Saturday, January 16, 2021

இழுபறியில் தொடரும் கிழக்கு முனைய பேச்சுவார்த்தை

 


கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை  நூறு வீதம் இலங்கையே நிர்வகிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலுள்ள துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இவ்விடயம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை குழுவுக்கும்  இடையே நடைபெற்ற பேச்சுவார்தை தோல்வியடைந்துள்ளது.

23 துறைமுக தொழிற்சங்கங்களுக்கும் கிழக்கு முனையம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் இடையில் இன்று முற்பகல் துறைமுக அமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

துறைமுகத்தை நூறு வீதம் இலங்கையே நிர்வகிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே துறைமுக தொழிற்சங்கங்கள் இன்று கலந்துரையாடலில் பங்கேற்றன.

சுமார் 2 மணித்தியாலங்களாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த அமைச்சரவை குழுவிலிருந்து இரண்டு பேர் மாத்திரமே கலந்துரையாடலில் பங்கேற்றதாக துறைமுக தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டன.

இந்திய வெளிவிவகார அமைச்சர் அண்மையில் இலங்கை வந்திருந்தபோது கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் உட்பட இந்திய திட்டங்களை முன்னெடுக்க விடமுடியாயது சீனா செல்வாக்கு செலுத்துவதாக கரிசனை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


No comments:

Post a Comment