Thursday, January 7, 2021

ஜனாஸாக்களை தகனம் செய்யவேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பாக முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் கருத்து

 


கொவிட்-19 னால் உயிரிழந்தவர்களின் உடலங்களை எரிப்பதென்ற அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு பின்னால் உள்ள காரணம் தொடர்பாக முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தனது டுவிட்டவர் பதிவில் கருத்துவெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடலங்களை தகனம் செய்ய வேண்டும் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி பாராளுமன்றத்தில் இன்று அறிவித்திருந்தார் 

இந்தப் பரிந்துரையானது, எந்தவொரு மத அல்லது பிற காரணங்களுக்காகவும் அகற்றப்படாமல் செயற்படுத்தப்படும் எனவும் சுகாதார அமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்தே முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் தனது பதிவை இட்டுள்ளார்.

கொரோனாவினால் இறந்தவர்களின் உடலங்களை தகனம் செய்யவேண்டும் ( எரிக்கவேண்டும்) என்று பரிந்துரைத்துள்ள குழுதொடர்பாக அம்பிகா சற்குணநாதன் இவ்வாறு பதிவிட்டுள்ளார் 'கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் உடலங்களை முஸ்லிம்கள் உயிரியல் ஆயுதங்களைத் தயார் செய்வதற்கு பயன்படுத்தக்கூடும் என்றும் உடலங்களைப் புதைப்பது ( அடக்கம் செய்வது) நிலத்தடி நீரை மாசுபடுத்தும் என்றும் கூறிய அங்கத்தவர்களைக் கொண்ட அதே குழுவாக இது? ஓ அப்படியென்றால் விஞ்ஞான பூர்வமான ,மனிதாபிமான பரிந்துரைகளை தவிர்த்து விஞ்ஞான ரீதியற்றதும், இனவாதமிக்கதும், கொடூரமானதுமான பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது' என அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment