Wednesday, March 25, 2009

எவ்வித தடைகள் அச்சுறுத்தல்கள் வந்தபோதிலும் மனித உரிமைமீறல்களுக்கு எதிரான எமது போராட்டம் தொடரும்


மனோ கணேசன்

தமிழர்களை மாத்திரம் குறிவைத்து தமிழர்களை மாத்திரம் தனிமைப்படுத்தி அவமானப்படுத்தி அலட்சியப்படுத்தி தொல்லைப்படுத்தி தொந்தரவுப்படுத்தி நாள் முழுக்க காக்க வைத்து வயோதிபர்கள் பெரியவர்கள் குழந்தைகள் சிறுவர்கள் அரச ஊழியர்கள் தனியார் துறை ஊழியர்கள் பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையுமே நிற்கவைத்து ஒரு குற்றவாளிகளைப்போல் நடத்தி பதிவு நடவடிக்கைகளைச்செய்துகொண்டிருக்கின்றனர் அதனால் தான் இந்த நடவடிக்கையை தாம் நிராகரிப்பதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் மக்கள் கண்காணிப்புக்குழுவின் ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் தெரிவித்தார் .

கேசரிக்கு வழங்கிய நேர்காணல் வருவாறு

பேட்டிகண்டவர் ஆ அருண்கேள்வி: கொழும்பிலே கடந்த ஐந்துவருடகாலப்பகுதியில் தற்காலிகமாக தங்கியிருக்கும் வடமாகாணமக்கள் இருவாரங்களுக்கு முன்னர் பொலிஸ் பதிவிற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் நேற்றையதினம் கிழக்குமாகாணமக்களும் இவ்வாறான நடைமுறைக்கு உள்ளாகநேர்ந்தது. இதன் போது தமிழ் மக்கள் அனுபவித்த அவமானத்தையும் வேதனையுணர்வையும் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது என மாற்றுக்கொள்கைக்கான ஆய்வுநிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து கூறியிருந்தார் ஆனால் நாட்டின் பாதுகாப்பையும் குறிப்பாக அந்தமக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேசியபாதுகாப்பிற்கான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.
நீங்கள் இந்த நடைமுறையை எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?

பதில்: இந்த பதிவுநடவடிக்கைகளை மேலக மக்கள் முன்னணி மக்கள் கண்காணிப்புக்குழு கொள்கைரீதியாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை முதலில் கூறிவைக்கின்றோம். இதனை முற்றுமுழுதாக நாம் நிராகரிக்கின்றோம் இது தேவையற்றது பிரயோசனமற்றது நன்மைபயக்க மாட்டாது அதையடுத்து பாதுகாப்புப்பேச்சாளர் சொன்னதுபோல தேசியபாதுகாப்பு என்ற பெயரிலே செய்வதென்றால் அவர்களுக்கு அதற்கான சட்டம் வழிவகுத்துக்கொடுத்திருக்கின்றது என்று நினைக்கின்றேன் இது எப்படியிருந்தாலும் கூட இதனைச்செய்யும் போது தமிழர்களை மாத்திரம் குறிவைத்துச்செய்கின்றார்கள் தமிழர்களை மாத்திரம் தனிமைப்படுத்தி அவமானப்படுத்தி அலட்சியப்படுத்தி தொல்லைப்படுத்தி தொந்தரவுப்படுத்தி நாள் முழுக்க காக்க வைத்து வயோதிபர்கள் பெரியவர்கள் குழந்தைகள் சிறுவர்கள் அரச ஊழியர்கள் தனியார் துறை ஊழியர்கள் பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையுமே நிற்கவைத்து ஒரு குற்றவாளிகளைப்போல் நடத்தி அந்தப்பதிவு நடவடிக்கைகளை செய்துகொண்டிருக்கின்றனர் அதனால் தான் இந்த நடவடிக்கையை நாம் நிராகரிக்கின்றோம் இதுபிழையானது இன்று பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு இராணுவத்தினராலும் பொலிஸாராலும் அரசாங்கத்தினாலும் கைதுசெய்யப்பட்ட பலர் இன்று பயங்கரவாத விசாரணைப்பிரிவிலும் குற்ற விசாரணைப்பிரிவிலும் தடுப்புமுகாம்களிலும் பொலிஸ் நிலையங்களிலும் வைக்கப்பட்டிருக்கின்றனர் எல்லோரும் தமிழர்கள் அல்ல அதில் சிங்களவர்களும் இருக்கின்றார்கள் ஏன் இராணுவத்தையும் பொலிஸையும் சேர்ந்த அரச படையினரைச்சார்ந்த அங்கத்தவர்களும் அங்கு இருக்கின்றார்கள் தமிழர்கள் அனைவருமே பயங்கரவாதிகள் அல்லர் ஆனால் பயங்கரவாதிகள் அனைவருமே தமிழர்கள் என அமைச்சர் கெஹலிய கூறியிருக்கின்றார் அனைத்துதமிழர்களுமே பயங்கரவாதிகள் அல்லர் என கெஹலிய நற்சான்றிதழ் வழங்குகின்றார் அது எமக்குத்தேவையில்லை ஆனால் பயங்கரவாதிகள் அனைவரும் தமிழர்கள் என அமைச்சர் கெஹலிய சொல்லியிருந்தார் அது பிழையானது பயங்கரவாதிகள் என அரசாங்கம் சொல்லும் அனைவருமே தமிழர்கள் அல்ல கைதாகியிருப்பவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பவர்கள் அனைவரும் தமிழர்கள் அல்ல என்பது எமக்கு நன்றாகவே தெரியும் ஆகவே தமிழர்களை மாத்திரமே தனிமைப்படுத்துவதில் எவ்வித நியாயமும் கிடையாது தமிழர்கள் அனைவருமே பயங்கரவாதிகள் அல்ல பயங்கரவாதிகள் அனைவருமே தமிழர்கள் என்று சொல்லி தமது நடவடிக்கையை நியாயப்படுத்துகின்றார்கள் தமிழர்களை தொல்லைக்கு உட்படுத்துகின்றார்கள் அதுபிழை பதிவுசெய்யவேண்டாம் என்று நாம் சொல்லுகின்றோம் இல்லை செய்வேன் என்று சட்டத்தைக்காட்டி அடம்பிடிப்பார்களேயானால் எல்லோரையும் பதிவுசெய்யுங்கள் எங்கள் மக்கள் படும் துன்பத்தை அனைவரும் படட்டும் அதற்கான நியாயம் இருக்கின்றது ஏனென்றால் பயங்கரவாதிகள் என்று சொல்லுகின்றவர்களில் தமிழர்கள் மாத்திரமன்றி சிங்களவர்களும் இருக்கின்றார்கள் ஆகவே வெளிமாவட்டங்களிலிருந்து குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கொழும்பிற்கு வந்து அல்லது மேல்மாகாணத்திற்கு வந்து தற்காலிகமாக தங்கியிருக்கின்ற நபர்கள் எவராக இருந்தாலும் கூட அனைத்து இனத்தவர்களையும் அவர்கள் பதிவுசெய்யவேண்டும் அது உண்மையில் தேவையானது வந்திருக்க கூடிய நபர்கள் பயங்கரவாதிகளாக இருப்பார்களோ என்ற சந்தேகம் எமக்கிருக்கின்றது ஆகவே தான் அவர்களைப்பதிவுசெய்துகொள்ளவேண்டும் என்று சொல்வதாகக் கூறுகின்றனர் சரி பரவாயில்லை செய்யுங்கள் ஆனால் எல்லோரையும் செய்யுங்கள் தமிழர்களை மாத்திரம் தனிமைப்படுத்தாதீர்கள் அவமானப்படுத்தாதீர்கள் தொந்தரவிற்குள்ளாக்காதீர்கள் ஏனென்றால் நன்றாகத்தெரியும் நாட்டின் தேசியப்பாதுகாப்பிற்காக எதையும் செய்யத்தயாராக இருக்கின்றோம் எந்தவித அர்ப்பணிப்பும் செய்யத்தயாராகவிருக்கின்றோம் எந்தவிதத்தியாகத்தையும் செய்யத்தயாராக விருக்கின்றோம் என்று சொல்வார்களேயானால் சொல்கின்றார்கள் பெரும்பான்மையின் அரசியல்வாதிகள் சொல்கின்றார்கள் அப்படியானால் இதையும் அவர்கள் செய்யட்டுமே இன்று அப்படியல்ல தமிழர்கள் மாத்திரம் பொலிஸ் நிலையங்களிலும் ஏனைய நியமிக்கப்பட்ட இடங்களிலும் நாள்முழுக்க நின்று காவல்காத்து அவமானங்களுக்கும் துன்பங்களுக்கும் உள்ளாகும் போது அதையெல்லாம் பார்த்துக்கொண்டு வேடிக்கைபார்க்கின்றார்களே தவிர எவரும் முன்வருவதில்லை கஷ்டம் அனைத்தும் எங்கள் மக்களுக்கு மட்டும் தான் இருக்கின்றது ஆகவேதான் அனைவரையும் பதிவுசெய்யுமாறு சொல்கின்றோம்

கேள்வி: இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கனடா நாட்டின் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் சிறுபான்மையினர் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் சிறுபான்மையினர் மத்தியில் ஒருவிதமான சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக சிறுபான்மையினரைபிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் கண்டனம் வெளியிட்டிருந்தன ஆனால் நாட்டிலுள்ள அனைத்து இனத்தவர்களுக்கும் ஒரேவிதமான உரிமைகளே அரசியல் சாசனத்திற்கமைவாக இருப்பதாகவும் மாறாக எந்தவொரு இனத்தவருமே தேவையற்ற கோரிக்கைகளை முன்வைக்க கூடாது உதாரணமாக அண்மையில் ஆசிரியர்கள் முன்வைத்த ஐயாயிரம் ருபா சம்பள உயர்வு கூட தேவையற்ற கோரிக்கை இதேபோன்ற தேவையற்ற கோரிக்கைகளை முன்வைக்க யாருக்கும் உரிமையில்லை என அமைச்சர் கெஹலிய இராணுவத்தளபதியின் கருத்துக்கு தெளிவுரை வழங்கியிருந்தார் இது தொடர்பில் உங்கள் கருத்துயாது ?

பதில் : இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் கருத்துக்களைப்பற்றி பதில் சொல்வதற்கு முன்பாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பற்றி ஒன்றைச்சொல்லவேண்டும் இவர் முழந்காலிற்றும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப்போடுகின்றார் தமிழ் மக்கள் தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் இந்தநாட்டிலே சிறுபான்மைத்தேசிய இனத்தவர்கள் தங்களது அரசியல் அபிலாஷைகள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைப்பதையிட்டு கேள்விகள் எழுப்பப்படும் பொழுது அதை ஏதோ ஆசிரியர்களோ தொழிலாளர்களோ சம்பள உயர்வு கேட்டு முன்வைக்கும் கோரிக்கைக்கு சமானமாகப்பார்ப்பது ஒரு வெட்கக்கேடான விஷயமாக நினைக்கின்றேன் ஒரு கேவலமான விஷயமென்று நினைக்கின்றேன் உண்மையிலேயே எந்த அளவிற்கு இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் தேசியக்கோரிக்கைகளை ஊதாசீனப்படுத்துகின்றது அலட்சியப்படுத்துகின்றது எந்த மாதிரி அவற்றைப்பார்க்கின்றது என்பதற்கு அப்பட்டமான அடையாளம் தான் இது என்றுநினைக்கின்றேன் அவர் அதைமாத்திரம் சொல்லவில்லை கடைசியிலே சரத் பொன்சேகாவின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என்று சொல்லி முடித்திருக்கின்றார் இது அவர்களுடைய வழமையான பாணியாகும் சமீபத்தில் சமாதான செயலகத்தின் செயலாளாரும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளருமான ரஜீவ விஜேசிங்க ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் அறிக்கையைக்கண்டித்து கருத்து தெரிவித்த போது அவர் ரஜீவ விஜேசிங்கவின் தனிப்பட்ட கருத்து என்றார்கள் அதற்கு முன்புகூட ஐநா பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்திருந்தபோது அப்போதைய அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மற்றும் பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க கூட பலசந்தர்ப்பங்களில் கடுமையான வார்த்தைகளைப்பயன்படுத்தி தகாத வார்த்தைகளைப்பயன்படுத்தி அவர்களைக்கண்டித்திருந்தார்கள் விமர்சனம் செய்திருந்தார்கள் அப்போதும் கூட அவற்றை தனிப்பட்ட கருத்துக்கள் என்று கூறியே சமாளித்துவிட்டார்கள் அதுமாத்திரமல்லாமல் கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட போது கூட அரசாங்கத்தரப்பிலுள்ளோர் பரஸ்பரம் ஒன்றுக்குமுரணான கருத்துக்களைக்கூறியிருந்தனர் தமிழர்களைச்சமாளிப்பதற்கு ஒரு கருத்தைச்சொல்கின்றனர் மறுபக்கத்தில் வேறுமாதிரியான கருத்தைச்சொல்கின்றனர் விஷயம் முற்றிச்சிக்கலாகிவிட்டால் அது அவரது தனிப்பட்ட கருத்து என்று கூறிச்சமாளிக்கின்றனர் இது இவர்களுடைய வழமையான பாணி . ஐக்கியநாடுகள் சபையில் ஜனாதிபதி தமிழிலே சில வார்த்தைகளைப்பேசியிருக்கின்றார் ஜனாதிபதி தமிழில் பேசுவதையிட்டு மகிழ்ச்சிதான் ஆனால் அது எங்களது கோரிக்கையல்ல சர்வதேச சமூகத்தை முட்டாள்களாக்குவதற்கு அவர்கள் மத்தியிலே தமிழர்களுக்கு நியாயத்தை வழங்கினேன் என்று காண்பிப்பதற்காக தமிழிலே பேசியிருக்கலாம் ஆனால் அது வேறு விஷயம் ஆனால் இலங்கையில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற தமிழ் மக்களுக்கு நியாயத்தை வழங்கிவிடவேண்டும் என்றுதான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம் இலங்கை அரசாங்கம் நியாயமாக நடந்துகொள்ளவேண்டும் என்றுதான் எதிர்பார்க்கின்றோம் அதைச்செய்யாமல் ஐநா சபையில் தமிழில் உரையாற்றுவதில் எந்தவித பிரயோசனமும் கிடையாது அதுமாத்திரமன்றி தமிழும் சிங்களத்துடன் அரசகரும மொழியாக இலங்கையின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தும் கூட அது நடைமுறையாக்கப்படுவதில்லை அப்படி மொழிரீதியான குறைபாடுகள் கூட இருக்கின்ற நிலையில் மொழியைப்பேசுவதால் எதுவும் ஆகப்போவதில்லை அவர் அங்கு பேசிய அதே சந்தர்ப்பத்தில் தான் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா குட்டைப்போட்டு உடைத்திருக்கின்றார் உண்மையிலேயே சரத் பொன்சேகா அவர்களுக்கு தமிழ் மக்களின் சார்பில் நான் நன்றி கூறி விரும்புகின்றேன் ஏனெனில் அவர் உண்மையைச்சொல்லியிருக்கின்றார் அப்பட்டமாக அம்பலப்படுத்தியிருக்கின்றார் இவர்கள் சொல்லும் அரசியல் தீர்வு என்பது எது என்பதைச்சுட்டிக்காட்டியிருக்கின்றார் இந்த நாடு சிங்களவர்களுக்கு மாத்திரம் தான் உரிமையானது தமிழர்களும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஏன் சிங்களக்கிறிஸ்தவர்கள் கூட அந்நியர்கள் இரண்டாம் மூன்றாந்தரக்குடிமக்கள் தான் தமது நோக்கம் அதுவாகத்தான் இருக்கின்றதென்பதை அவர் காட்டியிருக்கின்றார் எதிர்காலத்தில் தரப்போவதாகச்சொல்லக்கூடிய அந்த அரசியல் தீர்வு என்பது என்பது தீர்வாக அன்றி திணிப்பாகவே இருக்கும் அவரது கருத்துக்களுடாக வெளிப்படையாகவே காட்டியிருக்கின்றார் இன்று பாருங்கள் திஸ்ஸ விதாரணவென்று ஒரு அப்பாவி அமைச்சர் பழைய இடதுசாரி அமைச்சர் இலங்கையின் இனப்பிரச்ச்னைக்கு தீர்வுயோசனையை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்டஅனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவிற்கு தலைமைதாங்கும் திஸ்ஸ விதாரணவிடம் இராணுவத்தளபதியின் கருத்துக்கு உங்கள் பதில் என்ன என்று கேட்கவிரும்புகின்றேன் அரசாங்கத்தின் நோக்கம் இதுவாக இருக்குமானால் உங்கள் அரசியல் தீர்வு என்ன என்று கேட்க விரும்புகின்றேன் அமைச்சர் கெஹலிய இந்தக்கருத்துதொடர்பில் சமாளிப்பை வெளியிட்டிருந்தபோதும் இராணுவத்தளபதியின் கருத்துதொடர்பில் அதனைக்கண்டித்து அரசாங்கம் அதிகாரப+ர்வமாக கருத்தெதனையும் வெளியிடவில்லை அரசாங்கம் அதனை ஏற்றுக்கொண்டுதான் இருக்கின்றது அதுமாத்திரமன்றி அரசாங்கத்தின் மிகப்பெரிய பங்காளியாக கூறப்படும் இனவாதக்கட்சியான ஜாதிக ஹெல உறுமயகட்சியின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் இராணுவத்தளபதியின் கருத்தை ஆதரித்து அதுவே சரியானது உண்மையானது என்று கருத்துவவெளியிட்டுள்ளார் அது பிழையானது வடகிழக்கிலே வாழும் தமிழர்கள் தங்கள் சொந்தத்தாயகத்தைக்கொண்டிருப்பவர்கள் சொந்த இராஜ்ஜியங்களைக்கொண்டிருந்தவர்கள் சிங்கவர்களுக்கு சமனான முறையில் ப+ர்வீகமாக இந்த நாட்டிலே ஆண்டாண்டு காலமாக வாழ்ந்தவர்கள் அவர்களைப்பார்த்த சிறுபான்மையினர் என்று சொல்லி தேசிய உரிமை இல்லை என்று சொல்லுவார்களேயானால் அது பிழையானது ஒன்று வரலாறு தெரியாமல் சரத் பொன்சேகா பேசுகின்றார் அன்றேல் முட்டாள்களாக எங்களை மாற்ற நினைக்கின்றார் இரண்டும் சரிவராது என்று நான் நினைக்கின்றேன் .

கேள்வி: தற்போது வன்னியில் போர் உக்கிரம் அடைந்துள்ள நிலையில் உலகின் கவனம் வன்னியை நோக்கி குவிந்திருக்கின்றது அங்குள்ள மக்கள் சொல்லோணா துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் உணவு மருத்துப்பொருட்கள் பற்றாக்குறையாக மோசமான இன்னல்களுக்குள்ளாகியுள்ளதாகவும் சர்வதேச தரப்பில் பலர் குரல்கொடுத்துக்கொண்டிருக்கின்றனர் ஆனால் உலகநாடுகளை விடவும் தமக்கே தமது மக்களின் மீது அதிக அக்கறை இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறுகின்றது தாம் அவர்களைப்பராமரிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது இது விடயத்தில் உங்கள் உணர்வலைகள் யாதாகவிருக்கின்றது ?

பதில் :முதலில் ஐக்கியநாடுகள் சபை உட்பட அனைத்து தொண்டர்நிறுவனங்களையும் வன்னிப்பகுதியில் இருந்து வெளியேறச்சொல்லிவிட்டு பிறகு மீண்டும் இறங்கி வந்து ஐநா சபையின் ஆதரவுடன் துணையுடன் உணவுப்பொருட்களை மீண்டும் அங்கு அனுப்பியதில் இருந்து அரசாங்கம் ஆரம்பத்தில் செய்த அந்த செயற்பாடு கருத்து நிலைப்ப்hடு பிழையானது என்பதை அரசாங்கமே தனது செயல்கள் மூலமாக நிருபித்திருக்கின்றது அதுதான் உண்மை மற்றும் படி அங்கேயுள்ள மக்கள் அரசகட்டுப்பாட்டுபகுதிக்கு வரும்படி அரசாங்கம் அழைக்கின்றதென்றால் வரவிரும்புகின்றவர்கள் வரட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை விடுதலைப்புலிகள் அவர்களை பலாத்காரமாக நிறுத்திவைத்திருப்பார்களேயானால் அது பிழையானது அவர்கள் விடவேண்டும் ஆனால் இங்கே வந்து வாழ்வதற்கான சூழல் இல்லை என்று தான் தமிழ்மக்கள் நினைக்கின்றார்கள் இங்கே கொழும்பிலேபாருங்கள் தமிழ் மக்களைக்கைது செய்கின்றார்கள் பதிவுசெய்யச்சொல்கின்றார்கள் சொல்லோணாத்துன்பங்களுக்கு தமிழ்மக்கள் உள்ளாகின்றார்கள் வன்னியைப்பிறகுபார்க்கலாம் வன்னிக்கு முதலில் இங்குபாருங்கள் அதேபோன்று இந்தியாவிற்கு அகதிகளாகச்சென்ற தமிழர்களில் சிலர் இலங்கைக்கு வந்திருக்கின்றார்கள் அவர்களுக்கு குடியுரிமைவழங்கப்படவேண்டும் என்று கூட ஒரு பிரேரணை பாரர்ளுமன்றத்தில் கடந்தவாரம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது அது சம்பந்தமான ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் கூட நான் பேசியிருந்தேன் யு என் எச் சி ஆர் என்ற ஐநா நிறுவனம் தான் அவர்களுக்கு உதவிசெய்கின்றது அந்தநிறுவனம் கூட இலங்கைக்கு அகதிகள் திPரும்புவதை ஊக்குவிக்கப்போவதில்லை என்று சொல்லியிருக்கின்றனர் அவ்வாறு திரும்பிவரும் மக்களை சொந்தக்கிராமங்களில் சென்று குடியமர்த்துவதில்லை என்பதே இதற்கு காரணமாகும் அவர்களைத்தடைமுகாம்களில் வைத்திருக்கின்றனர் வன்னிமக்களின் வரவை எதிர்பார்த்து வவுனியாவில் அமைக்கப்படும் முகாம்கள் கூட வெறுமனே தடைமுகாம்களாக இருக்கின்றன மக்கள் நகரமுடியாது அங்கிங்கு செல்ல முடியாது அதைமீறி அரசகட்டுப்பாட்டு பகுதிக்கு வந்து விட்டார்களேயானால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் அல்லது காணாமல் போவார்கள் ஒருநிம்மதியான வாழ்க்கை இங்கு கிடையாது அந்தக்காரணத்தினாலேதான் வன்னியில் இருந்து மக்கள் வரத்தயங்குகின்றார்கள் வரமுடியாத நிலைமை இருக்கின்றது அங்கேயுள்ள மக்களுக்கு உணவு வழங்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு இருக்கின்றது ஒரேநாடுதானே அங்கேயுள்ள மக்களுக்கும் நாங்கள் தான் உணவு வழங்குகின்றோம் அவர்களுக்கும் நாங்கள் தான் உதவிசெய்கின்றோம் மருந்துகளை அனுப்புகின்றோம் என்று சொல்லி அரசாங்கம் பெருமையடித்துக்கொள்ள முடியாது ஒரே நாடு என்று சொல்லும் பொழுது நாட்டில் அரசாங்கமாக இருக்கும் பொழுது தமிழர்களிடம் உட்பட சகலரிடமும் வரி அறவிட்டுத்தான் அரசாங்கம் நடந்துகொண்டிருக்கின்றது வரி வாங்கும் போது நிச்சயமாக இந்த அரசாங்கத்திற்கு அந்த மக்களுக்கு உதவவேண்டிய கடப்பாடு இருக்கின்றது முடியாவிட்டால் சர்வதேச சமூகத்தின் உதவியை நாடி அதன் மூலமாக மக்களுக்கு உணவுகளையும் மருந்துகளையும் வழங்கவேண்டும் ஏனென்றால் அவர்கள் கேட்கும் உணவும் மருந்தும் அடிப்படைத்தேவைகளாக இருக்கின்றன அத்தியாவசியத்தேவைகளாக இருக்கின்றன மாறாக மேலதீகமான உணவு கேட்கவில்லை மேலதீக சலுகைகளைக்கேட்கவில்லை வாழ்வதற்கான உணவைத்தான் கேட்கின்றார்கள் அதனைவழங்கவேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு இருக்கின்றது


கேள்வி : நீங்கள் அண்மையில் இந்திய விஜயமொன்றை மேற்கொண்டிருந்தீர்கள் இந்தப்பயணம் எப்படி அமைந்திருந்தது?

பதில் :இந்தியாவிற்கு நான் சென்று வந்த பயணம் இந்த முறை மிகவும் முற்போக்கானதாக சிறந்ததாக அமைந்திருப்பதாக நான் கருதுகின்றேன் இந்தியாவிலே ஒருவிடயத்தைப்புரிந்துகொள்ள வேண்டும் விடுதலைப்புலிகளைப்பொறுத்தவரையில் அங்கே சட்டம் ஒழுங்குப்பிரச்சனையிருக்கின்றது ராஜீவ் காந்தி கொலையை அடுத்து அங்கொரு பிரச்சனையிருக்கின்றது அந்தப்பிரச்சனையை நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும் ஆனால் அந்தப்பிரச்சனையை மாத்திரம் ப+தாகரப்படுத்தி அந்தப்பிரச்சனையை அடிப்படையாக வைத்துக்கொண்டு இலங்கைத்தமிழர்களைப்பார்க்கும் அந்த வழமை பாரம் பரியம் அங்கே தொடர்ந்து இருந்துகொண்டிருந்தது விடுதலைப்புலிகள் ஆதரவுக்குழு எதிர்ப்புக்குழு என்று இரு குழுக்களுக்கிடையில் தர்க்கம் நடந்துகொண்டிருக்கின்றது கருத்துமோதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன அந்தச்சத்தத்திலே கூச்சலிலே இலங்கையின் பலியாகும் அப்பாவி மக்களின் அவலக்குரல் அங்கு எட்டாமல் இருந்தது ஆனால் அந்த நிலைமை மாறி இன்று மக்களின் பிரச்சனை துன்பப்படும் மக்களின் பிரச்சனை கொல்லப்படும் மக்களின் பிரச்சனை கஷ்டப்படும் மக்களின் பிரச்சனை அந்தக்கரையை எட்டியிருக்கின்றது மக்களை விழித்தெழ வைத்திருக்கின்றது அரசியல் தலைவர்களை விழித்தெழ வைத்திருக்கின்றது பல்வேறு கட்சிகளைச்சேர்ந்த தலைவர்களும் தங்களுக்கிடையிலான முரண்பாடுகளை பெரும் பாலும் மறந்து ஒரேயணியிலே ஒரே மேடையிலே தோன்றத்தொடங்கியிருக்கின்றார்கள் படிப்படியாக தோன்றிக்கொண்டிருக்கின்றார்கள் தமிழக அரசும் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் தலைமையிலே இதுசம்பந்தமாக புதிய நடவடிக்கை எடுப்பதற்கு தயாராவதை நாங்கள் பார்க்க முடிகின்றது அதேபோன்று மத்திய அரசாங்கமும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை அவதானித்துக்கொண்டிருக்கின்றது ஆகவே இன்று தமிழகம் எழுச்சி பெற்றிருக்கின்றது உணர்வலைகள் அங்கே பாரிய அளவில் எழுந்துகொண்டிருக்கின்றன பெரும்பாலும் தமிழ் மக்கள் மத்தியிலே இந்த இலங்கைத்தமிழர் தொடர்பிலே பாரிய கருணை இரக்கம் பரிதாபம் உணர்வலைகள் எழுந்துகொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது

கேள்வி : நீங்கள் கடத்தல் காணமல் போதல் நீதிக்கு புறம்பான படுகொலைகளுக்கு எதிராக மக்கள் கண்காணிப்புக்குழு மூலமாக
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றீர்கள் தற்போது மனித உரிமைகள் நிலைமை இலங்கையில் எவ்வாறு காணப்படுகின்றது ?


பதில்: மனித உரிமைகள் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சொல்லமுடியாது ஆனால் எமது செயற்பாடுகள் இரண்டு நோக்கத்தைக்கொண்டிருக்கின்றன ஏற்கனவே காணமல் போனவர்களைக்கண்டுபிடிப்பது ஒருவிடயம் எதிர்காலத்தில் நடக்ககூடிய சம்பவங்களைத்தடுத்து நிறுத்துவது மற்றையநோக்கமாகும் அதாவது ஒன்று நோய்நிவாரணம் மற்றையது நோய்த்தடுப்பு அந்த அடிப்படையில் எமதுசெயற்பாடுகளை முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றோம் மக்கள் கண்காணிப்புக்குழுவின் போராட்டம் கொழும்பில் இருந்து பாரிய அளவில் நடத்தப்பட்டிருக்காவிட்டால் இன்று மக்கள் சந்தித்திருக்ககூடிய அவலத்தை விட அதிகமான அவலத்தை சந்தித்திருப்பார்கள் என்பதுதான் உண்மையாகவிருக்கும் தற்போதும் மக்கள் நிம்மதியுடன் துன்பதுயரமின்றி இருக்கின்றனர் என்பது இதன் அர்த்தமல்ல தொடர்ந்து காணமல்போதல்கள் படுகொலைகள் கடத்தல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன அவற்றை காலத்திற்கு காலம் சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகள் ஐநா சபை பிரதிநிதிகள் போன்ற உரிய நபர்களின் அமைப்புக்களின் கவனத்திற்கு கொண்டவந்துகொண்டுதான் இருக்கின்றோம் எங்கள் போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றது பல்வேறு துன்பங்கள் துயரங்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் நாம் செயற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம் கொழும்பிலிருந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்


கேள்வி : நீங்கள் அரசாங்கத்திற்கு அபகீர்;த்தியை உண்டுபண்ணும் நோக்குடன் விடுதலைப்புலிகள் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இந்த மனித உரிமைவிடயத்;;;தினை கையிலெடுத்து செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் அவ்வப்போது தெரிவிக்கப்படுவது தொடர்பாக நீங்கள் கூறுவதென்ன?பதில் :மனித உரிமைமீறல்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமல் அதற்காக குரல்கொடுப்போரை புலிமுத்திரதை குத்தி மௌனிகளாக்குகின்ற செயற்பாட்டைத்தான் காலகாலமாக இந்த அரசாங்கம் மேற்கொண்டுள்ளது ஆனால் 1989ம் ஆண்டுகாலப்பகுதியில் தென்னிலங்கையில் இடம்பெற்ற கிளர்ச்சியை அடக்குவதற்கு அப்போதைய அரசாங்கம் மேற்கொண்ட மோசமான அடக்குமுறை நடவடிக்கைகளின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்கட்சித்தலைவராக இருந்தபோது ஜெனிவாவிற்கெல்லாம் சென்று குரல் கொடுத்தார் அப்போது தாக்கப்பட்டவர்கள் சிங்களவர்களாக இருந்தமையால் அவரது மனித உரிமை பிரசாரங்களை மேற்கொள்ளமுடிந்தது ஆனால் இன்று பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலாக தமிழ் மக்களாக இருப்பதால் அவர்களுக்காக குரல் கொடுக்கும் போது புலிகளின் ஆதரவாளராக அடையாளம் காண்பித்து உண்மையை மூடிமறைக்கப்பார்க்கின்றனர் ஆனால் எவ்வித அச்சுறுத்தல் தடைகள் வந்தபோதும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எனது குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கும் .

No comments:

Post a Comment