Monday, October 19, 2020

இராணுவத்திற்கு எதிராக ஆடைத்தொழிற்சாலை பணியாளர்கள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு

 


மினுவங்கொடை  ஆடைத்தொழிற்சாலை பணியாளருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து ஆடைத்தொழிற்சாலைப்பணியாளர்கள்  மனிதத்தன்மையற்ற நிலையில் மிகவும் மோசமான முறையில் இராணுவத்தினரால் நடத்தப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  அவர்களது முழுமையான அறிக்கை பின்வருமாறு:



சமிலா துஷாரி, சந்ரா தேவநாராயண, அஷிலா தந்தெனிய மற்றும் அருட்சகோதரி நொயெல் கிறிஸ்டின் பெர்ணாண்டோ ஆகிய நாங்கள் மிகப் பெரும்பான்மையாகப் பெண்களைக் கொண்ட சுதந்திர வர்த்தக வலயத் தொழிற்சாலை ஊழியர்களுடன் பரந்த அளவிற்குப் பணியாற்றும் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றோம். இப்பாராதூரமான பிரச்சினையினை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்து தன்னிச்சையான முறையில் சட்டவிரோதமாகத் தொழிலாளர்கள் சுற்றிவளைக்கப்பட்டு குரூரமாகவும் மனிதாபிமானமற்ற முறையிலும் அல்லது அவமானப்படுத்தும் முறையிலும் நடத்தப்பட்டமை தொடர்பிலும் அரசியலமைப்பின் உறுப்புரைகள் 11, 12(1), 12(2), 13(1), 13 (2), 14(1) (h)  ஆகியவற்றின் கீழ் உத்தரவாதப்படுத்தப்பட்ட நடமாட்ட சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டமை தொடர்பிலும் பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் சட்டத்தின் சமமான பாதுகாப்பு மட்டுப்படுத்தப்பட்டு பாகுபாடு காட்டப்பட்டமை தொடர்பிலும் விசாரணை ஒன்றினை முன்னெடுப்பதற்காக நாங்கள் இந்த முறைப்பாட்டினை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கின்றோம்.

கொவிட் 19 தொற்றினைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் (NOCPCO) தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராகவும் 98 தொழிலாளர்களையும் சுற்றிவளைப்பதற்காகச் சென்ற இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகவும் இந்த முறைப்பாடு சுற்றிவளைக்கப்பட்ட 98 தொழிலாளர்களின் சார்பில் முன்வைக்கப்படுகின்றது. தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் என்கின்ற ரீதியிலும் இராணுவத் தளபதி என்கின்ற ரீதியிலும் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா பிரதிவாதியாகக் கருதப்படுகின்றார். இவரின் பணிப்புரை இன்றி இராணுவ அதிகாரிகள் இந்த நடவடிக்கையினை நடத்தியிருக்க முடியாது. சமூகமளித்த இராணுவ அதிகாரிகள் ஒவ்வொருவரினதும் பெயர்களை நாம் எதிர்காலத்தில் அறிந்துகொண்டால் அவற்றினை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கான உரிமையினை நாம் கொண்டுள்ளோம்.  

முறைப்பாட்டிற்கான பின்புலம் 

2020 ஒக்டோபர் 05 ஆம் திகதி, மினுவாங்கொடையிலுள்ள பிரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் 1394 ஊழியர்கள் கொவிட் 19 தொற்றினைக் கண்டறியும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களுள் 567 ஊழியர்களுக்குத் தொற்று இருப்பது அடுத்த நாள் உறுதிசெய்யப்பட்டது. எவ்வாறாயினும் இற்றைவரையில் இக்கொத்தணி 1500 இனை விட அதிகரித்துள்ளது (குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் இக்கொத்தணியுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டவர்கள்). கொவிட் 19 தொடர்பான சகல கட்டாய அரசாங்க ஒழுங்குவிதிகளையும் தான் பின்பற்றியதாக பிரெண்டிக்ஸ் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடுகின்றது. 

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களும் மனிதவலுத் தொழிலாளர்களும் பெரும் எண்ணிக்கையில் ஓரிடத்தில் அருகருகில் நெருக்கமாகப் பணியாற்றுகின்ற காரணத்தினாலும் மிக நெருக்கமாகப் பகிரப்பட்ட தங்குமிட வசதிகளில் வசிப்பதாலும் வைரசின் துரித பரவலால் பாதிக்கப்படக்கூடிய உயர் சாத்தியத்தினைக் கொண்டுள்ளனர். மனித வலுத் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கப் பிரதிநிதித்துவம் இல்லாத காரணத்தினாலும் இவர்களுக்கான பொறுப்பினை எத்தொழில்வழங்குனரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத காரணத்தினாலும் இவர்கள் அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய சாத்தியத்தினைக் கொண்டுள்ளனர்.  

ஒக்டோபர் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில், கட்டுநாயக்கவிலுள்ள லியனகேமுல்லயைச் சேர்ந்த ஆடைத் தொழிந்சாலையின் தொழிலாளர்கள் 45 பேர் (25 பெண்கள், 1 கர்ப்பிணிப் பெண் மற்றும் 2 சிறார்கள் உள்ளடங்கலாக) இராணுவத்தினால் சுற்றிவளைக்கப்பட்டு களுத்தறையிலுள்ள தற்காலிக தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு பஸ்சில் அழைத்துச் செல்லப்பட்டனர். அருகிலுள்ள விடுதியில் கொவிட் தொற்று உறுதியான தொழிலாளர்கள் வசித்த காரணத்தினால் இவர்களையும் தனிமைப்படுத்தவேண்டியுள்ளது என இத்தொழிலாளர்களிடம் கூறப்பட்டது. அவர்களை வெயாங்கொடக்கு அழைத்துச் செல்வதாகவே அவர்களிடம் கூறப்பட்டது. ஆனால் கடைசியிலே அவர்கள் களுத்தறையில் தனிமைப்படுத்தப்பட்ட இடமொன்றில் விடப்பட்டுள்ளனர். அந்த இடத்தில் தொலைபேசிச் சமிக்ஞையும் பலவீனமானதாகக் காணப்படுகின்றது. 

''எமது பொருட்களை எடுத்துக்கொண்டு பஸ்சில் ஏறுவதற்கு சில நொடிகளே எமக்கு வழங்கப்பட்டது. ஒரு மாற்று ஆடையினைக் கூட எம்மால் பொதி செய்து எடுத்துச் செல்ல முடியவில்லை. சீப்பினைக் கூட எடுத்துவைக்க முடியவில்லை! முழுப் பிரதேசமும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதால் தப்பியோட முயற்சிக்கவேண்டாம் என இராணுவம் எம்மிடம் கூறியது. இராணுவம் எங்களைக் கைதிகளைப் போலவே நடத்தியது. எங்களை ஏதோ தேசத்துரோகம் செய்தவர்களைப் போலவே நடத்தினார்கள்' – தொழிலாளர் ஒருவர்  கூறியது.

அன்றைய  தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் (12 ஆம் திகதி அதிகாலை) அவரிவத்தயினைச் சேர்ந்த 35 பெண்களும் 1 பிள்ளையும் அடங்கிய 53 பேர் தூக்கத்தில் இருந்து எழுப்பப்பட்டு இதே விதமாக அழைத்துச் செல்லப்பட்டனர். 'இரவில் வந்த இராணுவத்தினர் எமக்கு அவசியமான பொருட்களைப் பொதி செய்து பஸ்சில் ஏறுவதற்கு 10 நிமிடங்களையே வழங்கினர். இராணுவத்தினர் எங்களிடம் தாங்கள் பல இரவுகள் தூங்காமல் மிகவும் களைப்படைந்திருப்பதால் தங்களைக் காக்கவைக்க வேண்டாம் எனக் கூறினர். நாங்கள் அளவுக்கதிகமாக வேலை செய்திருந்தோம். 2 நாட்களுக்கு முன்புதான் எனக்குக் கொரொனா இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்திருந்தன. அவர்களிடம் இதனைக் கூறுவதற்குக் கூட எனக்கு அவகாசம் வழங்கப்படவில்லை. அவர்கள் யாரையும் பேச அனுமதிக்கவில்லை. அவர்கள் எம்மை பஸ்சினுள் திணித்துக் கூட்டிச் சென்றனர்' – தொழிலாளர் ஒருவர் கூறியது. 

அவர்கள் மேலும் தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்காக கட்டுநாயக்க, சீதுவ, நீர்கொழும்பு மற்றும் ஆமந்தொலுவ பிரதேசங்களுக்குச் சென்றனர். கடைசியில் நாங்கள் கட்டுநாயக்கவை விட்டு ஒக்டோபர் 12 ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கே புறப்பட்டோம்.

இறுதியாக நாங்கள் 12 மணித்தியாலங்களின் பின்னர் பிப 12.30 இற்கே களுத்தறையினை அடைந்தோம். போய்ச்சேரும் வரை எங்களுக்கு உணவோ அல்லது ஒரு துளி நீரோ கூட வழங்கப்படவில்லை. அங்கே சென்றதும் எங்களுக்குச் சிறிது உணவளித்தனர். ஆனால் அந்த உணவு சாப்பிட முடியாததாக இருந்தது. தனிமைப்படுத்தலுக்கான இடம் துப்பரவு செய்யப்படாமல் இருந்தது. கழிப்பறைகள் நீர் நிறைந்து அழுக்காகக் காணப்பட்டன. 13 ஆம் திகதி வரை எம்மை சுகாதாரப் பணியாளர்களோ அல்லது பொதுச் சுகாதார அதிகாரிகளோ பார்வையிடவில்லை. இங்கே இராணுவத்தினர் மட்டுமே இருந்தனர். நிலையத்தில் அனுமதிக்கையில் யாருக்கும் பிசிஆர் பரிசோதனை நடத்தப்படவில்லை. 'வைத்தியர் ஒருவர் எம்மைப் பார்க்க வருவார் என்ற வதந்தி அடிபட்டது. ஆனால் இதுவரை எங்களுக்கு உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை' – தொழிலாளர் ஒருவர் கூறியது.  

இன்று தொழிலாளர்களுக்குச் செருப்பு, சவர்க்காரம் மற்றும் சலவைத் தூள் போன்ற அடிப்படைப் பண்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தல் நிலையத்தில் தற்போது 400 முதல் 500 வரையான தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சில அறைகளில் 6 முதல் 7 தொழிலாளர்கள் வரை தங்கியுள்ளதாகவும் சில அறைகளில் 3 முதல் 5 வரையான தொழிலாளர்கள் தங்கியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். 30 தொழிலாளர்களுக்கு 2 குளியலறைகளும் 2 கழிப்பறைகளும் 2 வாஷ் பேசினும் வழங்கப்பட்டுள்ளன (4 வாஷ் பேசின்கள் இருந்தாலும் 2இல் மட்டுமே நீர் வருகின்றது).  

நிலையத்தினை விட்டு யாருக்கும் செல்ல முடியாது என அவர்களிடம் கூறப்பட்டுள்ளது. யாராவது ஒரு தொழிலாளருக்குத் தொற்று ஏற்பட்டால் அது அனைவருக்கும் விரைவாகத் தொற்றிவிடும் எனத் தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.ஏனெனில் தற்காலிகத் தனிமைப்படுத்தல் நிலையத்தி்ல் உரிய சுகாதார மரபொழுங்குகள் எவையும் நடைமுறையில் இல்லை. 

'அறையின் தரை தூசி படிந்துள்ளது. கழிப்பறைகள் அழுக்காக உள்ளன. எங்களுக்கு இவ்வாறு வாழ்ந்து பழக்கமில்லை. இதனால் எங்கள் அறைகளையும் கழிப்பறைகளையும் நாங்களே துப்பரவு செய்தோம். நாங்கள் இப்படியே இங்கே தொடர்ந்து வாழ்ந்தால் எங்களுக்குக் கொரொனா வராவிட்டாலும் துப்பரவற்ற இந்தச் சூழலின் காரணமாக எங்களுக்கு வேறு நோய்கள் வந்துவிடும். இச்சூழ்நிலையினை இவர்கள் சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்யாவிட்டால் நாங்கள் வாக்களித்த அரசாங்கத்தினை மாற்றும் நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம்' - தொழிலாளர் ஒருவர் கூறியது.  

'எனக்கு மாரடைப்பு வந்திருக்கின்றது. என் இதயத்தில் இரண்டு அடைப்புக்கள் உள்ளன. நான் பல்வேறு மருந்து மாத்திரைகளையும் பாவிக்கின்றேன். இங்கே இருப்பதால் எனக்குக் கொரொனா வந்தால் நான் பிழைப்பது சந்தேகம்தான். இந்த இடம் நாய்கள் வாழக் கூடத் தகுதியற்றது! இவர்களுக்கு வாக்களித்ததற்கு எங்களையே நாங்கள் அடித்துக்கொள்ளவேண்டும் போலிருக்கின்றது' - தொழிலாளர் ஒருவர் கூறியது.  

''நாங்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்தலுக்குத் தயாராக இருந்தோம். அருகிலுள்ள வாடகை வீட்டில் இரண்டு சகோதரிகளுக்குத் தொற்று உறுதியானதால் நாங்கள் சுய தனிமைப்படுத்தலுக்காக 20000 ரூபா பெறுமதியான பொருட்களைக் கொள்வனவு செய்து வீட்டில் தங்கியிருக்கத் தயாராக இருந்தோம். நாங்கள் அனைவரும் மிக அவதானத்துடனேயே இருந்தோம். இரண்டு சகோதரிகளும் கூடத் தங்களைப் பரிசோதிப்பதற்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்குத் தனிப்பட்ட முறையில்தான் சென்றனர். ஏனெனில் அவர்களின் உடல்நிலை நலிவுற்றிருந்தது. அவர்களுக்குத் தொற்று இருப்பது தெரியவந்ததும் அவர்கள் தங்களைச் சுய தனிமைப்படுத்திக் கொண்டனர். எங்களுக்கு நோய்த் தொற்று இல்லாதபோதும் நாங்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்தலுக்குத் தயாராகவே இருந்தோம்.  அரசாங்கம் அனைவரையும் பரிசோதித்துஇ தொற்று உள்ளவர்களைத் தனிமைப்படுத்தி ஏனையவர்களைச் சுய தனிமைப்படுத்தலுக்கு அனுமதித்திருக்கவேண்டும். ஏனெனில் எங்களுக்கென இணைப்பு வாடகை வீடுகளும் கழிப்பறைகளும் உள்ளன. அவர்கள் (அரசாங்கமும் இராணுவமும்) தாங்கள் அனைத்தையும் சரியான முறையில் முகாமைத்துவம் செய்வதாக நினைத்துக்கொண்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பற்றி எங்களுக்கு உபதேசம் செய்து எங்களை அடைத்துவைக்கின்றனர். ஆனால் எங்களை பஸ்சினுள் ஆடு மாடுகள் போல அடைத்து துப்பரவற்றதும் பாதுகாப்பற்றதுமான தனிமைப்படுத்தல் மையங்களில் விடும்போது இந்தப் பாதுகாப்பு மரபொழுங்குகள் எதுவும் பிரயோகிக்கப்பட்டதாகத் தெரியவில்லை'- தொழிலாளர் ஒருவர் கூறியது   

அரசாங்கத்தின் ஒழுங்குவிதிகளைப் பின்பற்றுவதற்கும் தனிமைப்படுத்தலைப் பின்பற்றுவதற்கும் நாங்கள் எதிரப்புத் தெரிவிக்கவில்லை. உரிய செயன்முறைகள் பின்பற்றப்படவேண்டும் என்றும் எங்களைக் கையாள அனுப்பப்படுபவர்கள் (இராணுவம்) எங்களை மனிதாபிமானத்துடனும் கௌரவத்துடனும் நடத்தப் பயிற்றப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்றே நாம் கேட்கின்றோம். 

நீங்கள் நள்ளிரவில் வந்துஇ பஸ்சில் ஏறுவதற்கு எங்களுக்கு 10 நிமிடங்கள் மாத்திரம் தந்துஇ நாம் எங்கே அழைத்துச் செல்லப்படுகின்றோம் மேலும் ஏன் அழைத்துச் செல்லப்படுகின்றோம் என எமக்குக் கூறாமல் எம்மை அழைத்துச் செல்ல முடியாது. கொலைகாரனைக் கைது செய்கையில் கூட அவனிடம் கைதுக்கான காரணத்தினை நீங்கள் கூறவேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அடிப்படை மரியாதையினைக் கூட ஏன்  எங்களுக்குத் தரவில்லை': - தொழிலாளர் ஒருவர் கூறியது   

 'பெண்களாகிய எம்மை அவர்கள் நள்ளிரவில் ஆடு மாடுகளைப் போல் ஏற்றிச் சென்றது மட்டுமல்லாது எங்களை எங்கே கூட்டிச் செல்கின்றனர் என்றோ அல்லது ஏன் கூட்டிச் செல்கின்றனர் என்றோ கூட எம்மிடம்  கூறவில்லை. நாங்கள் எங்கே அழைத்துச் செல்லப்படுகின்றோம் என்பதை அறிந்துகொள்ளும் உரிமை கூட எமக்கில்லையா? எங்களுக்கு என்ன நடக்கப்போகின்றது என்பதை அறியும் உரிமை கூட எமக்கில்லையா? நாங்கள் இந்த நாட்டின் கடுமையான உழைப்பாளர்கள். நாங்கள் யாசகர்களல்ல! நாங்கள் சட்டவிரோதச் செயல் எதையும் செய்யவில்லை. நாங்கள் அரசாங்கத்திற்குச் சுமையாக இருப்பவர்களல்ல. அவர்கள்தான் எம்மில் தங்கி வாழ்கின்றனர். வரட்டும் அவர்கள் அடுத்த முறை எங்களிடம் வாக்குக் கேட்டு! அவர்களுக்குத் தேர்தல் காலத்தில்தான் நாங்கள் தேவை. அவர்கள் எங்களைக் கேவலமான முறையில் நடத்துவதால்தான் நாம் இவ்வாறு பேசுகின்றோம்' என அவர்கள் கூறினர்.

நாம் இவ்வாறு நடத்தப்படுவதற்கான காரணம் நாங்கள் முக்கியமானவர்களாகவோ அல்லது செல்வந்தர்களாகவோ கருதப்படாமையினால் ஆகும். எங்கள் தவறினால் எங்களுக்குக் கொரொனா வரவில்லை. எனவே எங்களைப் பழிவாங்குவதைப் போல் அவர்கள் எம்மை நடத்தக்கூடாது. இதைத்தானா நாங்கள் எமது அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கவேண்டும்?' என அவர்கள் கோபத்துடன் கேட்டனர். 

அண்மைய நெருக்கடியினை அரசாங்கமும் இராணுவமும் கையாண்ட விதம், குறிப்பாகப் பெண் தொழிலாளர்கள் இவர்களினால் கையாளப்பட்ட விதம் சிக்கல்மிக்கதாகும். தெளிவான தகவல்களோ அல்லது விழிப்புணர்வோ இல்லாமைஇ பாதுகாப்பற்ற போக்குவரத்துஇ துப்பரவற்ற தனிமைப்படுத்தல் வசதிகள் மற்றும் தொழிலாளர்களைப் பஸ்களில் ஏற்ற முன்னரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அனுமதிக்க முன்னரும் பிசிஆர் பரிசோதனை நடத்தப்படாமை ஆகியவை பின்பற்றப்படவேண்டும் என அரசாங்கம் கூறிவரும் அடிப்படை கொவிட் 19 ஒழுங்குவிதிகளின் தெளிவான மீறல்களாகும்.

பிரதிவாதிகளால் மீறப்பட்ட அடிப்படை உரிமைகள்:

இராணுவத்தின் பின்வரும் செயற்பாடுகள் பின்வரும் அடிப்படையில் அடிப்படை உரிமைகள் மீறலாக அமைகின்றன:-

1. ஆடைத் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் 98 பேரையும் சுற்றிவளைத்து கைதுசெய்து, அழைத்துச்சென்று, களுத்தறையில் உள்ள பெயர் குறிப்பிட்டுக் கூறப்படாத ஓரிடத்தில் தடுத்துவைத்தமை உறுப்புரைகள் 12(1), 13(1) மற்றும் 13(2) ஆகியவற்றினை மீறியுள்ளது. 


2. 98 தொழிலாளர்களும் தடுத்துவைக்கப்பட்டுள்ள 'தனிமைப்படுத்தல் மையங்கள்' சட்டரீதியாக உருவாக்கப்பட்டவை அல்ல என்பதால் இவ்வாறான மையங்களில் இவர்களைத் தடுத்துவைத்திருப்பது சட்டத்தினால் உருவாக்கப்பட்ட செயல்விதிகளுக்கு அமைவானது அல்ல என நாம் குறிப்பிடுகின்றோம். எனவே பெயர் குறிப்பிடப்படாததும் சட்டவிரோதமானதுமான தனிமைப்படுத்தல் மையங்களில் இவர்களைத் தடுத்துவைத்திருப்பது உறுப்புரைகள் 12(1), 13(2), 14(1)(h) ஆகியவற்றினை மீறுகின்றமையாகும்.


3. பெண் தொழிலாளர்களின் விடுதிகளினுள் ஆண் இராணுவ உத்தியோகத்தர்கள் நுழைந்து இச்சட்டவிரோத மற்றும் தன்னிச்சையான கைதினையும் தடுத்துவைப்பினையும் நிகழ்த்தியுள்ளனர். இது உறுப்புரைகள் 12(1), 13(2) ஆகியவற்றின் மீறலாகும். 


4. பரிசோதனைகளை மேற்கொள்ளாது தொழிலாளர்களைச் சுகாதாரக் கேடுமிக்க தனிமைப்படுத்தல் மையங்களில் ஒன்றுசேர்த்து வைத்திருப்பது கொவிட் 19 தொற்றுக்குள்ளாகும் ஆபத்தினை அதிகரிக்கின்றமை உறுப்புரை 11 இனை மீறுகின்ற செயலாகும். ஏனெனில் தொழிலாளர்கள் இராணுவ அதிகாரிகளினால் மனோரீதியான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் மனிதாபிமானமற்ற முறையில் அல்லது அவமானமிகு முறையில் நடத்தப்பட்டுள்ளனர். 


5. இக்குறிப்பிட்ட தனிமைப்படுத்தல் நிலையத்தினை விட்டு இந்த 98 தொழிலாளர்களும் வெளியேறுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு எக்காரணமும் வழங்கப்படவில்லை. இது உறுப்புரை 14(1)(h) இனை மீறுகின்றமையாகும். 


6. இந்த 98 தொழிலாளர்களும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டுள்ளதுடன் அவர்களது அவசியமான பொருட்களைப் பொதிசெய்வதற்குக் கூடப் போதிய நேரம் வழங்கப்படாது, பஸ்களில் திணிக்கப்பட்டு, பெயர் தெரியாத இடங்களில் சுகாதாரக் கேடான சூழ்நிலையில் வைக்கப்பட்டுஇ உண்பதற்கு ஒழுங்காக உணவு கூட வழங்கப்படாதுஇ எந்த ஒரு மனிதனும் நடத்தப்படக்கூடாத விதமாக நடத்தப்பட்டுள்ளனர். மேலே குறிப்பிட்ட அனைத்து மீறல்களுக்கும் அப்பால் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் என்கின்ற இவர்களின் பொருளாதார வகுப்புக் காரணமாக இவர்கள் பாகுபாட்டுக்கு உட்படுத்தப்பட்டமையால் உறுப்புரை 12(2) உம் மீறப்பட்டுள்ளது.


இச்சட்டவிரோதமானதும் தன்னிச்சையானதுமான சுற்றிவளைப்பும் தடுத்துவைப்பும் மேற்கொள்ளப்பட்ட முறையின் காரணமாக கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் அச்சுறுத்தலைத் தொழிலாளர்கள் கொண்டுள்ள காரணத்தினால் பிரதிவாதிகளான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இலங்கை இராணுவ அதிகாரிகளின் நடத்தை தொடர்பாக விசாரிக்குமாறு நாம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினை வேண்டுகின்றோம்.


சமிலா துஷாரி - தபிந்து கலெக்டிவ சிறிலங்காஇ கட்டுநாயக்க

சந்ரா தேவநாராயண – ரிவொலியூசனரி எக்சிஸ்டென்ஸ் போர் ஹியூமன் டிவலப்மன்ட் (சுநுனு)இ கட்டுநாயக்க

அஷிலா தந்தெனிய - .ஸ்டேன்ட்அப் மூவ்மென்ட் லங்காஇ கட்டுநாயக்க

அருட்சகோதரி நொயெல் கிறிஸ்டின் பெர்ணாண்டோ – சரம்பிமனி கேந்திரய


No comments:

Post a Comment