்துள்ளனர். இவர்களில் 1,088,158 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக குறிப்பிடப்படுகின்றது. ஆனால் வெளிநாடுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கையைச் சேர்ந்தால் எண்ணிக்கை 80ஐத் தாண்டும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. 

No comments:

Post a Comment