Sunday, October 18, 2020

கடும் பொருளாதார வீழ்ச்சி தொடர்பான IMF, உலக வங்கி எதிர்வுகூறலுக்கு மத்தியில் முக்கிய அறிக்கையை தாமதிக்கும் இலங்கை அரசாங்கம்

 

இது ஆவணப்படமாகும்

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பான சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியவற்றின் பாதகமான எதிர்வுகூறல்களுக்கு மத்தியில் இலங்கையின் புள்ளிவிபரவியல் திணைக்களம் முக்கியமான அறிக்கையை தாமதித்துள்ளது. 

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பான ஏப்ரல் மாதம் முதல் ஜுன் மாதம் வரையான தவணைக்கான அறிக்கையை கடந்த மாதம் (செப்டம்பர்) 16ம்திகதி  இலங்கை வெளியிடவேண்டும் . ஆனால் அதனை புள்ளிவிபரவியல் திணைக்களம் இவ்வாண்டு இறுதிவரை தாமதித்துள்ளது. 

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.6% ஆல் வீழ்ச்சியடையும் என சர்வதேச நாணய நிதியம்(IMF)  எதிர்வுகூறியிருந்த அதேவேளை 6.7% ஆல் வீழ்ச்சியடையும் என உலக வங்கி சுட்டிக்காட்டியிருந்தது.

ஆசியப்பிராந்தியத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பாக அறிக்கைகளை இன்னமும் வெளியிடாத ஒரு சில நாடுகளில் இலங்கையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணயநிதியம் மற்றும் உலக வங்கியின் எதிர்வுகூறல்களுக்கு மத்தியிலும் 2020 நிறைவில் இலங்கை சாதகமான பொருளாதார வளர்ச்சியை காண்பிக்கும் என  நிதி மூலதன சந்தைகள் மற்றும் அரச தொழில்முயற்சியாண்மைக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.  



இலங்கை கடுமையான கடன் நெருக்கடியில் உள்ளவிடயம் உட்பட பல பொருளாதார விடயங்களை தெட்டத்தெளிவாக வெளிப்படுத்திய கொழும்பு பல்கலைக்கழக பொருளியில் துறை பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கத்தின்  நேர்காணல் இதோ



No comments:

Post a Comment