ஐயகோ!
என்னென்பேன்
ஏதென்பேன்
வாதென்பேன்
சூதென்பேன்
இருமனமோ
இணையவில்லை
இங்கே
இரும்புப்பணம்
இணையுதென்பேன்
நறுமணமோ
கமிழவில்லை
சமூகமதில்
நாற்றம்
எடுக்குதென்பேன்
கொஞ்சம் நில்
பெண்ணினமே
பேதை நீயாதறிவாய்
வஞ்சகர் வலைக்குள்
தானும் வசமென
வாசமனாய்
காசிற்கும் கனவிற்கும்
நீ விற்கப்படுவதுவா
மாசுற்ற மனங்களையும் நீயோ மணப்பதுவா
நஞ்சகம் கொண்டோர்
நினை மஞ்சத்திற்கே
மதிப்பு என்பர்
மிஞ்சியோர் நினையே
விற்றிடவே விளைந்திடுவர்
இன்னுமே பலர் கொஞ்சிடவே
குடைபிடிப்பர்
அஞ்சுகமே நினை விட்டால்
யாரெனக்குத் தஞ்சமென்பர்
மிஞ்சிப்போனால்
விடைகொடு நான்
நஞ்சருந்தி இறப்பரென்பர்
இதற்கு நீ அஞ்சிடாதே
நெஞ்சமதில் தயங்கிடாதே
கொஞ்சம் பொறு யாரிவர்கள்
காமவெறி பிடித்தோர்
காசுப்பே பிடித்தோர்
மாயந்தன்னில் உளல்வோர்
மயக்கத்தில் மிதப்போர்
பித்துபிடித்து அலைவோர்
பேதலித்து திரிவோர்
போதுமா புரிந்து கொள்
நின் வழிதனைத் தெரிந்துகொள்
வாழ்வை நீ வடித்துக் கொள்
பெற்றோரே கேளுங்கள்
உற்றுத்தான் பாருங்கள்
உங்களைத் தான்
மாசுற்று பேதலிக்கும்
பேதையரே
உற்றமகளிற்கு மூவாறு வயது வந்துவிட்டால்
முதல்வேலை கல்யாணம்
நாயாக அலைந்தேனும்
கரையெற்றித் தொலைத்திடுவீர்
தாயாக இத்திரையில் தொப்பெனவாவிழுந்தீர்
சேயாக இருந்தன்றோ
தாயுமாய்யானீர்
கரையெற்றித் தொலைத்திடுவீர்
தாயாக இத்திரையில் தொப்பெனவாவிழுந்தீர்
சேயாக இருந்தன்றோ
தாயுமாய்யானீர்
நீர்பட்ட வேதனையை
நீர் பெற்ற செல்வமும் பெறுவதுவா
மனம் வெறுப்பதுவா கல்விதனில்
கரைகாணட்டும் காலங்களில் அறிவுத்தேடல்
நீளட்டும் ஓலம் நிறை இல்வாழ்க்கை
ஞாலத்தில் இனியும் வேண்டாமே
வெளி அழகினில் விருப்பு
வேண்டாமே.
ஒளிர் நகைகளும்
பணமுமே தீண்டாதே
நித்தமும் வாழ்த்துப்பெறும்
பெண்ணினம் சமைப்போம்
இத்தரையில் பெண்ணினத்தைப்
போற்றிடுவோம்.
நீர் பெற்ற செல்வமும் பெறுவதுவா
மனம் வெறுப்பதுவா கல்விதனில்
கரைகாணட்டும் காலங்களில் அறிவுத்தேடல்
நீளட்டும் ஓலம் நிறை இல்வாழ்க்கை
ஞாலத்தில் இனியும் வேண்டாமே
வெளி அழகினில் விருப்பு
வேண்டாமே.
ஒளிர் நகைகளும்
பணமுமே தீண்டாதே
நித்தமும் வாழ்த்துப்பெறும்
பெண்ணினம் சமைப்போம்
இத்தரையில் பெண்ணினத்தைப்
போற்றிடுவோம்.
நம் வாழ்வை
நாம் சமைப்போம்.
நம் துணையை நற்றுணையை
நாமே தெரிவோம்.
நாமே தெரிவோம்.
No comments:
Post a Comment