Tuesday, March 24, 2009

2008தேர்தல் மாபெரும் மாற்றத்தைக்கோடிட்டுக் காண்பித்துநிற்கின்றது

பேராசிரியர் எரிக் அஸ்லானர்


அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக்கட்சி வேட்பாளர் பராக் ஒபாமாவின் வெற்றிவாய்ப்புக்கள் தற்போதைய நிலையில் மிகப்பிரகாசமாகவுள்ளன. நம்பகத்தன்மை மிக்க அநேகமான கருத்துக்கணிப்புக்களுக்கு அமைய ஒபாமா குறைந்த பட்சம் 6வீதத்தால் முன்னிலை வகிக்கின்றார் என அமெரிக்க மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் அரசறிவியல்துறை பேராசிரியரும் அமெரிக்க ஜனாதிபதித்தேர்தல் தொடர்பாக 30 ஆண்டுகளுக்கு மேலான பட்டறிவைக்கொண்டவருமான பேராசிரியர் எரிக் அஸ்லானர் தெரிவித்தார்








கேள்வி :கடந்தகாலங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை அமெரிக்க ஜனாதிபதித்தேர்தலின் முக்கியத்துவம் என்ன?

பதில்:1952ம் ஆண்டிற்குபின்னர் பதவிலிருக்கும் ஜனாதிபதியோ அன்றேல் உபஜனாதிபதியோ தேர்தலில் வேட்பாளராக போட்டியிடாத ஜனாதிபதித்தேர்தல் இதுவாகும் அந்தவகையில் அடிப்படையிலேயே 2008தேர்தல் மாபெரும் மாற்றத்தைக்கோடிட்டுக் காண்பித்துநிற்கின்றது

கேள்வி : உலகிலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டுநோக்குகையில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தனித்துவம் ஏதேனும் உள்ளதா?

பதில் :ஏனையநாடுகளுடன் ஒப்புநோக்குகையில் அமெரிக்கா தனித்துவமானது ஏனெனில் எமது நாட்டில் ஜனாதிபதி முறைமையுள்ளது ஏனைய பலநாடுகளில் பாராளுமன்ற முறைமையே உள்ளது பாராளுமன்ற முறையுள்ள பலநாடுகளில் இருப்பது போன்று சட்டவாக்கத்துடன் கூடியதாக அல்லாமல் அமெரிக்காவில் சட்டவாக்கத்திற்குபுறம்பாக சுயாதீனமான வகையில் ஜனாதிபதி தேர்வுசெய்யப்படுகின்றார்

கேள்வி : அமெரிக்க ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிக்க மக்கள் தகுதிபெற்றுள்ளபோதிலும் மக்கள் நேரடியாக ஜனாதிபதியைத்தேர்ந்தெடுப்பதில்லை மாறாக தேர்தல் மன்றக்கல்லூரி வாக்குகள் மூலமாகவே ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவதாக கேள்விப்பட்டிருக்கின்றேன் இந்த நடைமுறை எதற்காக பின்பற்றப்படுகின்றது ?

பதில்: உண்மையைச்சொல்வதென்றால் அமெரிக்காவின் ஸ்தாபகர்கள் மக்களை முழுமையாக நம்பவில்லை மக்கள் உணர்ச்சியால் உந்தப்பட்டு தேர்வுகளை மேற்கொண்டுவிடுவார்கள் என அவர்கள் கவலைப்பட்டனர் ஆகவே அவர்கள் தேர்தல் மன்றக்கல்லூரிகளை ஸ்தாபித்தனர் . தேர்தல் மன்றக்கல்லூரி என்பது தனிநபர்களைக்கொண்ட குழுவாகும் அந்தக்குழுவிலுள்ளவர்கள் எவ்வாறு மக்கள் வாக்களிப்பர் என்பதை பொதுவாக பிரதிபலிக்கின்றவர்கள் ஆனால் தமது புத்திக்கு ஏற்றவகையில் தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடியவர்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறித்த அளவு தேர்தல்மன்றக்கல்லூரி வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையானது மக்கள் தொகையை அடிப்படையாகக்கொண்ட அமெரிக்க கீழ் சபையான பிரதிநிதிகள் சபையிலுள்ள அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கு சமனானதாகும் இதனுடன் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் மேல்சபையான செனற்சபையை பிரதிநிதித்துவம் செய்யும் அங்கத்தவர்களுக்கான இரண்டு வாக்குகள் உள்ளன சுமார் 27மில்லியன் மக்களைக்கொண்ட கலிபோர்னியா மாநிலத்தில் பிரதிநிதிகள் சபையைப்பிரதிநிதித்துவப்படுத்தும் 53 பிரதிநிதிகள் உள்ளனர் இதனைத்தவிர இரண்டு செனற்றர்கள் உள்ளனர் ஆகவே மொத்தமாக கலிபோர்னியாவில் 55தேர்தல் மன்றக்கல்லுர்ரி வாக்குகள் உள்ளன மறுமுனையில் பிரதிநிதிகள் சபையில் ஒரு அங்கத்தவரை மட்டுமே கொண்ட அலாஸ்கா மாநிலம் அதன் இரு செனற்றர்க்ளையும் சேர்த்து மொத்தமாக 3 தேர்தல் மன்றக்கல்லூரி வாக்குகளைக்கொண்டுள்ளது

கேள்வி :இந்த தேர்தல் மன்றக்கல்லூரி முறைமை எவ்வாறு செயற்படுகின்றது ?
பதில் : பொதுவாக தேர்தல்மன்றக்கல்லூரியானது பொதுமக்களின் வாக்குகளுக்கு ஏற்புடையதாகவே செயற்படுகின்றது பொதுமக்கள் யாருக்கு அதிகளவான வாக்குகளை அளிக்கின்றனரோ அவர்களுக்குத்தான் தேர்தல் மன்றக்கல்லூரியின் வாக்குகளும் கிடைக்கும் என்பதே பொதுவானது பொதுமக்களின் வாக்குகளை அதிகமான வென்றெடுக்கும் வேட்பாளர் அநேகமான நேரங்களில் தேர்தல்மன்றக்கல்லூரி வாக்குகளையும் வெல்வதே வழமை பெரும்பாலான மாநிலங்களில் தேர்தல்மன்றக்கல்லூரிகள் எவ்வாறு செயற்படுகின்றனவென்றால் வேட்பாளர்கள் குறித்தவொருமாநிலத்தில் ஒரு தேர்தல்மன்றகல்லூரி வாக்கால் வெற்றிபெற்றாலும் அவர்கள் அந்தமாநிலத்திற்கு உரித்தான அனைத்து தேர்தல் மன்றக்கல்லூரி வாக்குகளையும் வென்றுவிடுவர் குறிப்பாக கலிபோர்னியா போன்ற பெருமாநிலத்தில் வேட்பாளர் ஒரு தேர்தல் மன்றக்கல்லூரி வாக்கால் வெற்றிபெற்றால் அந்தமாநிலத்திற்கு சொந்தமான 55தேர்தல் மன்றக்கல்லூரி வாக்குகளும் அந்த வேட்பாளருக்கே போய்ச்சேரும் அந்த வகையில் பெருமாநிலங்களில் வெல்லுபவர்களுக்கு பெரும் சாதகமுள்ளது

கேள்வி :அமெரிக்க ஜனாதிபதித்தே;ர்தல் முறைமையில் முதல்நிலைத்தேர்தல்கள் மற்றும் சிறுகுழு அபிப்பிராயம் போன்ற பதங்கள் வாக்களிப்பின் போது பேசுபொருளாகின்றன இவை எங்கனம் இடம்பெறுகின்றது ?

பதில் :முதல்நிலைத்தேர்தல்களானது ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் ஆண்டில் ஜனவரி முதல் ஜுன் மாதம் வரையான காலப்பகுதியல் இடம்பெறுகின்றன பொதுவாக தமது கட்சியைச்சேர்ந்த நான்கு வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிப்பர் சில வேளைகளில் ஏனைய கட்சிகளின் முதல்நிலைத் தேர்தல்களிலும் வாக்களிக்கமுடியும்

கேள்வி: ஜனநாயகக்கட்சி வேட்பாளர் செனற்றர் பராக் ஒபாமா மற்றும் குடியரசுக்கட்சி வேட்பாளர் செனற்றர் ஜோன் மக்கெய்ன் ஆகியோரில் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்பு தற்போதைய நிலையில் யாருக்கு அதிகமாகவுள்ளதெனக் கருதுகின்றீர்கள் ?

பதில் :தற்போதைய நிலையில் ஒபாமாவின் வாய்ப்புக்கள் மிகப் பிரகாசமாகவுள்ளது நம்பகத்தன்மை மிகுந்த அனேகமான கருத்துக்கணிப்புகளுக்கு அமைய ஒபாமா குறைந்தபட்சம் 6வீதத்தால் முன்னிலைவகிக்கின்றார் அந்தவகையில் தெளிவான பெரும்பான்மையைப்பெறுவதற்கு மிகவும் நெருங்கிய நிலையில் ஒபாமா காணப்படுகின்றார் அதனைவிட முக்கிய விடயம் யாதென்றால் தேர்தல் மன்றக்கல்லூரிகளில் செனற்றர் மக்கெய்னின் பிரசாரப்பிரிவானது சில முக்கிய மாநிலங்களைக் கைவிட்டுள்ளது தற்போது மற்றுமொரு முக்கிய மாநிலமான கொலராடோ மாநிலத்தையும் கைவிடும் தறுவாயில் மக்கெய்னின் அணி காணப்படுகின்றது அண்மைய தேர்தல்களில் குடியரசுக்கட்சி ஆதிக்கம் செலுத்திய மாநிலமாக கொலராடோ காணப்பட்டபோதிலும் தற்போது அதுவும் மக்கெய்ன் வசமிருந்து நழுவிச்செல்வது உறுதியாகிவிட்டது

கேள்வி: இலங்கை போன்ற நாடுகளில் கடைசி நேர அனுதாப அலைகள் தேர்தல் முடிவில் தாக்கம் செலுத்துவது வரலாற்றில் நிருபணமாகியுள்ளது அந்தவகையில் தற்போது பின்னிலையிருக்கும் மக்கெய்னுக்கு சாதகமாக ஏதேனும் திடீர் திருப்பங்கள் ஏற்படச்சாத்தியமுள்ளதா?

பதில் :அப்படியான சாத்தியங்கள் இருக்கவே செய்கின்றபோதிலும் அதற்கான சாத்தியக் கூறுகள் தற்போதைய நிலையில் மிகமிக அரிதாகும் மோசமான பொருளாதார நெருக்கடி தொடர்பான செய்திகள் எப்போது உறுதிசெய்யப்பட்டதோ அப்போதே தேர்தல் எந்தத்திசையைநோக்கி செல்கின்றதென்பது ஏறத்தாழ நிச்சயமாகிவிட்டது

கேள்வி :தேர்தலில் இறுதி வெற்றியை உறுதிசெய்துகொள்ளவேண்டுமெனில் வேட்பாளர்கள் எந்த மாநிலங்களில் வெற்றிபெறுவது மிகவும் முக்கியமானது எனக்கருதுகின்றீர்கள் ?
பதில் :செனற்றர் மக்கெய்னைப்பொறுத்தவரையில் புளோரிடா மற்றும் ஒஹையோ மாநிலங்கள் மிகவும் இன்றியமையாதாதென்றாலும் அதுவும் அவரது வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு போதாது இந்தநிலையில் தற்போது பென்சில்வேனியா மாநிலத்தை வெற்றிகொள்வதில் நம்பிக்கைகொண்டிருப்பதாக மக்கெய்ன் தெரிவித்துள்ளார் ஆனால் அங்கு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புக்களோ அவர் மிகவும் பின்தங்கியிருப்பதாக தெரிவிக்கின்றன ஒபாமாவைப்பொறுத்தவரையில் அவரது வெற்றியை உறுதிசெய்வதற்கு வேர்ஜினியா மற்றும் கொலராடோ மாநிலங்கள் முக்கியமானவை அவ்விருமாநிலங்களிலும் ஒபாமா ஏற்கனவே முன்னிலை வகிக்கின்றார் அவற்றைத்தவிர புளோரிடாவும் ஒஹையோவும் ஒபாமாவிற்கு முக்கியமானது ஆனால் அவை மிக அத்தியாவயமானதல்ல

கேள்வி : இம்முறை அமெரிக்க ஜனாதிபதித்தேர்தலைப்பொறுத்தவரையில் பொருளாதாரத்தை தவிர முக்கியத்துவமான விடயங்களாக கருதப்படுவதென்ன?

பதில்: பொருளாதாரம் பொருளாதாரம் பொருளாதாரம் இதுவே தற்போது முக்கியமான விடயம் அனைவரது கரிசனையும் பொருளாதாரமாகவே உள்ளது

1 comment: