இந்தியாவின் எக்தா பரிசத் அமைப்பின் தலைவரும் காந்தி மன்றத்தின் உபதலைவருமான பி.வி ராஜகோபால்
பிராந்தியத்தில் பலம்வாய்ந்த நாடு என்றவகையில் இந்தியா அதன் தனிப்பட்ட நலனைமாத்திரம் கருத்திற்கொண்டு காய்களை நகர்த்தாது பொதுநலனைக்கருத்திற்கொண்டு செயற்படவேண்டும் என இந்தியாவின் எக்தா பரிசத் அமைப்பின் தலைவரும் காந்தி மன்றத்தின் உபதலைவருமான பி.வி ராஜகோபால் தெரிவிக்கின்றார் தெற்காசிய சமாதானக்கூட்டமைப்பு என்ற பெயரில் அமைப்பொன்றை ஆரம்பித்துவைக்கும் வகையில் இலங்கை வந்திருந்தவர் “கேசரி” க்காக வழங்கிய நேர்காணல்
பிராந்தியத்தில் பலம்வாய்ந்த நாடு என்றவகையில் இந்தியா அதன் தனிப்பட்ட நலனைமாத்திரம் கருத்திற்கொண்டு காய்களை நகர்த்தாது பொதுநலனைக்கருத்திற்கொண்டு செயற்படவேண்டும் என இந்தியாவின் எக்தா பரிசத் அமைப்பின் தலைவரும் காந்தி மன்றத்தின் உபதலைவருமான பி.வி ராஜகோபால் தெரிவிக்கின்றார் தெற்காசிய சமாதானக்கூட்டமைப்பு என்ற பெயரில் அமைப்பொன்றை ஆரம்பித்துவைக்கும் வகையில் இலங்கை வந்திருந்தவர் “கேசரி” க்காக வழங்கிய நேர்காணல்
( பேட்டிகண்டவர் ஆ.அருண்)
தெற்காசிய சமாதானக்கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது ?
எரிக்சோல்மைக்கூப்பிட்டு அவர் இங்கு வந்துசெயற்படும் போது இங்குள்ள நிலைமை கலாசாரரீதியில் அவர்களால் புரிந்துகொள்ளப்படமுடியாதது நோர்வேநாட்டவர்களுக்கு இந்தப்பிரச்சனையை புரிந்துகொள்வது கொஞ்சம் கஷ்டமான விடயம்தான் ஏனென்றால் அவர்கள் வேறபாஷை வேற கலாசாரம் ஆனால் தெற்காசியாவில் ஒரேகலாசாரம் தான் பாகிஸ்தான் ஆனாலும் பங்களாதேஷ் ஆனாலும் இந்தியாவானாலும் ஸ்ரீலங்காவானாலும் ஒரே கலாசாரம் தான் அப்ப இந்த கலாசார அடித்தளத்திலிருந்து ஒரு ஐந்து பத்துபேர் வெளியவந்து பாராபட்டமற்றவகையில் சமரச முயற்சிகளில் ஈடுபடவேண்டும் அது கஷ்மீராக இருந்தாலும் சமரசம் செய்யவேண்டும் ஸ்ரீலங்காவாக இருந்தாலும் சமரசம் செய்யவேண்டும் தெற்காசியசமாதான கூட்டமைப்பு அதைத்தான் நினைக்கின்றது பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கான ஆற்றலை இயலுமையை வளர்த்தெடுப்பது அவசியமானதாகும் யுத்தம் புரிகிறதற்கு எவ்வளவு ஆற்றல் இருக்கின்றதோ அது பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இல்லை பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எப்படி ஆற்றலை அதிகரிக்கமுடியும் தெற்காசியாவிலிருந்து ஒரு பத்துபேரை எப்படிச்சேர்த்து அதனை அமைப்பாக உருவாக்கி எங்கெங்க பதற்றநிலை காணப்படுகின்றதோ அங்கு சென்று அதைப்பார்த்து தீர்வுக்கு வழியேற்படுத்துவது தெற்காசியாவில் அனுபவமிக்கவர்களை ஒன்றுசேர்ந்து ஒரு அமைப்பை உருவாக்கி இங்கேயே சமரசம் செய்து பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதுஅதற்காக தான் இலங்கையில் சந்திக்க முடிவுசெய்தோம் பாகிஸ்தானில் என்ன பண்ண முடியும் இலங்கையில் என்ன பண்ண முடியும் பங்களாதேஷில் என்ன பண்ண முடியும் நேபாளத்தில் என்ன பண்ண முடியும். நேபாளத்தில் எவ்வளவோ பிரச்சனை இருந்தது தற்போது தேர்தல் நிறைவுற்று போராட்டத்தில் ஈடுபட்ட மாவோயிஸ்ட் தரப்பினரே ஆட்சி அமைத்துள்ளனர் பூட்டானிலும் ஜனநாயகம் மலரத்தொடங்கியுள்ளது பாகிஸ்தானில் எவ்வளோ பிரச்சனைகள் இருந்தன. அங்கு தேர்தல் நடந்து ஜனநாயகம் மலரத்தொடங்கியுள்ளதால் பிரச்சனைகள் குறைவடைந்துள்ளன பெரும்பான்மையான மக்கள் சமாதானத்தில் நம்பிக்கை வைத்துள்ளனர் அவர்கள் ஆயுதமோதல்களை விரும்பவில்லை அவர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையே தேவையாகவுள்ளது அதற்காகவே தெற்காசிய சமாதானக்கூட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்
இந்தியாவில் உங்கள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் யாது?
பலவருடங்களுக்கு முன்பாக இந்தியாவின் மத்தியபிரதேசத்தில் சம்பல்காடு என்ற இடத்தில் நிறைய கொள்ளைக்காரர்கள் இருந்தாங்க அங்கு தான் எனது பணியை ஆரம்பித்தேன் அவங்க கூட போய் பேசி முடிவுபண்ணி ஒரு ஆயிரம் கொள்ளைக்காரர்கள் மகாத்மா காந்தியின் புகைப்படத்திற்கு முன்பாக தங்களுடடைய ஆயுதங்களை ஏந்திவந்து சரணடைந்தாங்க இரண்டுவருடகாலம் இந்தவழி சரியானதா அந்தவழிசரியானதா என சமரச முயற்சிகளில் ஈடுபட்டதனாலேயே அதுசாத்தியமாகியது அவர்களுக்குள் சண்டையிருந்தது சுரண்டல் இருந்தது வசதிவாய்ப்புக்கள் அற்ற நிலைகாணப்பட்டது இதனால் தான் அவங்க காட்டிலபோய் கொள்ளைக்காரர்களாக மாறியிருந்தாங்க ஆனாலும் பலதடவைகள் சமரசமுயற்சிகளில் ஈடுபட்டதன் வாயிலாக அவர்களுக்கே புரிந்தது இந்த வழியே சரியானதென்று நிம்மதியா வாழணும் காட்டில அலைஞ்சு அலைஞ்சு வாழ்றது சரியில்ல குடும்பத்திற்கும் பிரச்சனையாக இருக்கிறது ஆனால் நாங்க வெளிய வந்து குடும்பத்தோடு உட்கார்ந்து நிம்மதியா வாழலாம் அதற்கு ஒருவழிகிடைச்சா நல்லாயிருக்கும் என்று அவங்களே நினைச்சாங்க அதனால் தான் ஆயிரம் பேர் சரணடைந்து அதற்கப்புறம் பத்துப்பதினைந்து வருடங்கள் சிறையில் இருந்தாங்க அதன்பின்னர் அவங்களுக்கு கல்விபுகட்டி புனர்வாழ்வளிக்க வகைசெய்தேன் அதற்கப்புறம் நான் என்ன நினைச்சேன் என்றா வன்முறையில் இருவகையுண்டு யாரவது அடித்து உதைப்பதும் ஒருவகையில் வன்முறைதான் ஆனால் நிறையப்பேர் ஏழையாக இருக்கிறாங்க அவங்களுக்கு சாப்பாடு கூட இல்லாம கஷ்டமான நிலை உள்ளது அப்ப அவரைப்பற்றி நினைக்கவேண்டும் ஏழைகளாக இருந்தா கஷ்டமாக இருந்தா அவர்களுக்குள்ள வன்முறை ஒருநாள் வெளியே வந்துவிடும் சாப்பாடு இல்லாம கஷ்டமாக இருந்தா குற்றச்செயல்கள் நடக்கும் நம்ம சமூதாயத்தில் சமத்துவம் இல்ல அதனால் தான் நிறைய வன்முறைவெடிக்கின்றது என எனக்கு விளங்கியது சமத்துவம் இல்லை என்றா வன்முறையை முடிவுகட்டமுடியாது நீதியும் வேண்டும் சமத்துவமும் வேண்டும் இவை இரண்டும் இல்லாமலிருந்தா வன்முறை வந்திரும் அதனால் தான் கிராமங்கிராமமாக இளைஞர் குழுக்களைக்கூட்டி அவர்களுக்கு பயிற்சியளித்து திரும்பி சென்று சமூகத்தை ஒழுங்கமைத்து கிராமத்தில் சமத்துவம் எப்படி வரமுடியும் கிராமத்தில் நீதியை எப்படிக்கொண்டுவரமுடியும் அதைப்பற்றி பயிற்சியளித்து பெரிய அமைப்பாக அதனை மாற்றிவிட்டேன் எக்தா பரிசத் என்று ஹிந்தியில் அழைக்கப்படும் பெரிய அமைப்பாக மாற்றிவிட்டேன் இந்தியாவில் எட்டுமாநிலங்களில் நிறைய பணியாற்றுகின்றோம் கடந்த ஒக்டோபர் மாதம் இரண்டாம்திகதி 25000பேர் குவாலிய+ரிலிருந்து டெல்லிக்கு 340கிலோமீற்றர்கள் பாதயாத்திரை சென்றோம் 25ஆயிரம் பேர் கால்நடையாக சென்று அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைக்கொடுத்து காணிச்சீர்திருத்தத்தைக கொண்டுவரநிர்ப்பந்தித்தோம் காணிச்சீர்த்திருத்தத்தில் ஏழைமக்களுக்கு நிலங்களை பகிர்ந்தளிப்பதே இந்தியாவில் முக்கியமானது கிராமத்தில் நிறையப்பேர் ஏழைகள் அவர்கள் கையில் நிலம் இல்லை என்றால் சாப்பாடு கிடையாது இன்றைக்கு வேலைகிடைச்சா இன்றைக்கு சாப்பாடு இல்லாவிட்டால் டெல்லி பம்பாய் சென்று அங்குள்ள சேரிகளில் இருந்து சாப்பாட்டிற்கு வழிதேடவேண்டியதுதான் விவசாயிகள் இல்லாதவர்கள் கையில நிலம் விவசாயிகள் கையில் நிலமில்லை என்ற நிலைதான் அதனால் விவசாயிகளுக்கு நிலம் கொடுக்க வேண்டும் யார் வேலைசெய்கிறார்களோ அவர்கள் கையில நிலம் இருக்க வேண்டும் அதற்காக போராடணும் அந்தப்போராட்டம் ரொம்ப வன்முறைகளற்ற போரட்டம் எல்லாரையும் ஒழுங்கமைத்து ஒருமாதகாலம் தேசிய நெடுஞ்சாலையில் அங்கேயே படுத்துறங்கி அங்கேயே சாப்பிட்டு ஒருமாதம் நடத்ததற்கு அப்புறம் 11பேரை இழந்துட்டோம் இதில் மூவர் விபத்தில் உயிரிழந்தாங்க ஏனையோர் பலவீனமான நிலையில் இருந்ததால் உயிரிழந்தாங்க வன்முறையற்ற அஹிம்ஸை முறையில் போராடவேண்டும் என்றா யாருவேணும் என்றாலும் போராடமுடியும் வன்முறைகளடங்கிய ஹிம்ஸா முறையிலான போராட்டமென்றால் கொஞ்சம்பேரால் தான் பண்ணமுடியும் நிறையப்பேரால் முடியாது காந்தியும் கூட சாதாரணமக்களின் ஆயுதமாக அஹிம்ஸையைத்தான் கூறியிருந்தார் எமது போராட்டத்தில் வெற்றிகிடைத்தது அதற்கு காரணம் வன்முறைகளற்ற அஹிம்ஸை போராட்டமே வன்முறையற்றமுறையில் அரசாங்கத்தின்மீது எவ்வாறு அழுத்தங்களைப்பிரயோகிக்கமுடியும் அதைப்பற்றித்தான் நான் நிறைய பயிற்சியளித்திருக்கின்றேன் அஹிம்ஸை முறையில் எப்படி போராடமுடியும் எப்படி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கமுடியும் மாபெரும் வன்முறையற்ற சக்தி இருக்க வேண்டும் அது அரசாங்கத்தை எதிர்கொள்ளவேண்டும் அரசாங்கங்கள் பொறுப்புணர்வுடன் நடக்கவேண்டும் இப்ப அரசாங்கங்கள் பொறுப்பற்ற வகையில் நடக்கின்றன பெரிய பெரிய நிறுவனங்களுக்கு நிலங்களை அரசாங்கங்கள் தாரைவார்க்கின்றன அவை ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டவர்களென அடையாளப்படுத்தப்பட்டவர்களுக்கும் கிடைக்கவில்லை அதனால் தான் சமூகத்தில் பிரச்சனை அதனால்தான் வன்முறை வருகின்றது வாழ்வாதார வளங்கள் என்பவற்றை ஏழைகளுக்கு கொடுத்தே ஆகவேண்டும் வன்முறையற்ற வகையில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதென்றால் நிறைய கிராமங்களில் இளைஞர்களுக்கு பயிற்சிகளை அளிக்கவேண்டும் வன்முறையற்ற இளைஞர் படையணியை உருவாக்குவதே தற்போது முக்கியமான பணியாகும் அது இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாமுழுவதிலும் செயற்படுத்தப்படவேண்டும் .
இலங்கையில் ஆரம்பக்கட்டமாக உங்கள் அமைப்பினால் என்ன செய்ய உத்தேசித்துள்ளீர்கள் உங்கள் எதிர்காலத்திட்டங்கள் என்ன ?
இலங்கையில் என்ன பண்ணலாம் என்றா பாருங்கள் இங்கு நிறையபேர் தமிழா இருந்தாலும் சரி சிங்களமாக இருந்தாலும் சரி வெளிநாட்டில் வசிக்கிறார்கள் ஐரோப்பிய நாடுகளிலும் வடஅமெரிக்காவில் கணிசமான அளவில் இவர்கள் வாழ்கிறார்கள் இங்கே யுத்தம் முடிந்ததும் திரும்பிவரலாம் என்ற நினைப்பே அவர்களிடம் காணப்படுகின்றது யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கு கொஞ்சம் முன்முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றே நாங்கள் கூறுகின்றோம் நீங்கள் முன்முயற்சி எடுக்காவிடின் யுத்தம் நிறைவிற்கு வரமாட்டாது சிங்கள சமூகம் தமிழ் சமூகத்தின்மத்தியிலும் தமிழ் சமூகம் சிங்கள சமூகத்தின் மத்தியிலும் பேசவேண்டும் அதற்கு சிங்கள சமூகம் சிங்க சமூகத்தை ஊக்குவிக்க வேண்டும் தமிழ் சமூகம் தமிழ் சமூகத்தை ஊக்குவிக்க வேண்டும் சிங்கள சமூகம் தமிழ் சமூகத்துடன் நிறையபேசவேண்டும் நிறையபேசவேண்டும் அப்பதான் ஏதாவது முடிவுபண்ணமுடியும் வெளிநாடுகளுக்கு சென்று யார்யார் நன்குவாழ்கிறார்கள் சம்பாதிக்கின்றார்களோ அவர்கள் இந்த பிரச்சனை தமக்கல்ல என்ற நினைப்பைக்களைய வேண்டும் ஏன்யுத்தம் நடக்கவேண்டும் எத்தனைநாள் யுத்தம் நடக்கவேண்டும் இந்த நாகரீக உலகிலே பேசியே முடிவுபண்ணமுடியவில்லை அதபேசுறதற்கு எப்படி ஊக்குவிக்கமுடியும் பௌத்த சமூகத்தை எப்படி ஊக்குவிக்கமுடியும் அதைப்பற்றி நினைக்கவேண்டும் யுத்தம் முடியட்டும் அப்ப திரும்பிப்போகலாம் என்று நினைக்காமல் நாம் முன்முயற்சியெடுத்து எப்படி யுத்தத்தை முடிக்க முடியும் அரசாங்கத்தின் மீது எப்படி அழுத்தம் கொடுக்கமுடியும் சிங்கள தமிழ் சமூகங்கள் மீது எப்படி அழுத்தம் கொடுக்கமுடியும் முஸ்லிம் சமூகத்தை எப்படி ஊக்குவிக்கமுடியும் என்று நாம் நினைக்கவேண்டும் யுத்தம் முடியட்டும் அப்ப திரும்பச்செல்லலாம் என்றுநினைக்காமல் நாம் முன்முயற்சியெடுத்து எப்படி யுத்தத்தை முடிக்க முடியும் அரசாங்கம் மீது எப்படி அழுத்தம் கொடுக்க முடியும் சிங்கள தமிழ் சமூகங்கள் மீது எப்படி அழுத்தம் கொடுக்கமுடியும் அதைப்பற்றி நினைக்கவேண்டும் வெளிநாடுகளில் வாழும் தாயகத்தவர்களை எப்படி இதுதொடர்பில் ஊக்குவிக்க முடியும் என்பதை ஆராயவேண்டும் உணர்வ+ட்டவேண்டியது எமது பணிகளில் ஒன்று அப்புறம் கிராமம் கிராமத்தில பயிற்சிகளை எப்படியளிக்கமுடியும் கோபம்வந்த அடி இடி என்று சொல்லாம கோபம் வந்தா எப்படிப்பேசி முடிவுபண்ணிறதென்று இதென்ன கோபம்தான் இல்லையா தமிழ் சமூகமும் சிங்கள சமூகமும் கோபந்தான் ஒருவரையொருவருக்கு பிடிக்காது ஆனால் கோபம் வந்தாலும் வீட்டில கணவன் மனைவிக்கிடையில கோபம் வந்தா அவங்க துப்பாக்கியை எடுத்துசுடுவதில்லை மாறாக பேசித்தான் முடிவுபண்ணணும் இலங்கை என்பது ஒரு குடும்பம் தான் அந்தக்குடும்பத்தில் பேசிச்சண்டையை முடிக்கின்ற கலாசாரம் வரவேண்டும் அந்தக்கலாசாரத்தை எப்படி வளர்த்தெடுக்கமுடியும் அதற்கு இளைஞர் பயிற்சியே முக்கியமானது இப்ப நடைபெறுவது இளைஞர் பயிற்சிதான் பாகிஸ்தான் நேபாளம் இந்தியா பங்களாதேஷ் போன்ற இடங்களில் இருந்து பயிற்சியளிக்கின்றனர் சண்டைவந்தா எப்படிபேசி அதை முடிவுபண்ணமுடியும் வெளிநாட்டில் வாழும்தாயகத்தவர்களிடம் பேசி அவர்களை இந்தபிரச்சனைத்தீர்வில் ஈடுபடுத்தவேண்டியது ஒருவிடயமாகும் இரண்டாவது ஆசியாவில் பிரச்சனையை முடிப்பதற்கு அனுபவமிக்க ஆசியகுழுவைத்தயார்பண்ணுவது மூன்றாவது கிராமத்தில கஷ்டம்வந்தா சண்டைவந்தா பேச்சுவார்த்தை மூலமாக தீர்வுகாண்பதற்காக ஒரு கலாசாரத்தை உருவாக்குவது அப்ப ஒருவேலை இளைஞருக்கு பயிற்சியளிப்பது அவர்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணும் ஆற்றலைவளர்த்தெடுப்பது மற்றையவேலை ஆசியாவில் ஒரு குழுவை தயார்செய்து அவர்களை அனுப்பி காஷ்மீரில் என்றாலும் இலங்கையில் என்றாலும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது மூன்றாவதாக சர்வதேசரீதியில் தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்துவாழ்பவர்களை சந்தித்து அவர்கள் மத்தியில் பிரச்சனையைத்தீர்ப்பது தொடர்பான பொறுப்புணர்வை அதிகரிப்பது கிராமமட்டத்தில் அடுத்துவரும் ஐந்துவருடகாலப்பகுதியில் பத்தாயிரம் பேருக்கு பயிற்சியளிக்க வேண்டும் தெற்காசியவைப்பார்த்தால் அங்குள்ள நாடுகளில் 970 மாவட்டங்கள் உள்ளன ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருபத்துபேருக்கு சமாதானம் மற்றும் நீதிவிடயங்களில் பயிற்சிகளையளித்து நீதிக்காக சமாதானரீதியில் எப்படிப்போராடமுடியும் வன்முறையற்ற ரீதியில் எப்படிப்போராட அதைப்பற்றி அடுத்த ஐந்து வருடத்தில் பத்தாயிரம் பேருக்கு பயிற்சியளிப்பது முக்கியமானவேலை இரண்டாவது முக்கியமான வேலையாதென்றால் ஒரு சமாதான அமைப்பை ஏற்படுத்தி சமாதானத்தை நிலைநிறுத்துவதற்கு அரசாங்கத்துடன் பேசுவதற்கும் யார் யார் போராடுகின்றனரோ அவர்களுடன் பேசவேண்டும் பிரச்சனையின் தீர்வுக்காக பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எப்படியொரு குழுவைத்தயார்படுத்தமுடியும் அந்தக்குழு ரொம்ப நம்பகத்தன்மைமிக்கதாக இருக்கவேண்டும் யாரையாவது அனுப்பினா யாரும் பேசமாட்டாங்க நல்ல நம்பிக்கையுள்ள ஒரு பத்துபேர் இருந்தா அவர்கள் அனுபவமும் ஆற்றலும்மிக்கவர்களாக இருந்தா அவர்களின் பேச்சைகேட்கவேண்டும் அப்படியொருநிலைமை வந்தா தான் பேச்சுநடக்கமுடியும் இல்லாவிட்டால் பேச்சுநடக்கமுடியாது தெற்காசியாவில் நம்பகத்தன்மைமிக்கவர்கள் அடங்கிய ஒரு குழுவை உருவாக்குவதே இரண்டாவதாக பிரதானமானது அடிப்படை மட்டத்தில் இளைஞர் பயிற்சி நடுத்தர மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நம்பத்தகுந்த குழுவை உருவாக்குதல் மூன்றாவது புலம்பெயர்ந்து வாழும் தாயகத்தவர்கள் பிரச்சனை தொடர்பாக அக்கறை எடுத்து அதில் தலையீடுகளைப்புரிவதற்காக இயலுமையை வளர்ப்பது இப்படி மூன்று கட்டங்களில் பணிகள் நடக்கப்போகுது அதற்கூடாக தெற்காசியாவின் ஒருநாட்டில் 25பேர் என்ற வகையில் ஆறுநாடுகளில் இருந்து 150பேரைச்சேர்ந்து ஒரு அமைப்பை உருவாக்கி அவர்கள் உதாரணத்திற்கு மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கும் கொழும்பிலிருந்து சென்னை சென்னையிலிருந்து கொல்கொத்தா கொல்கொத்தாவிலிருந்து டாக்கா டாக்காவிலிருந்து காத்மண்டு காத்மண்டுவிலிருந்து டெல்லி டெல்லியிருந்து லாஹ{ர் அப்படியொரு பாதையில் ஒரு 150பேர் தெற்காசிய குடும்பமாக இரண்டுமாதங்கள் அவர்கள் யாத்திரைசெல்லவேண்டும் அது ஏன் பண்ணவேண்டும் என்றா ஒன்று நாம் எல்லாரும் சேர்ந்து எப்படி அமைதிக்காக பணியாற்றமுடியும் தெற்காசியாவில அமைதிவேண்டும் தெற்காசியாவில் நிறைய ஏழைகள் இருக்கின்றனர் தெற்காசியாவில் ப+கோளமயமாக்கல் என்றபோர்வையில் நிறைய தனியார் நிறுவனங்கள் வருகின்றன அவங்க நிலங்களையும் வளங்களையும் எடுக்கின்றனர் தெற்காசியாவில் அபிவிருத்தி எப்படிவரவேண்டும் என்பதை நாம் மீளவரையறைசெய்யவேண்டும் அபிவிருத்தி என்பது கொஞ்சப்பேர் நிறைய சம்பாதிப்பதாக இருக்ககூடாது கொஞ்சபேர் நிறைய சம்பாதிக்கின்ற அபிவிருத்தியையல்ல நாம் வேண்டுவது டாட்டா பில்லா ஜித்தல் மிட்டல் அல்ல நிறையபேர் ஏழைகளாக சேரிகளிலும் கிராமங்களிலும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் மகாத்மா காந்தி என்ன சொன்னார் என்றால் அபிவிருத்தி என்ற அனைவருக்கும் வேலைகிடைக்கவேண்டும் எல்லாரும் நிம்மதியா சந்தோஷமா வாழவேண்டும் அதுதான் அபிவிருத்தி எல்லாரும் நிம்மதியாக சந்தோஷமா இருந்தால் தான் அதனை அபிவிருத்தி என்று கூறமுடியும் அபிவிருத்தியை மீள்வரையறைசெய்வதற்கே இந்த யாத்திரை அப்ப ஒரு 150பேர் போய் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களைச்சந்தித்து இதைப்பற்றிபேசவேண்டும் ஒரு நல்ல தெற்காசியாவை எப்படி அபிவிருத்திசெய்யமுடியும் அதைப்பற்றி அரசாங்கத்துடன் உட்கார்ந்து எப்படி பேசமுடியும் கிராமத்திலிருந்து மேல்மட்டம்வரை நிறைய பணிகள் இருக்கு அதற்காக தெற்காசிய சமாதானக்கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் இலங்கையர்கள் இலங்கைப்பற்றியும் பாகிஸ்தான் இந்திய நாட்டவர்கள் அவரவர் நாடுகளைப்பற்றியும் நினைப்பதற்குமேல எல்லாரும் சேர்ந்து தெற்காசியாவைப்பற்றி நினைப்போம் இந்தியாவில இருந்து இலங்கைக்கு வருவதோ பாகிஸ்தானில் இருந்து இந்தியாவருவதோ தெற்காசியநாடுகளிலிருந்து சக நாடுகளுக்கு செல்லது கடினமாக இருக்கின்றது தெற்காசியா ஒரே கலாசாரத்தைக்கொண்டது கிட்டத்தட்ட ஒரே வரலாற்றைக்கொண்டது இதற்கிடையே நிறைய நகர்வுகள் இடம்பெறவேண்டும் பெரியவர்கள் கழுத்துப்பட்டி அணிந்தவர்கள் மட்டுமல்ல ஏழை எளியவர்கள் கூட போக்குவரத்துநகர்வுகளை மேற்கொள்ளத்தக்க நிலைவரவேண்டும் ஐரோப்பாவில் அதுதான் நடக்குது இருபதிற்கு மேற்பட்ட நாடுகள் ஒன்றாகி ஐரோப்பிய ஒன்றியத்தை அமைத்தன இதனால் பிரஞ்சுகாரர்கள் இத்தாலிபோறாங்க ஜேர்மனியில் உள்ளவங்க இங்கிலாந்துபோகலாம் அப்படி நாடுகளுக்கிடையே நகர்வுகள் எளிதாகிற்று கட்டுப்பாடுகள் நீங்கிப்போயிற்று ப+கோளமயமாக்கலின் விளைவாக உலகமெல்லாம் ஒன்றாக வரும் என்று சொல்லுறாங்க அப்படி இருக்கையில் தெற்காசியாவிலேனும் மக்கள் சுதந்திரமாக நகர்வுகளை மேற்கொள்ளமுடியவில்லை என்ற அது ரொம்ப கஸ்டமானது விஸா கிடைக்கிறத்திற்கு இரண்டு மாதம் அப்ப எப்படிப்போக முடியும் நாடுகளிடையே அதிக நடமாட்டம் வரவேண்டுமானால் அதற்கான சூழ்நிலை ஏற்படவேண்டும் சந்தேகம் குறைந்தால் தான் மக்கள் நகர்வுகளை மேற்கொள்ளமுடியும் சந்தேகம் இல்லாமல் மதிப்பும் அன்பும் வந்தால் தான் தெற்காசியா நல்ல தெற்காசியாவாக மாறமுடியும் அது தான் தெற்காசிய சமாதானக்கூட்டமைப்பின் விரும்பம் ஒருநிம்மதியும் வேணும் நீதியும் வேணும் அதற்கு எப்படி வேலைபண்ணமுடியும் அதில நிறையப்பேரைசேர்க்க வேண்டியிருக்கு அந்தவேலையில டொக்டர்கள் வேணும் ஊடகவியலாளர்கள் வேணும் வழக்கறிஞர்கள் வேணும் எல்லாரும் சேர்ந்து எப்படி நல்ல தெற்காசியாவை உருவாக்க முடியும் இதுவே தெற்காசிய சமாதானக்கூட்டமைப்பின் முக்கியமான நோக்கமாகும்.
இலங்கைப்பிரச்சனையில் இந்தியாவின் பங்கு எத்தகையதாக இருக்கவேண்டும் என நீங்கள் எண்ணுகின்றீர்கள் ?
பிராந்தியத்தில் பலம்வாயந்த நாடு என்றவகையில் இநதியா அதன் தனிப்பட்ட நலனைமாத்திரம் கருத்திற்கொண்டு காய்களை நகர்த்தாது பொதுநலனைக்கருத்திற்கொண்டு செயற்படவேண்டும் பொருளாதார நலனைமாத்திரமே கருத்திற்கொண்டு இழைத்த தவறுகளின் விளைவை இந்தியா அனுபவித்துள்ளது ராஜீவ் காந்தியின் மரணம் கூட இந்தியா இழைத்த தவறுகளின் விளைவுதானே போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு உதவியளித்த இந்தியா அதனை முடித்துவைக்கவும் உதவியளிக்கவேண்டும் இந்த யுத்தங்கள் எல்லாம் ஆயுதவியாபாரிகளின் தேவைகளுக்காகவே நீடித்து செல்லப்படுகின்றது இந்தியா இலங்கையில் என்னநடக்கின்றது என்பதை உண்மையில் புரிந்துகொண்டுள்ளதா என்பது எனக்கு விளங்கவில்லை நாடுகள் பிளவுபட்டு சிறிய நாடுகள் உதயமாவதனூடாக உதாரணத்திற்கு இலங்கை இருநாடாகவோ அன்றேல் இந்தியா 20நாடுகளாகவோ பிளவுபடுவதனூடாக பிரச்சனைகளுக்கு தீர்வுகாணமுடியாது இறுதியாக கிராமங்களுக்கு அதிகபட்ட அதிகாரங்களை அதாவது வளப்பங்கீடு மற்றும் தீர்;மானமெடுத்தலுகான அதிகாரங்கள் வழங்கப்படுவதே நடைமுறையில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்;வாக அமையமுடியும் இந்தியாவின் பஞ்சாயத் ராஜ் முறைமையும் இதை அடியொற்றியதே ஆனால் அதன் உண்மையான எதிர்பார்ப்புக்கள் எட்டப்பட்டதா என்பது கேள்விக்குரியதே கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுமாக இருந்தால் அதனால் பயன் இருக்கமுடியாது மாறாக கிராமங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் கிராமங்களில் வேலைவாய்ப்பை ஏற்படு;த்த விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க கலை கலாசாரத்தை வளர்ப்பதற்கு அதிகாரங்கள் இருக்கவேண்டும் காஷ்மீரில் பிரச்சனை இருக்கையில் எப்படி இலங்கையில் தலையிடமுடியும் என்ற தர்மசங்கடம் இந்தியாவிற்கு இருக்கமுடியும் உங்கள் நாட்டிலேயே பிரச்சனையை வைத்துக்கொண்டு இங்கு ஏன் மூக்கைநுழைக்கின்றீர்கள் என இலங்கை அரசாங்கம் கேள்விஎழுப்புக்கூடும் என இந்தியா எண்ணக்கூடும் காஷ்மீர் பிரச்சனையைத்தீர்த்து வைத்து தலைமைத்துவத்தை இந்தியா வழங்கக்கூடும் தலைமைத்துவத்தை வழங்குவதே இந்த தருணத்தில் முக்கியமானது யுத்தத்தைச்செய்வதற்கன்றி சமாதானத்தைக்காண்பதற்கே தலைமைத்துவம் வழங்கப்படவேண்டும் மகாத்மா காந்தியை ஏன் வரலாறு போற்றிப்புகழ்ந்து நினைவுகொள்கின்றது ஹிட்லரை ஏன் அவ்வாறு நினைவுகொள்ளவில்லை எதிரியுடன் சமாதான வழியில் செல்பவரையே வரலாறு நினைவுகொள்ளும் இந்தியா செய்யவேண்டியதெல்லாம் தலைமைத்துவத்தை வழங்குவதே தமது பிரச்சனைகளைத்தீர்த்து தலைமைத்துவம் கொடுக்கவேண்டும் இந்தியா சாதகமான பங்களிப்பை வழங்குகின்ற விடயத்தில் அதன் ஊடகங்கள் ஆக்கப+ர்வமான பங்களிப்பை வழங்கமுடியும் காஷ்மீர்பிரச்சனையாக இருக்கட்டும் இலங்கைப்பிரச்சனையாக இருக்கட்டும் அங்கு தீர்வை ஏற்படுத்துவதற்காக இந்திய அரசாங்கம் சாதகமான பங்கை வகிக்கத்தக்கவகையில் இந்தியாவின் புத்திஜீவிகள் சமூகமானது அழுத்தங்களைக்கொடுக்கவேண்டும் முதலில் கருத்துருவாக்கம் வரவேண்டும் அப்படி வரும்போதே அரசாங்கம் ஏதேனும் பண்ணும் அந்த கருத்துருவாக்கத்தை கட்டியெழுப்புவதே எமது வேலை சார்க் அமைப்பு வெறுமனே வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக மாத்திரம் அதன் பணிகளை மட்டுப்படுத்தக்கூடாது அப்படி வர்த்தகநலனைகளே நோக்காக இருந்தால் அது பொறுப்பு வாய்ந்த சார்க் அமைப்பாக இருக்கமுடியாது யுத்தங்களை முடிவிற்கு கொண்டுவந்து சமாதானத்தைகாண்பதிலும் சார்க் அதன் பங்கை ஆற்றவேண்டும் யுத்தம் இல்லாமல் சமாதானம் நிலவினால் அனைத்திற்கும் அது நன்மைபயக்கும் வர்த்தகத்திற்கும் அது துணைசெய்யும் சமாதானம் நிலவினால் யுத்தற்காக செலவிடும் பெருந்தொகைப்பணத்தை அபிவிருத்திப்பணிகளில் முதலிடமுடியும் அப்படி அபிவிருத்தி நிகழுமிடத்து அதிலீடுபடும் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அது நல்லதுதானே அவர்கள் தேர்தல்களில் வெற்றிபெறமுடியும் அந்தவகையில் தனிப்பட்ட நலன்களுக்கும் இது நல்லது தெற்காசியப்பிராந்தியத்தில் சமாதானம் நிலவினால் பொருளாதாரவளர்ச்சிக்கும் வர்த்தக முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் அரசியலுக்கும் அது நன்மை பயக்கும் யுத்தம் என்பது அனேகநேரங்களில் அதனால் பணம்பண்ணும் தரப்பினரின் தேவைக்காகவே நடத்தப்படுகின்றது யுத்தமே ஒரு வர்த்தகம் தான் நிறையப்பேர் இதனால் சம்பாதிக்கின்றனர் யுத்தம் முடிந்தால் வர்த்தகமும் முடிந்துவிடும் என்றபடியால் அவர்கள் அதனைத்;தொடர்ந்தும் முன்னெடுக்கவே வழிசெய்கின்றனர் தற்போது யுத்தம் தீவரமடைந்துள்ள நிலையில் யதார்த்த ரீதியில் சமாதானத்தை கொண்டுவரமுடியுமா? நாங்கள் நினைக்கிறது யதார்த்தமானது தான் நான் பலவருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் மத்தியபிரதேசத்தில் சம்பல்காட்டில் பணியாற்றச்சென்றபோது என்னதம்பி சின்ன வயசுல இதெல்லாம் பண்ண முடியுமா என்றும் இது நடக்காத காரியம் சும்மா நேரத்தை வீணடிக்காதே என்று கூறினாங்க எனினும் இரண்டு மூன்று வருடம் பணியாற்றியபின்னர் சுமார் ஆயிரம் கொள்ளைக்காரங்க தமது ஆயுதங்கள் சகிதமாக காந்தியின் படத்திற்கு முன்னால் போட்டபோது தான் உன்னால பண்ணமுடியும் என்று ஒத்துக்கொண்டாங்க செய்தா எதுவும் முடியும் யுத்தம் மனிதனின் மனதில் தான் உதயமாகிறது என்று ஆங்கில பொன்மொழியுண்டு அந்த வகையில் மனிதனின் மனதிலேயே யுத்தம் முடிவிற்கு வருகின்றது யுத்தம் தொடங்கிறதும் மனதில் தான் முடியுறதும் மனதில் தான் மனிதில் மாறுதல் வந்தால் அனைத்து மாற்றமும் வரமுடியும் அதற்கு மனதில் புதிய கனவு வரவேண்டும் நிறையபேருக்கு நீதிக்காக போராடவேண்டும் என்ற கனவிருக்கு போராடி நீதியைப்பெறவேண்டும் என்று நினைக்கின்றார்கள் காந்தி பண்ணின மாதிரி நிறையபேருக்கு வன்முறையற்ற விதத்தில் போராடும் நுட்பங்கள் தெரியுமிடத்து பிரித்தானியர்களுக்கு எதிராக போராடவேண்டும் அதை வன்முறையற்றவகையில் போராடவேண்டும் என்று காந்தி கூறினார் பிரித்தானியருக்கெதிராக வன்முறையற்ற ரீதியில் போராடுவதாக இருந்தால் அவர்களிடம் எம்மைவிட அதிகமான ஆயுதங்கள் இருந்தன அந்த வகையில் நாம் வன்முறையற்ற அஹிம்ஸை போராட்டத்தை முன்னெடுத்ததாலே அவர்கள வெற்றிகொள்ளமுடிந்தது அதேமாதிரி நான் என்ன நினைக்கின்றேன் என்றா தெற்காசியாவில் வன்முறையற்ற அஹிம்ஸைக்கலாசாரம் வந்தால் தான் நின்று நிலைக்ககூடிய சமாதானம் வரும் நான் நினைக்கிறன் முடியும் நிறையப்பேரை பயிற்றுவித்து இளைஞர்படையணியைத்தயார்ப்படுத்த வேண்டும் ஆம் வன்முறையற்ற இளைஞர் படையணியை அதாவது சமாதான படையணியைத்தயார் பண்ணவேண்டும் தெற்காசியாவில் வன்முறையற்ற படையணியை தயார் பண்ணினால்தான் இதுமுடியும் இப்ப கஷ்டம் இருக்கலாம் விரக்தியிருக்கலாம் ஆனால் நிறையப்பேர் முன்வந்து முயற்சியெடுத்தால் சாத்தியமாகும் தெற்காசிய சமாதானக்கூட்டமைப்பு ஆரம்பித்தமைக்கும் இதுவேகாரணமாகும்
அஹிம்ஸை என்பது ஒரு ஆயுதமே அதனைக்கையாளத்தெரியாதவர்களே வன்முறை வழியில் செல்கின்றனர் வன்முறையற்ற போராட்டம் அதாவது அஹிம்ஸைப்போராட்டம் தற்போதைய காலகட்டத்திற்கு சாத்தியமானதா ? அதிலும் இலங்கை இனப்பிரச்சனைக்கு வன்முறையற்ற தீர்வு சாத்தியமாகும் என நம்பிக்கை கொண்டுள்ளீர்களா ?
பிரச்சனையை அமர்ந்து பேசி தீர்வுகானமுடியாதநிலையிலேயே
ஆயுதப்போராட்டம் ஆரம்பித்தது நீண்ட நாள் ஆயுதப்போராட்டத்திற்கு பின்னர் அரசாங்கமும் களைத்துப்போய்விட்டது விடுதலைப்புலிகளும் களைத்துப்போய்விட்டனர் என்று நான் நினைக்கின்றேன் எவ்வளவுபோராடமுடியும் எவ்வளவு வருடம் போராடமுடியும் இதற்கு நிறையப்பணம் வேண்டும் நிறையவளங்கள் வேண்டும் நிறையப்பேர் உயிர்களைத்தியாகம் செய்யவேண்டும் இந்த தியாகங்களெல்லாம் இறுதியில் எதற்காக நிம்மதியாக வாழ்கின்றதற்காகத்தான் சுகமாக வாழ்கின்றதற்காகத்தான் எல்லாத்தியாகங்களையும் புரிகின்றனர் அடுத்தசந்ததியினர் சந்தோஷமாக வாழணும் என்பதற்காகவே உயிரையே தியாகம் செய்கின்றனர் நீண்டகாலம் போராட்டம் நடைபெற்ற நிலையில் தற்போது அமர்ந்து பேசவேண்டும் நாங்கள் பேசமாட்டோம் என்ற நிலைப்பாட்டை எடுக்ககூடாது போராட்டம் என்பது பேச்சுவார்த்தைக்கு இட்டுச்செல்வதற்காகவே ஏனெனில் இறுதியாக பிரச்சனைகள் பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்க்கப்படமுடியும் போராட்டம் மூலம் அழுத்தங்களைக்கொடுக்கவேண்டும் பின்னர் அமர்ந்து பேச வேண்டும் அப்புறம் அழுத்தம் கொடுக்கவேண்டும் அமர்ந்து பேச வேண்டும் பேசமாட்டோம் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தால் தியாகம் தியாகம் தியாகம் இப்படி நிறையப்பேரைத்தியாகம் செய்யவேண்டியேற்படும் அந்த நிலையில் வாழ்வதற்கு நேரம் இல்லாமல் போகும் அல்லவா அதனால் தான் போராட்டத்தின் இறுதியில் உட்கார்ந்துபேசி தீர்வுகாணவேண்டும் எனநான் நினைக்கின்றேன் போராட்டத்திற்கு பின்னர் அமர்ந்து பேச்சுவர்த்தை நடத்தி பிரச்சனைகளுக்கு தீர்வுகண்ட நிறைய உதாரணங்கள் உள்ளன வன்முறையான போராட்டமானாலும் வன்முறையற்ற போராட்டமானாலும் ஈற்றில் எமக்கு எது தேவையென்றால் எமது எதிர்கால சந்ததியினருக்காக நிம்மதியான வாழ்க்கையேயாகும் அநீதிகளுக்கு எதிராக போராடுகின்றதற்கு மட்டுமல்ல அந்த போராட்டத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகண்டு அடுத்த தலைமுறைக்கு நிம்மதியாக வாழ்க்கையைக்கொடுக்கின்ற பொறுப்பும் போராடுபவர்களுக்கு உள்ளது இருதரப்பினரும் அமர்ந்து பேசி பிரச்சனைக்கு தீர்வுகாண்பதற்கான காலம் தற்போது கனிந்துள்ளதென நான் நினைக்கின்றேன்
+
No comments:
Post a Comment