Wednesday, January 6, 2021

தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது தொடர்பாக இலங்கையிடம் வலியுறுத்திய இந்தியா

 


தமிழ் மக்களின் சம உரிமை, நீதி, ஒற்றுமை மற்றும் அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது இலங்கைக்கு நன்மை பயக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும்,13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட அர்த்தமுள்ள அதிகார பகிர்விற்காக இலங்கை அரசாங்கம் காட்டும் அர்ப்பணிப்பு அவ்விடயத்தில் தாக்கம் செலுத்தும் எனவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இன்று காலை சந்தித்த பின்னர் இந்திய மற்றும் இலங்கை வௌிவிவகார அமைச்சர்கள் ஒன்றிணைந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டனர்.



இந்த சந்திப்பின் பின்னர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.

இதேவேளை, இந்திய வௌிவிவகார அமைச்சருடனான சந்திப்பில் பாதுகாப்பு, மீன் வளம் தொடர்பிலான பிரச்சினைகள், கலாசாரம், Covid-19 தொற்று நிலைமை உள்ளிட்ட பல விடயங்களைக் கலந்துரையாடியதாக வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறினார்.

பல்வேறு முதலீடுகள் மூலம் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப இந்தியாவிடம் ஒத்துழைப்பு கோரியதாகவும் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.





No comments:

Post a Comment